சாம்பாருமில்லை...!!!
குழம்புமில்லை...!!!
முள்ளங்கி சுவைக் குழம்பு...!!! ???
அட இது என்ன புதுக்கதையாவுல்ல இருக்கு...???
கதை அப்படின்னா சுவை தானே...ஹிஹிஹி...
நகைச்சுவை... சிரித்துக்கிட்டே போகலாம் உள்ளே...
தேவையான பொருட்கள்
முள்ளங்கி - 2
வெங்காயம் - 1
பூண்டு - 10
தக்காளி - 1
புளி - எலுமிச்சை
து பருப்பு - 2 மே.க ( மஞ்சள் தூள் + 1/4 தே.க வெந்தம் சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும்)
உப்பு - ருசிக்கு
சாம்பார் பொடி - 1 1/2 தே.க
மிளகு சீரகப் பொடி - 1/2 தே.க
வெல்லம் - சிறிது
தாளிக்க வேண்டியது
நல்லெண்ணெய் - 5 மே.க
கடுகு - 1/4 தே.க
க.பருப்பு - 1/2 தே.க
சோம்பு - 1/2 தே.க
பெருங்காயம் - சிறிது
தாளிக்கவும்
வெங்காயம் , பூண்டு சேர்த்து வதக்கவும்.
முள்ளங்கி, தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். பச்சை வாசம் போகும் அப்போது தான்.
சாம்பார் பொடி + மி.சீ பொடி சேர்த்து
எண்ணெய்யில் வதக்கவும்.
புளிக்கரைசல் விட்டு உப்பு போடவும்.
குக்கரில் 1 விசில் விட்டு வேக விடவும்.
வெந்தபின் பருப்பை சேர்க்கவும். கொதிக்கவும் வெல்லம் சேர்த்து இறக்கவும்.
அப்பாடா..சுவையோ...சுவை... குழம்பு சும்மா ஜம்முன்னு இருக்கு..... நீங்களும் செய்து சாப்பிட்டுப்பாருங்கள்.
முள்ளங்கி சில பேருக்கு பிடிக்காது....அவுங்களும் இதை ருசித்தா விடமாட்டார்கள்.
ok ok... வரட்டா....
குழம்புமில்லை...!!!
முள்ளங்கி சுவைக் குழம்பு...!!! ???
அட இது என்ன புதுக்கதையாவுல்ல இருக்கு...???
கதை அப்படின்னா சுவை தானே...ஹிஹிஹி...
நகைச்சுவை... சிரித்துக்கிட்டே போகலாம் உள்ளே...
தேவையான பொருட்கள்
முள்ளங்கி - 2
வெங்காயம் - 1
பூண்டு - 10
தக்காளி - 1
புளி - எலுமிச்சை
து பருப்பு - 2 மே.க ( மஞ்சள் தூள் + 1/4 தே.க வெந்தம் சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும்)
உப்பு - ருசிக்கு
சாம்பார் பொடி - 1 1/2 தே.க
மிளகு சீரகப் பொடி - 1/2 தே.க
வெல்லம் - சிறிது
தாளிக்க வேண்டியது
நல்லெண்ணெய் - 5 மே.க
கடுகு - 1/4 தே.க
க.பருப்பு - 1/2 தே.க
சோம்பு - 1/2 தே.க
பெருங்காயம் - சிறிது
தாளிக்கவும்
வெங்காயம் , பூண்டு சேர்த்து வதக்கவும்.
முள்ளங்கி, தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். பச்சை வாசம் போகும் அப்போது தான்.
சாம்பார் பொடி + மி.சீ பொடி சேர்த்து
எண்ணெய்யில் வதக்கவும்.
புளிக்கரைசல் விட்டு உப்பு போடவும்.
குக்கரில் 1 விசில் விட்டு வேக விடவும்.
வெந்தபின் பருப்பை சேர்க்கவும். கொதிக்கவும் வெல்லம் சேர்த்து இறக்கவும்.
அப்பாடா..சுவையோ...சுவை... குழம்பு சும்மா ஜம்முன்னு இருக்கு..... நீங்களும் செய்து சாப்பிட்டுப்பாருங்கள்.
முள்ளங்கி சில பேருக்கு பிடிக்காது....அவுங்களும் இதை ருசித்தா விடமாட்டார்கள்.
ok ok... வரட்டா....
உங்கள் பெயரைப் பார்த்ததும் காரைக்குடி பக்கம் என்று தெரிந்து கொண்டேன். வீட்டில் உங்கள் தளத்தை அறிமுகம் செய்து வைக்க தொடர்ச்சியாக படித்துக் கொண்டு வருகின்றார்.
ReplyDeleteசரியாக பெயரை கணித்து இருக்கிறீர்கள் சகோ. தேவகோட்டை. சகோதரி படித்துக் கொண்டு வருகிறார்களா...மிக்க மகிழ்ச்சி.நன்றி.
Deleteமுள்ளங்கி சாம்பார் கேள்விப்பட்டிருக்கேன் - இதென்ன புதசா இருக்கு!!
ReplyDeleteஇது சற்று வித்தியாசமாக இருக்கும் சகோ. நன்றி
Deleteநீங்கள் செய்து வைத்திருக்கும் அழகே குழம்பை செய்துபார்க்கனும்னு ஆசையா இருக்கு. சூப்பர்..
ReplyDeleteரசனைக்கு நன்றி சகோ.
Deleteபேரிலேயே சுவை குழம்பு என்று இருக்கே!
ReplyDeleteசுவைக்குழம்பை செய்து பார்த்து விடுகிறேன் உமையாள்.
ஆஹா...செய்து பார்த்து விட்டுச் சொல்லுங்கள் சகோ.
Deleteவீட்டில் முள்ளங்கி இருக்கிறது... இன்றே செய்து பார்க்கிறோம்... நன்றி...
ReplyDeleteஆஹா...இன்றேவா ...சரி சகோ நாளை சொல்லுங்கள் எப்படி இருந்தது என்று...நன்றி
Deleteமுள்ளங்கி சாம்பார் - சரி.. தெரியும்!..
ReplyDeleteமுள்ளங்கி சுவை குழம்பு!.. இதுவரை கேள்விப்பட்டது கூட இல்லை. புதுமைதான்..
சுவைதான்.
ReplyDeleteஆனால் சாம்பாரில் பூண்டு நாங்கள் சேர்ப்பதில்லை. ஒரு முறை இப்படியும் முயற்சிப்போம்!
முள்ளங்கி சுவைக்குழம்பு. லிஸ்டில் சேர்த்தாச்சு. புதுவருடத்தின் பின்புதான் நேரமே கூடிவரும். அட்வான்ஸ் நத்தார்,புதுவருட வாழ்த்துக்கள் உமையாள்.
ReplyDeleteசுவை..... அருமை.
ReplyDeleteஹை ...முள்ளங்கி சாம்பார் செய்வதுண்டுதான்....பூண்டும் சேர்ப்பதுண்டு...ஆனஅல் மிளகு சீரகப் பொடியும் வெல்லமும் சேர்த்தது இல்லை...செய்து பார்த்துட்டாப் போச்சு! கம கம வாசம் வருதே!!...
ReplyDeleteநித்தம் நித்தம் இனி முள்ளங்கி குழம்பின் வாசம் எங்கள் இல்லத்தின் சமையல் அறையிலும்
ReplyDeleteவீசும்!
நன்றி
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.fr