பஜனைப்பாடல் கேட்கிறது
கால்கள் ஏனோ நிற்கவில்லை
உடலும் மனமும் ஒன்றாகி
உன்நினைவில் அது ஆடுது
சுற்றித்திரியும் கண்களதை
சுடர்கொடி ஏனோ காணவில்லை
ஆனந்தம் பொங்கிடவே
அவள்தானே ஆடினாளே ( பஜனை )
ஆட்டமும் பாட்டும் இணைந்திடவே
உள்ளமும் உடலும் இணைந்ததம்மா
உயிறொன்று வந்து கலந்ததுவே
இன்பச்சுவையது பொங்கிடவே ( பஜனை )
ராமாகிருஷ்ணா என்றிடவே
ரங்கன் நினைவு வந்ததுவே
உடல்தேர் களைந்து ஓடிடவே
உயிரது தெரியாமல் விழிக்குதம்மா ( பஜனை )
படம் கூகுள் நன்றி
மீண்டும் வந்தாய் கண்ணா கானம் தந்தாய் கண்ணா நன்றி
பஜனை அருமை
ReplyDeleteதமிழ் மணம் 1
முதலாய் வந்து கருத்திட்டமைக்கு மகிழ்ச்சி சகோ.
Deleteதமவுக்கு நன்றி .
வணக்கம்
ReplyDeleteஇரசனையான பாடல்.. பகிர்வுக்கு நன்றி த.ம 2
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: பருவமாறிந்து பருவச்சிறகை விரித்தேன்.:
கவிதையாக என்பக்கம் வாருங்கள் அன்புடன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கவிதைப் பக்கம் வந்தேன் கருத்திட்டேன் சகோ. நன்றி
Deleteமார்கழியின் பஜனை அருமை!
ReplyDeleteநன்றி சகோ
Deleteஉடல்தேர் களைந்து ஓடிடவே
ReplyDeleteஉயிரது தெரியாமல் விழிக்குதம்மா // பஜனை பாடல் சூப்பர்.
நன்றி சகோ
Deleteபஜனைப் பாடல் எங்களுக்கும் கேட்கிறதே.
ReplyDeleteஅந்த படம் அருமை.
ஆஹா....கேட்கிறதா...நன்றி சகோ
Deleteரஸித்தேன்.
ReplyDeleteரசனைக்கு வந்தனம்.
Deleteமார்கழிக்குரிய சிறப்புக் கவிதை
ReplyDeleteமிக மிக அருமை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
நன்றி ஐயா
Deleteரசித்தேன்...
ReplyDeleteரசனைக்கு நன்றி சகோ
Deleteஆட்டமும் பாட்டும் இணைந்திடவே
ReplyDeleteஉள்ளமும் உடலும் இணைந்ததம்மா
களிப்பூட்டும் அடிகள் அம்மா. நன்றி.
வாருங்கள், வாருங்கள்.
Deleteகருத்திற்கும் வரவுக்கும் நன்றி சகோ
அன்பு சகோதரி!
ReplyDeleteதுயிலெழக் கண்ணனை
கூவும் குயிலென பாடியுள்ளீர்கள்!
மயில் போன்று நடனமிடும் வரிகள்
அயல் நாட்டில் உள்ள எங்களையும்
அசைக்குதம்மா!
நன்றியுடன்,
புதுவை வேலு
(எனது இன்றைய பதிவு "நாராய்! இளந் நாராய்" கவிதையை நோக்கி வாராய் வாராய்!)
உடலும் மனமும் ஒன்றாகி
ReplyDeleteஉன்நினைவில் அது ஆடுது!..
சர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம்..
வணக்கம் சகோதரி!
ReplyDeleteபஜனைப் பாடல் அதுவும் மார்கழி மாதத்தில்.பரந்தாமனின் பாமாலை. பக்தியுடன் பரவசமானேன் சகோதரி..!
கண்ணனின் அருள் உங்களுக்கு பரிபூரணமாக உள்ளது. வாழ்த்துக்கள் சகோதரி.!
எங்களுடனும் பரிமாறிக் கொண்டமைக்கு நன்றிகள்.
நட்புடன்,
கமலா ஹரிஹரன்.
பாடல அருமை பாடி பார்த்தேன் நன்றி.
ReplyDelete