தாயின் மடியில்லை
தாய்வீடு அழைக்கிறது...
அமைதியான இல்லமாகி விட்டது...
ஆர்பாட்டம், ஆரவாரமில்லை
ஆ...வென நடுவாசல்...
ஆகாயம் பார்த்து கிடக்கிறது...
நினைவலைகளை மேலே
தேடுகிறதோ...?
பெரியதூண்களை கட்டிக்கொள்ள முடியாத
பிஞ்சுக் கைகள் நெஞ்சுக்குள்...
ஆ..வென பயந்து தாண்டிய ஹால்...
கருமையாய்...பீரோல்களின் அணிவகுப்பு
சுத்துப்பத்தியும்...
சுற்றி நிற்கும் கற்தூண்களும்
மைதானம்போல் நடுவாசல்...
நியாபகப் படுத்துது
கல்லாமண்ணா ஆடியதை...
பள்ளி விட்டுவந்து...
வானம் பார்த்து தூண் சாய்ந்து
வீட்டுப்பாடம் படித்த இடம்
விட்டுப்போனாயே நலமா என்பது போல் இருக்கிறது
கைகளின் தடவலில் அதற்கு
பதிலுரைத்தேன்...
அமர்ந்து பார்த்தேன் வானத்தை...
அதே நட்சத்திரமும்
எனக்கு கண்சிமிட்டின...
பழைய வயது வந்திடாதோ தவிப்பு..
பாட்டுக் கேட்ட ரேடியோ
அலைகளின் அதிர்வுகள்...
சிலோன் ரேடியோ...
பாலசுப்ரமணியன், ஜானகியின் டூயட்...
அப்பத்தா, பெரியத்தா, சித்தியென
வளவில் வலம் வந்தோம் சிறார் கூட்டம்
இரவில் நிலாச் சோறு
அண்ணன், அக்காவென..
பெரியப்பா, சித்தப்பாமக்கள் ஒன்று கூடி
உண்டோம்...வட்டமாய் நடுவாசலில்..
இன்று
ஆட்களைக் காணோம்...
ஒருவர் இருவரென...
அவ்வப்போது வந்து போகும்
வசந்தமண்டமாய் இப்போது
பெரியவர் தனிமை உணரவில்லை
வயது ஒத்த மக்கள்
வாயார பேசினர்...
ஆதரவாய் அணைத்துக் கொண்டனர்
காய்ச்சல் கஞ்சி...
தம் வீட்டு விருந்து பரிமாறிக் கொண்டனர்
அவரவர் சுற்றம் வர
வருகை களிப்பு...
வசந்தமாய் அனைவருக்கும்.
மூலைக் கொருவராய்
முனங்கள்கள்....இப்போது
பார்க்க முடியவில்லை...
பகிர முடியவில்லை...
பொருளீட்டல் மட்டும் !! அது முன்னேற்றமா.. பின்னேற்றமா!!
தெரியவில்லை .. ஓடுகிறோம் ஓடுகிறோம்...
தெரியவில்லை .. ஓடுகிறோம் ஓடுகிறோம்...
இளைப்பாற சுவை நினைவுகள் நமக்கு
ஆனால்...
நம் வாரிசுகளுக்கு...???
மடி நிறைந்தாலும் பாழாய்ப் போன
ReplyDeleteமனம் மட்டும் நிறையவேயில்லை!..
அது நிறைவதே இல்லை!..
அதுவரைக்கும் -
பழைய நினைவுகளை அசை போடும் -
பனை மரத்து நிழலில் பசுமாடு போல!..
ஆம் ஐயா தங்கள் கருத்திற்கு நன்றி
Deleteதாய் வீடு அழைக்கிறது - சரி, ஊருக்கு போகப்போகிறீர்கள் என்று சொல்லுங்கள்.
ReplyDeleteதங்களின் அம்மா வீடு தானே அது?
கவிதை அருமை.
"//அவ்வப்போது வந்து போகும்
வந்தமண்டமாய் இப்போது//"
வசந்த மண்டமாய் இருக்க வேண்டுமா - எனக்கு சரியாகத் தெரியவில்லை. எழுத்துப்பிழையாக இருந்தால் திருத்திக்கொள்ளுங்கள் சகோ.
ஆம் சகோ
Deleteஅம்மா வீடு தான்
வசந்த மண்டபம்...தான் சரி செய்து விட்டேன். நன்றி
இனிமையான நினைவலைகள்.
ReplyDeleteநினைவு....இனிமை...தான் நன்றி சகோ
Deleteசில சமயங்களில் சிலர் விலகி இருத்தலும் ஆரோக்கியம். வருந்தி ஆவது ஒன்றுமில்லை.
ReplyDeleteமனதில் சுமை தாங்கிய பதிவு உங்கள் புகைப்படத்திலும் மின்னுகிறது சகோதரி. நன்றி.
சில சமயங்களில் சிலர் விலகி இருத்தலும் ஆரோக்கியம்.//
Deleteஆம்
வருந்தி ஆவது ஒன்றுமில்லை.
மனதில் சுமை தாங்கிய பதிவு//
ஆம் சகோ நன்றி
‘’ பொருளீட்டல் மட்டும் !! அது முன்னேற்றமா.. பின்னேற்றமா!!
ReplyDeleteதெரியவில்லை .. ஓடுகிறோம் ஓடுகிறோம்...’’
திரை கடல் ஓடியும் திரவியம் தேடு என்றார்கள் நம் முன்னோர்கள். ஆனால் திரைகடல் ஓடி தங்கிவிடு என சொல்லவில்லை. அப்படி செய்திருந்தால் அண்ணாமலை அரசர் போன்ற கொடை வள்ளல்கள் இங்கே ஒரு பல்கலைக் கழகத்தைக் கண்டிருக்கமுடியுமா? எனவே பொருளீட்டல் முக்கியம்தான் அதே நேரத்தில் சொந்த பந்தங்களோடு வாழ்வதும் முக்கியமில்லையா சகோதரி அவர்களே!
பொருளீட்டல் முக்கியம்தான் அதே நேரத்தில் சொந்த பந்தங்களோடு வாழ்வதும் முக்கியமில்லையா சகோதரி அவர்களே! //
Deleteமுக்கியம் தான் ஐயா.. நன்றி.
ஏக்கமொடு ஒலித்த இனிய நினைவுப் பாடல்!..
ReplyDeleteஎல்லோர் மனத்திலும் இருப்பதை அழகான கவிவரிகளால்
அள்ளித் தெளித்திட்டீர்கள்! அருமை!
வாழ்த்துக்கள் சகோதரி!
த ம.2
Deleteஎல்லோர் மனத்திலும் இருப்பதை // ஆம் உள்ளே உறைந்தது...
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ
வணக்கம்
ReplyDeleteஏக்கஉணர்வை வெளிப்படும் கவிதை நல்ல கற்பனைத்திறன் இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி
த.ம3
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வருகைக்கும் ரசனைக்கும் நன்றி சகோ
Deleteநித்தம் நித்தம்
ReplyDeleteநினைவலைகள்
நெஞ்சின் கரையை
தொட்டுவிட்டு போகுதம்மா!
சுற்றம் என்னும் மணலை
கையில்
அள்ளிக் கொள்ளத் தோணுதம்மா!
"தாயின் வீட்டை" நோக்கி
பறந்து செல்ல ...
கடவுச் சீட்டாய்(Vஈஸா)
அமைந்ததம்மா!-உனது
அருங்கவிதை!
அருமையென்பேன்
அடியேன் நான்!
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.fr
நல்ல கவிதையாய் கருத்து நவின்றதற்கு நன்றி சகோ
Delete
ReplyDeleteவணக்கம்!
"உப்பிட்டவரை உயிர் உள்ள வரை நினை" - இது பழமொழி
"உணவிட்ட விவசாயிகளுக்கு, வாழ்த்தும், நன்றியும் சொல்வதற்கு
"குழலின்னிசை"- வலைப் பூ பக்காமாய் வாருங்களேன்!
"இன்று விவசாயிகள் தினம்" (23/12/2014)
நன்றி!
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.fr
இதோ வருகிறேன் சகோ
Deleteஏக்கத்தின் கவிதையை படித்ததைவிட புகைப்படங்கள் எனக்கும் அந்த நினைவுகளை தேவகோட்டை கொண்டு சென்றது இது தங்களின் வீட்டு உட்புறங்களா தேவகோட்டையில் ? எல்லா வீடுகளுமே இப்படித்தானே...
ReplyDeleteத.ம. 4
ஆஹா...ஊருக்கு கூட்டிச் சென்றதா...
Deleteஆம் அம்மா...வீட்டின்..உட்புறம் தான்.
எல்லா வீடுகளுமே இப்படித்தானே...// ஆம் சின்ன சின்ன மாறுபாடுகள் கலை நயங்கள் வேறு பட்டு இருக்கும். நன்றி சகோ
பழைய நினைவுகளைத்தூண்டிவிட்டீர்கள். கண்கள் கலங்குகிறது. கூடிவாழ்ந்தால் கோடி நன்மை என்பதையே இப்போது மறந்துவிட்டார்கள். அதுவும் பிறந்தவீடு என்பது கூடுதல் சுகம்தான். வீடும் அழகான தோற்றம். எங்களையும் ஒருநாள் கூட்டிச்செல்லுங்கள்.
ReplyDeleteஎல்லோருடைய அடிமனதிலும் புதைந்த ஆசைகள்...
Deleteஎங்களையும் ஒருநாள் கூட்டிச்செல்லுங்கள்.//
கூட்டிச் செல்கிறேன் சகோ நன்றி
மகிழ்வை ஒளித்து மனதை தொலைத்து
ReplyDeleteஅகிலம் முழுவது மேபொருள் தேடியலைந்
தாலும்நோக் கம்நிறைவு றாசேர்க்கு மேஇனிமை
போலுமென எண்ணுவது பொய் !
நிறைவேறா ஆசைகளும் ஏக்கங்களும் இல்லையா .......நிறைவேறட்டும் தோழி தங்கள் ஆசைகள் .....
ஆஹா...வாருங்கள் சகோ நீ................ண்ட நாட்கள்டஆகிவிடதே...பணிச்சுமை.காரணமா..?.
Deleteஅழகான பாவாக எழுதி விட்டீர்கள்..நன்றி
அருமை... அருமை...
ReplyDeleteஆசை அளவு காண வேண்டும்...
இன்று :
ReplyDeletehttp://dindiguldhanabalan.blogspot.com/2014/12/Intellect-Part-1.html
இதோ வருகிறேன் சகோ
Deleteஉமையாள்,
ReplyDeleteபொருளீட்டியதுடன் வேரைத் தேடி வந்துவிட வேண்டும் என்றுதான் வருகிறோம். ஆனால் ........ ?
என்னுடைய மனச்சுமையை சொன்னமாதிரியே உள்ளது உங்களின் எழுத்துக்கள் !
என்னுடைய மனச்சுமையை சொன்னமாதிரியே உள்ளது உங்களின் எழுத்துக்கள் !//
Deleteபுதைத்தோம் மனதில்...
புதையலாய் நினைவுகளை
தோண்டல் சில நேரம்
வலிகள் மிகுந்திடும்...
நினைவு பொக்கிஷம்
நிறந்திடும் மனதில்...
கண்கள் சொல்லும் அதற்கு...
பன்னீர் துளிகளில்
கோடி நன்றிகள்...!!!
நன்றி சகோ
தேவகோட்டை செல்கிறீர்கள்...
ReplyDeleteஇனிமையான நினைவலைகள்... இப்போதைய நிலைக்கு மனச்சுமையை இறக்கி வைத்திருக்கிறீர்கள்...
yes...thank you.
Deleteஅழகிய கவி வடிவத்தில் ஏக்கத்தின் நினைவலைகள்! அருமை சகோதரி!
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் எங்கள் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!
அன்புடனும், நட்புடனும்
துளசிதரன், கீதா
thank you
DeleteHappy New Year...friends
வணக்கம் சகோதரி!
ReplyDeleteதாய் வீட்டு நினைவலைகளை, கவிதையாய் இனிமையுடன் நீங்கள் பகிர்ந்துள்ளது என் மனதிலும் அலைகளின் தாக்கத்தை உணர முடிகிறது.
\\ தாயின் மடியில்லை
தாய்வீடு அழைக்கிறது...
அமைதியான இல்லமாகி விட்டது...
ஆர்பாட்டம், ஆரவாரமில்லை//
இந்த வரிகளின் உண்மை இதயத்தை அழுத்துகிறது. தற்சமயம் எத்தனையோ ஆர்பாட்டங்களும், ஆரவாரங்களும் அங்கிருந்தாலும், அந்த நினைவலைகளை மட்டும் சுமந்து கொண்டிருக்கும் நமக்கு தாயுடன் களித்திருந்த அந்த காலங்கள் மீண்டும் வருமா? உணர்ந்த வரிகள்! அருமையான கவிதை சகோதரி!
தங்களுக்கும் தங்கள் உறவின் சுற்றத்திற்கும், என் இதயம் நிறைந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரி!
புத்தாண்டில் அனைவரும் அனைத்து வளங்களும் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்.
நட்புடன்,
கமலா ஹரிஹரன்.
Thank you
Deleteவாழ்க வளமுடன்
ReplyDeleteஇனிய 2015 புத்தாண்டு வாழ்த்துகள்
Thank you
Deleteஇனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சகோதரி...
ReplyDeleteThank you
Deleteமனம்நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்...
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் மனம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅன்புடனும், நட்புடனும்
துளசிதரன், கீதா
நிறை மங்கலம் நீடு புகழ் பெற்று நல்வாழ்வு வாழ இறைவன் நல்லருள் பொழிவானாக!..
ReplyDeleteஅன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!..
Thank you
Deleteதங்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
ReplyDeleteThank you
Deletewish you a happy new year 2015
ReplyDeleteThank you
Deleteஅழகான தாய் வீடு:) படித்த நேரமோ என்னவோ நானும் என் தாய் வீடு சென்று திரும்பினேன்:) புத்தாண்டு வாழ்த்துகள் தோழி!
ReplyDeleteOo...! Thank you
ReplyDelete