Thursday, 18 December 2014

மல்டி பொரியல்








தேவையான பொருட்கள்

பீன்ஸ் - 1 கோப்பை
கேரட் - 1 கோப்பை
குடமிளகாய் - 1 கோப்பை
தக்காளி - 1
பச்சைமிளகாய் - 3
பூண்டு - 12
ப்ரகோலி - 1/2 பூ
உப்பு - ருசிக்கு

தாளிக்க வேண்டியது

எண்ணெய் - 2 மே.க
கடுகு - 1/4 தே.க
க.பருப்பு - 1/2 தே.க
உ.பருப்பு - 1/2 தே.க
சோம்பு - 1/4 தே.க

                                               தாளிக்கவும்







பச்சை மிளகாய் + பூண்டு  சேர்த்து வதக்கவும்.











கேரட் சேர்த்து வதக்கவும்.










பீன்ஸ் சேர்த்து வதக்கவும்.






குடமிளகாய் + தக்காளி சேர்த்துவிட்டு


ப்ரகோலியையும் சேர்க்கவும்

உப்பு சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும்.




கொத்தமல்லி சேர்க்கவும்.



                                         ஆரோக்கியமான எளிதான மல்டி பொரியல்



17 comments:

  1. சுவையாகவும் சத்தானதாகவும் இருக்கும் போல! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  2. ஆ! மறுபடியும் ப்ரகோலி!

    சுவையாக இருக்கும் எனத் தெரிகிறது. ஆனால் இவ்வளவு காய்களையும் ஒரே நேரத்தில் போட்டு செலவு செய்ய மனம் வரணுமே.....

    :))))))))

    ReplyDelete
  3. வணக்கம் சகோதரி!

    அனைத்து காய்களும் கலந்த சத்துள்ள அற்புதமான பொரியல். பார்க்கும் போதே, உண்ணும் ஆசை வருகிறது. அருமையான படங்களுடன், செய்முறை விளக்கங்களும், சூப்பர்.
    பகிர்வுக்கு நன்றி சகோதரி!

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  4. வணக்கம்

    மிக எளிமையான செய்முறை விளக்கம் சுவையான உணவு பகிர்வுக்கு நன்றி த.ம 2

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

  5. இல்லத்து அரசியாக தொடர்ந்து பதிவியில் இருக்க ஆசையா?
    அல்லது
    இல்லத்து அரசராக தொடர்ந்து பதவியில் இருக்க ஆசையா?
    வாருங்கள் "மல்டி பொரியல்" செய்வது எப்படி?படத்துடன் கூடிய பாடத்தை படிப்போம்.மல்டி டேலண்ட் பெர்சன் என்று பெயரினை எடுப்போம்.
    அருமை!
    நன்றியுடன்,
    புதுவை வேலு
    (எனது இன்றைய பதிவு "நாராய்! இளந் நாராய்! கவிதையை கண்ணுற வாருங்கள்)

    ReplyDelete
  6. ஸூப்பர் மல்டி
    த,ம, 3

    ReplyDelete
  7. இவ்வளவு காய்களையும் போட்டு ஒரு பொரியலா!!!

    ReplyDelete
  8. கண்களில் ஒற்றிக் கொள்ளலாம்
    போலப் படங்கள்
    செய்முறை விளக்கம் அதைவிட அருமை
    பதார்த்தம் செய்வது எளிமையானதாயினும்
    சுவையான சத்துமிக்கதாக இருக்கும் எனத் தெரிகிறது
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
    (உங்கள் குடும்பத்தார் பாக்கியவான்கள் )

    ReplyDelete
  9. இப்படி கலர் கலராய் சாப்பிட்டால் நல்லதாம். ஒவ்வொரு வண்ணத்திலும் ஒரு சத்துப்பொருள் உண்டாம். இப்படி சாப்பிட்டால் ஆல் விட்டமின்ஸ் அண்ட் மினரல்ஸ் கிடச்சுடுமே.

    ReplyDelete
  10. சத்தான குறிப்பு... நன்றி...

    ReplyDelete
  11. மார்கழியில் தினமும் அருமையான பதிவுகளை வழங்கும்
    அன்புச் சகோதரிக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
  12. படங்களும் வழிகாட்டலும் நன்று
    தொடருங்கள்

    ReplyDelete
  13. மல்டிப்பொரியல் என்னோடு மல்லுக்கு நிற்கிறது.அதுதாங்க செய் என்று. செய்வேன் என்பது தெரியும்தானே.ஆனா இப்ப கொஞ்சம் பிஸி.சமையலும் அவசர சமையல். மன்னிக்க. நன்றி உமையாள்.

    ReplyDelete
  14. கலர்ஃபுல்! பகிருவுக்கு மிக்க நன்றி சகோதரி!

    ReplyDelete
  15. வண்ணமயமான சத்தான பதிவு :)

    ReplyDelete