Saturday, 15 November 2014

ஓட்ஸ் குழிப்பணியாரம்

ஒரு சத்தான குழிப்பணியாரம்.

இப்போ ஓட்ஸை நிறைய பயன் படுத்த ஆரம்பித்து விட்டார்கள்.

எளிய, விரைவாகவும் புது மாதிரியாகவும் சாப்பிடலாமா...?





தேவையான பொருட்கள்

ஓட்ஸ் - 1 கோப்பை
ரவை - 1/2 கோப்பை
அரிசி மாவு - 1/4 கோப்பை
கடலை மாவு - 2 மே.க

வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2 அ 3
உப்பு - தே.
எண்ணெய் - தே.அ
தேங்காய் துருவல் - 3 மே.க
கெட்டி மோர் - 1 1/2 டம்ளர்


தனித்தனியாக
ஓட்ஸை வறுத்துக் கொள்ளவும்.
ரவையை வறுத்துக் கொள்ளவும்.

ஆறியபின் ஒன்றாக மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். அத்துடன் அரிசி & கடலை மாவை சேர்க்கவும்.

உப்பு சேர்க்கவும்.



தாளிக்க வேண்டியது.

எண்ணெய் - 2 மே.க
கடுகு - 1/2 தே.க
கடலைப்பருப்பு - 1/தே.க
உ.பருப்பு - 3/4 தே.க
சீரகம்- 1/2 தே.க

                                                 தாளிக்கவும்.







பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.











வெங்காயம் சேர்த்து வதக்கவும்.




தேங்காய்  துருவல் சேர்த்து வதக்கவும்.




மாவில் சேர்க்கவும்.


மோர் சேர்க்கவும்.
கரைத்து 15 நிமிடங்கள் வைக்கவும்.








எண்ணெய் விட்டு காயவும்













மாவை ஊற்றவும்.






வேகவும் மறுபுறம் திருப்பவும்.





வேகவும்  எடுத்து பரிமாறவும். சத்தான ஓட்ஸ் குழிப்பணியாரம் தயாராகிவிட்டது.

வெங்காயம் தக்காளிச் சட்னியுடன் பரிமாறவும்.





நாம் எப்போதும் செய்யும் குழிப்பணியாரப் பதிவுகள் கீழே...  

குழிப்பணியாரம் - காரம்

குழிப்பணியாரம் - இனிப்பு


குறிப்பு

சமையல் சோடா - 3/4 தே.க  வேண்டுபவர்கள் சேர்த்துக் கொள்ளலாம்.

இதை மாவு ஊறின பின் சேர்த்து கலக்கவும்.

சேர்த்தவுடன் மாவு பொங்கி வரும். பின் பணியாரமாக வார்க்கவும்.

சும்மா பஞ்சு, பஞ்சா பணியாரம் நல்லா உருண்டையாக வரும்.

நான் இதை பெரும்பாலும் சேர்ப்பது இல்லை. உடலுக்கு கெடுதல் என்பதால்.

உங்கள் விருப்பம் சேர்ப்பதும் தவிர்ப்பதும்.






26 comments:

  1. Chitti iku Ore O Podu...................

    ReplyDelete
    Replies
    1. ஓ.....ஓ...பண்ணிட்டு சொல்லு...!!!

      Delete
  2. ஆஹா... ஓட்ஸ் பனியாரமா... சூப்பர்...

    ReplyDelete
  3. எனக்கு மிகவும் பிடித்தவை ஆனால் ஓட்ஸில் புதிதாக இருக்கிறதே...

    ReplyDelete
    Replies
    1. ஓட்ஸில் புதிதாக இருக்கிறதே...ஆம்

      நன்றி சகோ

      Delete
  4. அருமை உமையாள்!..

    எனக்கு மிகவும் பிடித்தமான ஓட்ஸ். அதில் என்ன செய்தாலும்
    கொள்ளைப் பிரியம்!..
    இதுகூட மிகச் சுலபமாக இருக்கே.. செய்து பார்த்துவிடுவோம்!..

    நல்ல குறிப்பு! படமும் அசத்தல்! மிக்க நன்றியுடன் வாழ்த்துக்கள் சகோதரி!

    ReplyDelete
    Replies
    1. எனக்கு மிகவும் பிடித்தமான ஓட்ஸ். அதில் என்ன செய்தாலும்
      கொள்ளைப் பிரியம்!..
      இதுகூட மிகச் சுலபமாக இருக்கே.. செய்து பார்த்துவிடுவோம்!.. ///

      ஆம் உங்க வேகத்துக்கு இது சுலபமா செய்திடலாம் சகோ

      Delete
  5. புது வகையான உணவாக இருக்கிறது. முயற்சித்துப் பார்க்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. முயற்சித்து விட்டு சொல்லுங்கள் சகோ

      Delete
  6. அருமையான சத்தான உணவு...
    பகிர்வுக்கு நன்றி சகோதரி....

    ReplyDelete
  7. ஓட்ஸ் தோசை செய்வது உண்டு...இந்த வாரம் குழிப்பணியாரம் தான்......குறிப்புக்கு நன்றி.........

    ReplyDelete
    Replies
    1. இந்த வாரம் குழிப்பணியாரம் தான் //

      செய்யுங்கள் அனு

      Delete
  8. புதிய செயல்முறையில் ஓட்ஸ் பணியாரம்..
    படங்களுடன் செய்முறை அளித்தமை - அருமை..
    வாழ்க நலம்!..

    ReplyDelete
  9. பணியாரம் எங்களுக்கு மிகவும் பிடித்தமான பலகரமாகும்.ஓட்ஸ் பணியாரம் புதுமையாக இருக்கு.கண்டிப்பாக செய்வேன்.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக செய்வேன்.//

      செய்து ருசியுங்கள்

      Delete
  10. பார்க்கவே செமையா இருக்கு. நாளை டிபன் இதுதான். நன்றி உமையாள்.

    ReplyDelete
    Replies
    1. விடுமுறை பலகாரமா..அசத்துங்கள் கீதா.

      Delete
  11. ஓட்ஸ் குழிப்பணியாரம்
    புதிதாகக் கேள்விப்படுகிறேன்
    தங்கள் வழிகாட்டல் நன்று.

    ReplyDelete
  12. ஓட்ஸ் குழிப்பணியாரம் செய்வதுண்டு! ஆனால் கடலை மாவு சேர்ப்பதில்லை. அதற்கு பதில் உளுந்து சிறிது அரைத்து சேர்ப்பதுண்டு.

    இதைஅயும் செய்து பார்த்துவிடலாம்...மிக்க நன்றி பகிர்வுக்கு! சகோதரி!

    ReplyDelete
  13. இதையும் ஒரு கை பார்த்து விடுங்கள்
    நன்றி சகோ

    ReplyDelete
  14. எனக்கு குழிப்பணியாரம் ரொம்பவே பிடிக்கும்.இப்ப ஓட்ஸ் குழிப்பனியாரமா, செஞ்சுட வேண்டியது தான்.

    ReplyDelete
  15. வாவ்!! மீண்டும் குழிப்பணியாரம். அதுவும் ஓட்ஸ் ல். சொற்கள் இல்லை.செயல்தான்.
    இது உடனேயே (கரைத்தவுடனேயே )செய்யலாம் தானே உமையாள். நன்றிகள்.

    ReplyDelete
  16. இது உடனேயே (கரைத்தவுடனேயே )செய்யலாம் தானே//

    இல்லை 15 நிமிடங்களாவது ஊற விட வேண்டும்.

    ReplyDelete