Saturday, 1 November 2014

காலிஃப்ளவர் மன்சூரியன்

இது எல்லோருக்கும் பிடித்தமான உணவு இல்லையா...

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பக்கூடியது.
இப்போ சீஸன் ஆரம்பித்து விட்டது இல்லையா...செய்யலாமே நாமும் இதை..






தேவையான பொருட்கள்

காலிஃப்ளவர் - 1 பூ
வெங்காயம் - 1
பூண்டு - 15
பச்சைமிளகாய் - 3
இஞ்சி - 2 துண்டுகள்
உப்பு - ருசிக்கு
தக்காளி சாஸ் -4 மே.க
சோயாசாஸ் - 3 மே.க
கரம் மசாலா - 1/2 தே.க
மிளாகாய்தூள் - 1/2 தே.க
கொத்தமல்லி - 1 கைபிடி
மஞ்சள் தூள் - சிறித
எண்ணெய் - பொரிக்க தேவையானது

காலிஃப்ளவரை துண்டுகளாக்கி மஞ்சள் தூள், உப்பு சேர்த்த தண்ணீரில் 15 நிமிடங்கள் வைத்திருக்கவும்.

பின் நன்கு 5 முறை அலசி வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள்.






பொடிகள்.

கான்ஃப்ளவர் - 2 தே.க
மைதா- 2 தே.க
அரிசிமாவு - 1 தே.க
கடலைமாவு - 2 மே.க
மிளகாய்தூள் - 1/2 தே.க
உப்பு சிறிது






பொடிகளைப் போட்டு பிசறிக் கொண்டு பின் சிறிது நீர் தெளித்து பிசறவும். 10 நிமிடங்கள் விட்டு பொரித்தெடுக்கவும்.










2 மே.க எண்ணெய் விட்டு இஞ்சி போட்டு வதக்கவும்.






பூண்டு சேர்த்து வதக்கவும்











பச்சை மிளகாய் செர்த்து வதக்கவும்










                                        வெங்காயம் சேர்த்து வதக்கவும்.









தக்காளி சாஸ் & சோயா சாஸ்
சேர்க்கவும்










கரம் மசாலா & மிளகாய் பொடி சேர்க்கவும்







நன்கு கிண்டவும்.











கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.










பொரித்த காளிஃப்ளவரை சேர்க்கவும்.











                             
                                                  கலக்கவும்.

                                                                         





                                                                    சூப்பர் மன்சூரியன் தயார்


நன்றி
வாழ்க வளர்க
உமையாள் காயத்ரி


19 comments:

  1. பார்க்கவே கண்ணைப் பறிக்கின்றதே!...

    அருமை! செய்து பார்த்திடுவோம்!
    வாழ்த்துக்கள் உமையாள்!

    ReplyDelete
    Replies
    1. பார்க்கவே கண்ணைப் பறிக்கின்றதே!...//
      அப்படியா தோழி

      நன்றி
      வாழ்க வளர்க
      உமையாள் காயத்ரி

      Delete
  2. காலி ப்ளவர் மன்சூரியன் செய்முறை படங்களுடன் சொன்ன விளக்கம் எளிமையாகவே தோன்றுகிறது. செய்து பார்க்க வேண்டியதுதான்.
    த.ம.1

    ReplyDelete
    Replies
    1. எளிமையாகவே தோன்றுகிறது. செய்து பார்க்க வேண்டியதுதான். //

      நன்றி ஐயா
      வாழ்க வளர்க
      உமையாள் காயத்ரி

      Delete
  3. சமையல் குறிப்புகளுடன்
    சிறந்த வழிகாட்டல்
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. கருத்திற்கு...
      நன்றி ஐயா
      வாழ்க வளர்க
      உமையாள் காயத்ரி

      Delete
  4. செய்யக்கூடிய,சுலபமான குறிப்புகளை, நல்ல விளக்கமாக,தெளிவான படத்துடன் தரும் உங்களை பாராட்ட வார்த்தையில்லை. காலிப்ளவர் வித்தியாசமான குறிப்பு.செய்துபார்ப்பேன். நன்றி உமையாள்.

    ReplyDelete
    Replies
    1. செய்யக்கூடிய,சுலபமான குறிப்புகளை, நல்ல விளக்கமாக,தெளிவான படத்துடன் தரும் உங்களை பாராட்ட வார்த்தையில்லை //

      செய்து பார்த்து சொல்லுங்கள்.

      எனக்கு தெரிந்ததை, எளிமையான சுவையான உணவுகளை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன். அவ்வளவே தோழி.

      நன்றி
      வாழ்க வளர்க
      உமையாள் காயத்ரி.

      Delete
  5. வணக்கம் சகோதரி.!

    காலி பள்வர் மன்சூரியன் படங்களுடன் பார்க்கும் போதே உடனடியாக சாப்பிடும் எண்ணத்தை உண்டாக்குகிறது சகோதரி.! தங்கள் செய்முறை விளக்கங்ளும், அருமையாக உள்ளது ! செய்து பார்க்கிறேன் சகோதரி.! பகிர்ந்தமைக்கு என் நன்றிகள்.!

    நட்புடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. செய்து பாருங்கள் தோழி

      நன்றி
      வாழ்க வளர்க
      உமையாள் காயத்ரி.

      Delete
  6. புகைப்படத்தை பார்த்தவுடன் மஞ்சுரியன் சாப்பிட தோணுது!!!

    வாழ்க வளமுடன்
    சரிதா

    ReplyDelete
    Replies
    1. உடனேயே பண்ணி விடு சரிதா..

      நன்றி
      வாழ்க வளர்க
      உமையாள் காயத்ரி

      Delete
  7. எங்கள் வீட்டிற்கு வரும் போது கீதா செய்து தருவதுண்டு-----துளசிதரன்...

    அடிக்கடி செய்வதுண்டு சகோதரி! கடலைமாவும், அரிசி மாவும் கலக்காமல். மைதா சிறிதும், கான்ஃப்ளோர் கூடுதலாகவும் அந்தக் கலவையில் பூண்டு பேஸ்ட் காரம் எல்லாம் கலந்து....மெரினேட் செய்து....பொரித்து...மற்ற கலவையில் கொத்தமல்லி சேர்ப்பதில்லை....வெங்காயத் தாள்-ஸ்ப்ரிங்க் ஆனியன்...சேர்ப்பதுண்டு. மற்றவை அதே!

    நன்றி சகோதரி! - கீதா

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. அடிக்கடி செய்வதுண்டு சகோதரி! //

      பேஷ்..பேஷ்...அசத்துங்கள் சகோதரி.

      சாய்ராம்
      உமையாள் காயத்ரி.

      Delete
  8. மற்றவர்களுக்கு சொலெஸ்ட்ராலை ஏற்றி விடும் கலையை நன்றாக காற்று வைத்திருக்கிறீர்கள் சகோதரி.

    நீங்கள் விளக்கியபடி செய்து கூட சாப்பிட வேண்டாம், வெறும் படத்தை பார்த்தாலே எங்களுக்கு சொலெஸ்ட்ரால் ஏறிவிடும் போல இருக்கே.

    ReplyDelete
    Replies
    1. ஹ...ஹாஹாஹா...!

      நன்றி சகோதரரே.

      Delete
  9. ஆஹா, அருமையான ரெசிப்பி நன்றி சகோதரி.

    ReplyDelete