மல்லி ஊறுகாய்...!!!
தேவையான பொருட்கள்
மல்லி - 2 கட்டு
து.பருப்பு - 2 1/2 மே.க
உ.பருப்பு - 5 மே.க
புளி - பெரிய நெல்லியளவு
வெங்காய வடகம் - 5 மே.க ( தாளிப்பு வடகம் )
உப்பு - தே.அ
மிளகாய் - 15
இவை எல்லா வற்றையும் 2 .மே க எண்ணெய் விட்டு வறுக்கவும். கொத்தமல்லியைப் போட்டு வதக்கவும்.
ஆறிய பின் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள்.
சிறிது நீர் விட்டு அரைக்கலாம்
.
தாளிக்க வேண்டியவை
நல்லெண்ணெய் - 100 மில்லி
கடுகு - 1 தே.க
தாளிக்கவும்.
வெங்காய வடகத்தை போட்டு சற்று வறுக்கவும்
அரைத்த விழுதை போடவும்.
நன்கு சுருண்டு எண்ணெய் கக்கி வரவும் இறக்கவும்
வெகு மணமுடன் இருக்கும் இந்த தொக்கு. என் தோழி ஒருவர் இதை செய்வார். ருசி அபாரமாய் இருக்கும். எங்களுக்கு மிகவும் பிடித்து விட்டது.
ஆகையால் நானும் செய்து பார்த்தேன். அதை உங்களுக்கு பதிவிட்டேன்.
நான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் இல்லையா...?
அப்படின்னு சொல்லுவதை நானும் சொல்கிறேன் சரிதானே ...நண்பர்களே. ( இருபாலரும் )
தேவையான பொருட்கள்
மல்லி - 2 கட்டு
து.பருப்பு - 2 1/2 மே.க
உ.பருப்பு - 5 மே.க
புளி - பெரிய நெல்லியளவு
வெங்காய வடகம் - 5 மே.க ( தாளிப்பு வடகம் )
உப்பு - தே.அ
மிளகாய் - 15
இவை எல்லா வற்றையும் 2 .மே க எண்ணெய் விட்டு வறுக்கவும். கொத்தமல்லியைப் போட்டு வதக்கவும்.
ஆறிய பின் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள்.
சிறிது நீர் விட்டு அரைக்கலாம்
.
தாளிக்க வேண்டியவை
நல்லெண்ணெய் - 100 மில்லி
கடுகு - 1 தே.க
தாளிக்கவும்.
வெங்காய வடகத்தை போட்டு சற்று வறுக்கவும்
அரைத்த விழுதை போடவும்.
நன்கு சுருண்டு எண்ணெய் கக்கி வரவும் இறக்கவும்
வெகு மணமுடன் இருக்கும் இந்த தொக்கு. என் தோழி ஒருவர் இதை செய்வார். ருசி அபாரமாய் இருக்கும். எங்களுக்கு மிகவும் பிடித்து விட்டது.
ஆகையால் நானும் செய்து பார்த்தேன். அதை உங்களுக்கு பதிவிட்டேன்.
நான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் இல்லையா...?
அப்படின்னு சொல்லுவதை நானும் சொல்கிறேன் சரிதானே ...நண்பர்களே. ( இருபாலரும் )
ஆஹா !! இந்த கொத்தமல்லி ரெசிப்பிக்கு நான் தேடோதேடுன்னு தேடினேன் ரெண்டு மாதம் முன் :)முகபுத்தகத்தில்
ReplyDeleteஎன் கணவர் வாங்கி வந்த ஐந்து கட்டு கொத்தமல்லியை போட்டு அனைவரையும் ரெசிப்பி கேட்டேன் ..
இனி கவலையில்லை ரெசிப்பி கிடைச்சாச்சு :) வடகம் இங்கே கிடைக்காது தேடிபார்க்கனும் .
ரெசிப்பிக்கு நன்றி சகோதரி
இனி கவலையில்லை ரெசிப்பி கிடைச்சாச்சு :) வடகம் இங்கே கிடைக்காது தேடிபார்க்கனும் //
Deleteபாருங்கள் இல்லைனா அது இல்லாமல் செய்யலாம்.
நன்றி
வாழ்க வளர்க
உமையாள் காயத்ரி.
ஹேய் புதுசா இருக்கே! அதாவது...துவரம்பருப்பு, வெங்காயவடகம் போட்டுச் செய்ததில்லை...செஞ்சுட்டா போச்சு.....கீதா...
ReplyDeleteஅதான்...இங்க வர வாசனை தூக்குது......துளசி..
செய்துட்டா போச்சா...ஹஹஹா...செய்யுங்கள் கீதா.
Deleteஆமா இல்லையா பின்ன செய்தது கொத்தமல்லில இல்ல...ஐயா.
நன்றி
வாழ்க வளர்க
உமையாள் காயத்ரி.
ReplyDeleteகொத்தமல்லி உணவா
கொஞ்சம்
உடல்நலம் பேண உதவுமே
சிறந்த வழிகாட்டல்
தொடருங்கள்
உடல்நலம் பேண உதவுமே //
Deleteஆம் ஐயா நல்ல நார்சத்து உள்ள உணவு அல்லவா...
நன்றி
வாழ்க வளர்க
உமையாள் காயத்ரி
வெங்காய வடகம் வேப்பம் பூ வடகம் தான் தெரியும் இது கேள்விப் படவில்லை . இது நல்ல முறையாகத் தான் இருக்கிறது செய்திட வேண்டியது தான் நன்றிம்மா வாழ்த்துக்கள் ...!
ReplyDeleteஇது தாளிப்பு வடகம். நிறைய பேர் உபயோகிப்பார்கள்.
Deleteநன்றி
வாழ்க வளர்க
உமையாள் காயத்ரி
இந்த கொத்த்மல்லி தொக்கு புது விதமாக இருப்பதுடன் செய்து பார்க்கவும் தூண்டுகிறது. வெங்காய வடகம் என்றால் கருவடகம் தானே? தஞ்சாவூர் பக்கம் நிறைய சின்ன வெங்காயம், பூண்டு, வெந்தயம், சீரகம் என்று பல சாமான்கள் போட்டு உருண்டை பிடித்து காய வைத்து கருவடகம் செய்வார்கள். மீன் குழம்பு போன்றவற்றிற்கு தாளிப்பார்கள். அதைத்தானே குறிப்பிட்டிருக்கிறீர்கள்?
ReplyDeleteதாளிப்பு வடகம் தான். உருண்டையான கருவடகம் தான் இப்போது கடைகளில் உதிரியாகவே பேக்கட் பண்ணி விற்கிறார்கள். அதைத் தான் உபயோகப் படுத்தினேன்.
Deleteநாங்கள் கருவடகம் ( செட்டி நாட்டு பக்கம் ) வறுத்து மோர்சாதம் மற்றும் குழம்புக்கு உபயோகப் படுத்துவோம். சின்ன அளவில் வத்தலாக இருக்கும் அது.
சைவம், அதனால் மீன் குழம்புக்கு தாளிப்பார்களா என தெரியாது.
இந்த கொத்தமல்லி தொக்கு புது விதமாக இருப்பதுடன் செய்து பார்க்கவும் தூண்டுகிறது. //
நன்றி தோழி செய்து பார்த்து விட்டு கூறுங்கள்.
நன்றி
வாழ்க வளர்க
உமையாள் காயத்ரி
முதலில் போட்டோ பார்த்ததுமே கமெண்ட் போடணும்னு இழுத்துச்சு ...அருமையான செய்முறை. வெங்காய வடகம் போட்டு செய்வது சற்று புதிது தான் எனக்கு ..ஆனால் சுவையாக இருக்கும் போல் தெரியுது .நிச்சயம் முயற்சி பண்ணி பார்க்கறேன்
ReplyDeleteமுதலில் போட்டோ பார்த்ததுமே கமெண்ட் போடணும்னு இழுத்துச்சு //..
Deleteஆஹா போட்டோவுக்கு தான் நான் நன்றி சொல்லனும். இல்லைனா இந்தப்பக்கம்...வந்திருக்க மாட்டீங்க..இல்லையா...?
நிச்சயம் முயற்சி பண்ணிட்டு சொல்லுங்கள் தோழி. சுவை அசத்தலாக இருக்கும்.
நன்றி
வாழ்க வளர்க
உமையாள் காயத்ரி.
சுவையான கொத்துமல்லி தொக்கு..
ReplyDeleteபுதுவித சுவையும், மனமும் சேர்த்து மறுபடியும் செய்யத்தூண்டும் அம்மா.
Deleteநன்றி
வாழ்க வளர்க
உமையாள் காயத்ரி.
வணக்கம் தோழி !
ReplyDeleteஅருமையான உடலுக்கு ஆரோக்கியமான உணவின் செய்முறை
விளக்கப் படங்களுடன் மனதையும் கவரும் வண்ணம் படைத்துள்ளீர்கள் !
வாழ்த்துக்கள் .மிக்க நன்றி தோழி பகிர்வுக்கு .
அருமையான உடலுக்கு ஆரோக்கியமான உணவு //.. கொத்தமல்லியில் நிறைய சத்து உள்ளது அல்லவா... அதனால் அவ்வப்போது இதுமாதிரி செய்து வைத்துக் கொண்டால் உபயோகமாக இருக்கும்.
Deleteநன்றி
வாழ்க வளர்க
உமையாள் காயத்ரி.
இட்லிக்கு ரொம்ப நல்லா இருக்கும் போல. ஒரு மாறுதலுக்கு(!) மனைவியை செய்ய சொல்ல வேண்டியது தான். (பின்ன , எப்பப் பார்த்தாலும் நானே, இந்த மாதிரி புதுசு புதுசா செய்ய முடியுமா?)
ReplyDeleteஇட்லி.தோசை,அடை.சப்பாத்தி. தயிர் சாதம்.பிரட் அதுவும் கோதுமை பிரட்டுக்கு சூப்பர்.
Deleteஒரு மாறுதலுக்கு நீங்கள் சகோதரிக்கு செய்து அசத்தலாமே...?
நன்றி
வாழ்க வளர்க
உமையாள் காயத்ரி.
நல்லதொரு ரெசிபி! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteநன்றி சகோ
Deleteவாழ்க வளர்க
உமையாள் காயத்ரி.
கருவேப்பிலை தொக்கு கேள்விப்பட்டிருக்கிறேன்,கொத்தமல்லி தொக்கு புதுசா இருக்கே?? செய்து பார்க்கிறேன்..
ReplyDeleteவாழ்க வளமுடன்
சரிதா
ஓ அப்படியா...இப்போ செய்து பார்த்து விடு
Deleteநன்றி
வாழ்க வளர்க
உமையாள் காயத்ரி.
ஒரு சந்தேகம் உமையாள் காயத்ரி! இதில் எதுவும் மிளகாய் கிடையாதா?
ReplyDeleteமிளகாய் 15 என போட்டு இருக்கிறேனே..
Deleteமுன்று வருடம் முன் திண்டிவனம் போற வழியில் ஒரு ஹோட்டலில் இட்லியுடன் ரொம்ப சாப்பிட்டோம் , ரொம்ப அருமையாக இருந்தது, புதினாவில் தான் செய்து பார்த்தேன், வடகம் சேர்க்க வில்லை, அது இதே மாதிரி தான் இருக்கு , செய்து பார்க்கீறேன்.
ReplyDeleteசெய்து பாருங்கள்
Deleteநன்றி
சாய்ராம்
உமையாள் காயத்ரி
நான் கூட இந்த வாரம் கொ.தொ. போடுவதாக இருந்தேன். (திங்கக்கிழமை)
ReplyDelete