பேச்சு பேச்சு
பேச்சு…சில சமயங்களில் நாம் எதுக்காக பேசுகிறோம்..என்னத்தை பேசுகிறோம்ன்னு தெரியாமலேயே
பேசிட்டே இருப்போம். பேசுவது நமக்கு பிடித்து இருக்கிறது…ஆனா கேட்கப் பிடிக்காது. நாம
பேசுவதை அடுத்தவன் கேட்கிறப்போ அவன் பேசுவதை நாம கேட்கணும் அப்படிங்கிற மரியாதை எல்லாம்
கிடையாது. நாம பேச வேண்டும் அடுத்தவன் கேட்கணும். நமக்குத்தான் எல்லாம் தெரிந்தது போல
ஒரு நினைப்பு… அடுத்தவனுக்கு அவ்வளவு தெரியாதுன்னு நாம நினைக்கிறோம், நம்புகிறேம்.
பேசுவதால் நிறைய
காரியங்கள் நடக்கும் தான். சில சமயங்களில் பேசியதால் நடக்காமலும் போகும். எங்க எப்படி
எவ்வளவு பேச வேண்டும் என்று தெரிவது இல்லை. அதனால் பேசினதும் பிரச்சனை..ஏன்டா பேசினோம்னும்
நமக்கு மனசுக்குள்ள மருகல்.
நாம ஒண்ணு நினைத்து
பேச அதை வெறொரு விதமாக புரிந்து கொள்வதும் நடக்கும். நாம இதை தான் நினைத்து பேசிட்டு
வந்தோம்னு இருப்போம். ஆனா பின்னாடி தான் தெரியும் அவங்க என்னத்த புரிந்து கொண்டார்கள்
என்று.
நாம நல்லதை
நினைத்து பேசியிருப்போம்..ஆனா அது தப்பாகூட போகும்.
நாம நினைத்ததை
நினைத்தபடி வெளியிடுதல் அப்படிங்கிறது ஒரு கலை.
அதுஅவ்வளவு
சுலபமல்ல.சிலர் அழகா பொய்யகூட தெளிவா சொல்லுவாங்க. அது உண்மை போலவே இருக்கும். சிலர்
உண்மையாக நம் மேல் அக்கரையுடன் பேசுவாங்க அங்க பேச்சுமொழி சரியா கோர்வையாக வராததால்
என்னமோ திக்கிதிக்கி சொல்றாங்க அதனால பொய் போல தோன்றும்.
இப்படியெல்லாம்
சில சமயம் நடக்கும் போது ஏன்டா பேசினோம் பேசாமலேயே இருந்திருக்கலாம் என்று தோன்றும்.
ஆனா பேசாம இருக்க
முடியாததால பேசிட்டு இருப்போம். பேசும் போது கிடைக்கும் சுகம் போல பேசாம இருப்பதிலும்
இருக்கு அப்படிங்கிறது நிறைய பேருக்கு தெரிவதில்லை.
பேசிட்டே இருக்கும்
போது நம்மை நமக்கு தெரியாது. பேசாம இருக்கும் போது தான் நாம நாம்மை உற்று பார்க்க ஆரம்பிப்போம்.
ஆனா அது மிகவும் கடினமான செயல். உடனேயே நாம
வேறு திசைக்கு மாறிடுவோம்.
ஆனா தொடர்ந்து
பேசாம இருக்கும் வாய்ப்பு கிடைக்கும் போது நம்மின் ஆழம், நம் குணம் என்ன, நாம எப்படி
யார் யார்கிட்ட நடந்துக்கிறோம், ஏன் அப்படி நடந்துக்கிறோம், மற்றவர்கள் நம்மை எப்படி
நடத்துகிறார்கள்,அவர்களின் நோக்கம் என்ன, அவர்களின் அசைவு கூட நாம கண்டு கொள்ளலாம்.
அவர்களின் மனவோட்டம் என்ன, என நிறையவற்றை நாம் கூர்ந்து கவனிக்க ஆரம்பிப்போம். பேச்சை
குறைக்கும் போது தான் கவனித்தல் ஆரம்பிக்கிறது. தைரியமும் வருகிறது.
தேவையற்று பேசும்
போது நம்முடைய சக்தி அதிகமாக விரையம் ஆகிறது.
தொடந்து பேசுவதால்
சத்தத்தால் தலை வலி வரும்.மண்டை காய்ந்துடுச்சு அப்படின்னு சில சமயங்களில் சொல்கிறோமே
அது போல இருக்கும். காப்பி சாப்பிட்டால் தேவலைனு தோணும் இல்லை. ஏன்னா..ஒன்னு சூடா இருப்பதால்
மற்றொன்று அதை அமைதியாக குடிக்கும் போது மனதில் அமைதி ஏற்படுகிறது.
அமைதி அப்படிங்கிறது
வேணும். ஆனா அதுவே ரொம்ப நேரம் இருந்து விட்டால் நமக்கு சத்தம் வேண்டும் போல இருக்கும்.
அந்த அமைதியே நமக்கு பயத்தை உண்டு பண்ணி அமைதியைக் கெடுத்து விடும். தவம் செய்றவங்க
எப்படித்தான் இருக்கிறாங்களோன்னு தோணும்.
பேசுவதை விட
பேசாம இருக்கும் மெளனத்தின் சுவையை உணர ஆரம்பித்தால் போக போக அதற்காக நாம பழக ஆரம்பிப்போம்.
பேசுவதை விட பேசாம இருப்பதே மேல் அப்படின்னு தோனும். பேசி ஒன்னும் சாதிக்காத நாம பேசாமலாவது
இருப்போன்னு தோனும். பேசாமல் இருக்கும் போது நம்மின் உள் ஆற்றல் வெளிப்பட ஆரம்பிக்கும்.
கற்றல் கேட்டல் பார்த்தல் என புது விதத்தில் நடக்கும். ஆனாலும் சமயங்கள் கிடைக்கும்
போது நம்மின் பேச்சும் பிதற்றல்களும் இருந்து கொண்டே தான் இருக்கும். காலவோட்டத்தில்
அது குறைந்து போகும்.
பயிற்சி தேவை
தான் நன்றாக பேச மற்றும் பேசாமல் இருக்கவும் தான்.
பேசி களைப்
படைந்தேன் என் பெருமானே
பேசாமல் உன்னை
நினைக்க வரம்தருவாயே
பொருளற்ற பேச்சில்
மயங்கி கிடக்காமல்
பொருள் நீயே
என அறிய வரம் தருவாயே
பொருளற்ற வாழ்க்கைக்கு பொருள் வேண்டி திரிய
பொருள் உன்னுள்ளே
என உணர வரம் தருவாயே
பொருளின் பின்னே
காலம் போனதே
போதை நீயென
உணர வரம் தருவாயே.
This is a good Introspection..........
ReplyDeleteWish...you move Forward.
சிறப்பான பகிர்வு வாழ்த்துக்கள் தோழி !
ReplyDeleteநன்றி தோழி
Deleteநல்ல அலசல் பதிவு !
ReplyDeleteத ம 2
நன்றி ஐயா.
Delete//பேசுவதை விட பேசாம இருக்கும் மெளனத்தின் சுவையை உணர ஆரம்பித்தால் போக போக அதற்காக நாம பழக ஆரம்பிப்போம். //
ReplyDeleteஅருமையாகப் பேசிப்பேசியே .... நிறையப்பேசிப்பேசியோ அல்லது பேசாமல் மெளனமாக இருந்தோ இந்தக்கட்டுரை வாயிலாக பேச வேண்டியதெல்லாம் சப்ஜாடாப் பேசித் தீர்த்து விட்டீர்கள். :)
பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.
அருமையாகப் பேசிப்பேசியே .... நிறையப்பேசிப்பேசியோ அல்லது பேசாமல் மெளனமாக இருந்தோ இந்தக்கட்டுரை வாயிலாக பேச வேண்டியதெல்லாம் சப்ஜாடாப் பேசித் தீர்த்து விட்டீர்கள். :) //
ReplyDeleteநன்றி ஐயா
சூபரோ சூப்பர்! பெரிய பின்னூட்டம் யோசித்தோம்....நோ நோ...இப்பத்தானே ஒரு அழகான பதிவு ப்டிச்ச...சகோதரி பேசாதன்னு சொல்லிருக்காங்கல்ல....அத ஒழுங்கா கடைப் பிடி முதல்ல....ஸோ....
ReplyDeleteபேசிட்டே இருக்கும் போது நம்மை நமக்கு தெரியாது. பேசாம இருக்கும் போது தான் நாம நாம்மை உற்று பார்க்க ஆரம்பிப்போம்.// அதச் செஞ்சோம்! விள்ங்கியது!!!!
கவிதை வரிகளும் ஆஹா!!!
ஹஹஹஹஹஹஹஹா..... நன்றி சகோஸ்
Deleteமௌன மொழி மனதை வருடியது!
ReplyDeleteஅருமை! நல்ல பகிர்வு!
வாழ்த்துக்கள்!
நன்றி தோழி.
Deleteபேசாமல் இருந்தாலும் அவஸ்தை தான் பேசினாலும் அவஸ்தை தான். ஆனால் பேசாதிருப்பின்
ReplyDeleteபிழை யொன்றுமில்லை என்று இருப்பதே மேல் அவ்வளவும் உண்மையே நன்றி தோழி!
அப்போ "வாயை மூடிப்பேசவும்" அப்டின்னு சொல்லுரிங்க:)) ஓகே ஒன்னு மட்டும் சொல்லிக்கிறேன். பதிவு அருமை!
ReplyDeleteஹஹஹா....!!! நன்றி தோழி.
Deleteபேசுவது குறித்து மிகவும் அருமையான அலசல் பகிர்வு....
ReplyDeleteஅருமை சகோதரி.
தங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.
Deleteஎன் வாழ்கையில் நான் சந்தித்த மனிதர் ஒருவர் வாரத்திற்கு ஒரு நாள் மௌன விரதம் அனுசரிப்பவர். அவரை பார்க்கும்போது, எப்படி ஒரு நாள் முழுக்க பேசாமல் இருப்பார் என்று ஆச்சிரியமாக இருக்கும்.
ReplyDeleteஅந்த கவிதை அருமை. வாழ்த்துக்கள்
வாரம் ஒரு முறை மெளன விரதம் இருக்கிறேன். சில வருடங்களாக.. தொடர்ந்து சில நாட்கள் இருக்க வேண்டும் என்கிற அவா இருக்கிறது.
Deleteவாரம் ஒரு நாள்...முதலில் கஷ்டமாக இருந்தாலும் பின் பழகி விடும். அதில் ஒரு சுகம் உண்டு. நன்றி சகோ.