Sunday, 26 October 2014

ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறேன் நண்பர்களே...!!!

அன்பார்ந்த வலைப்பூ நண்பர்களே

                                                                      வணக்கம். நலம். நலமறிய ஆவல். நீங்கள் அனைவரும் இருக்கும் போது சுகம் தானே எங்கும் பரவி இருக்கும். தங்களின் பணிகளுக்கு இடையில் இந்த சகோதரியின் வலை இல்லத்திற்கு இன்று கட்டாயம் வந்து செல்லுங்கள். அன்பான அழைப்பை ஏற்றுக் கொள்ள்வீர்கள் என நினைக்கிறேன்.

வாருங்கள், வாருங்கள்.....

இன்று என் வலை இல்லத்தின் முதல் பிறந்த நாள். 

பிறந்த நாட்களை நான் இது வரை கொண்டாடியதில்லை. அந்த பழக்கமும் இல்லை. பிறந்தநாளை நான் கொண்டாடியதில்லை....!!!

அன்பான தாங்கள் அனைவரும் உடன் இருக்க கொண்டாடி மகிழலாம் என ஆசை வந்தது. ( என்ன செய்து கிழித்து விட்டாய் கொண்டாட... என நீங்கள் நினைப்பது சரியே ) 

ஆனாலும் ஆசை யாரை விட்டது. ?

என்னுடைய வலைத்தளத்தினை 26.10.2013 அன்று தொடங்கினேன்.

எனக்கு தெரிந்தவற்றை இங்கு எளிமையான எதார்த்தத்துடன் பகிர்ந்து கொள்கிறேன் அவ்வளவே.

நீங்கள் அனைவரும் வந்து வாசித்து மகிழ்ந்து கருத்திட்டு ஊக்குவித்தமைக்கும், அமைதியாக வாசித்து விட்டு மட்டும் சென்றவர்களுக்கும், தவறுகளைச் சுட்டிக்காட்டியவர்களுக்கும் என் மன மார்ந்த நன்றிகள். எல்லோரும் எனக்கு உதவியவர்கள் ஆவீர்கள். 

217 பதிவுகள் இதுவரை பதிவிட்டு இருக்கிறேன்.

26980 பேர் இதுவரை பார்வையிட்டுள்ளார்கள்.

41 நண்பர்கள் வலைத்தளத்துடன் இணைந்து கொண்டவர்கள்.

54 நண்பர்கள் பின் தொடர்கிறார்கள்.

அன்பான நட்பு வட்டமும், அருமையான நண்பர்களும் எனக்கு கிடைத்து இருக்க நான் கொடுத்துவைத்தவள் ஆவேன்.

தங்களின் அன்பையும், ஆசிகளையும் எனக்கு என்றும் தொடர்ந்து தாருங்கள் நண்பர்களே.   


வந்து உலாவும் உங்களுக்கு கடுகளவாவது பயன் இருக்கும் என நம்புகிறேன்உங்கள் வருகையால் எனக்கு உற்சாகமாய் இன்னும் சிறப்பாக பதிவுகள் இட வேண்டும் என ஆவல் மிகுகிறதுஎன் டைரியில் உறங்கிய கவிதைகளுக்கு
 உயிர் வந்திருக்கிறதுஅவ்வப்போது மலரும் கவிதைப் பூக்களும் உங்களுக்கு வாசனை வீச மலர்ந்து விடுகிறது. வெகு வருடங்களாக எழுத வேண்டும் என எனக்குள் இருந்த ஆசை இப்போது தான் முயற்சி செய்து நடைபயில ஆரம்பித்திருக்கிறது.
                         



                                                              ஸ்வீட் எடுத்துக் கொள்ளுங்கள்.

அழைப்பிற்கிணங்கி என் வலை இல்லத்திற்கு வருகை புரிந்த உங்கள் அனைவருக்கும்...

நன்றி நன்றி நன்றி.

மீண்டும் வாருங்கள்.




இவண்
உமையாள் காயத்ரி.



34 comments:

  1. வாழ்த்துக்கள் சகோதரி! தொடரட்டும் உங்கள் எழுத்துப்பணி! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. உடனடி வருகை தந்து உற்சாகப்படுத்தி வாழ்த்தியமைக்கு நன்றி சகோ.

      Delete
  2. வணக்கம் சகோதரி.!

    தங்கள் கடிதத்தை கண்டு, படித்ததும் மனதிற்கு சந்தோசமாக இருந்தது.! ஆம் சகோதரி .! அன்பான நட்பு வட்டங்களுடன், வலைப்புகு பிறந்த நாளை கொண்டாடுவது என்பது சந்தோசமான ஒரு விஷயந்தானே.! நல்ல பகிர்வுகளை தரும் நீங்கள் தொடர்ந்து எழுதி மேலும் எழுத்துலகில் சாதிக்க என் அன்பான வாழ்த்துக்கள்.!

    நன்றி !
    நட்புடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி சகோதரி.

      Delete
  3. வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள். உங்க வலைப்பூவின் பிறந்தநாள் அழைப்பிதழ் வித்தியாசமாக. இன்னும் நிறைய பதிவுகள் ,சமையல்குறிப்புகள் தரவேண்டும். உங்க எழுத்துப்பணி மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி சகோதரி.

      Delete
  4. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். சகோதரி.
    ஓராண்டிற்கு 217 பதிவுகள். அபாரம்.
    தங்களின் பதிவுகளின் மூலம் நிறைய சமையல் குறிப்புகளை என்னுடைய இல்லாள் தெரிந்துகொண்டு, அவ்வப்போது அதனை செய்தும் கொடுத்திருக்கிறார்கள். அதற்கு மிக்க நன்றி
    தொடரட்டும் தங்களின் எழுத்துப்பணி.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. தங்களின் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி சகோ.

    ReplyDelete

  6. அழகாக

    217 பதிவுகள் இதுவரை பதிவிட்டு இருக்கிறேன்.
    26980 பேர் இதுவரை பார்வையிட்டுள்ளார்கள்.
    41 நண்பர்கள் வலைத்தளத்துடன் இணைந்து கொண்டவர்கள்.
    54 நண்பர்கள் பின் தொடர்கிறார்கள்.

    இப்படி ஒரு புள்ளிவிபரம்
    இது
    தங்கள் கடின உழைப்பின் அடையாளம்.
    தங்கள் படைப்பாற்றல் திறனுக்குச் சான்று
    மேலும், தங்களால்
    பல வெற்றிகளைக் குவிக்க முடியுமென்று
    தங்கள் வலை இல்லத்தின்
    முதல் பிறந்த நாள் அன்று
    வாழ்த்துகிறேன்!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா.

      Delete
  7. வணக்கம் !தங்கள் மடல் கண்டு மகிழ்ச்சி ..
    மன அமைதி பெற பக்திபமாலை, ஊட்டம் தரும் பழரசம், நாவில் நீரூற பலவித பலகாரம், பார்த்தால் பசியெடுக்கும் அறுசுவை உணவு படைத்தீரே தினம் எமக்கு விருந்தாகவும், மருந்தாகவும் மழலையாக. இன்னும் நடந்து ஓடி ஓங்கி வளர்வாய் பெரிதாய் இனிதாய் உன் ஒவ்வோர் அசைவையும் நாம் பார்த்து ரசிக்க. பல்வித பதிவுகளை படைப்பாய் பாகாய்.

    பலநூறு கவிதைகள் படைக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ....!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி இனியா

      Delete
  8. பதிவை சந்திப்பு நிகழ்ச்சிகள் அமர்க்களமாய் நடந்து முடிந்து தற்போதுதான் வீட்டிற்கு வந்தேன் !
    பிறந்த நாள் வாழ்த்துகள்..உங்கள் படைப்புகள் எங்களுக்கு என்றும் மகிழ்ச்சி தரும் ,தொடர்ந்து எழுதவும் வாழ்த்துகள்!
    த ம +1

    ReplyDelete
    Replies
    1. தங்களின் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா

      Delete
  9. வணக்கம்...உங்கள் எழுத்துக்கள் நட்சத்திரங்களாக மேலும் மேலும் மிளிர வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. தங்களின் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி அனுராதா.

      Delete
  10. இனிய வாழ்த்துகள் உமையாள். இன்னும் பல சிறப்பான ஆக்கங்களைத் தந்து வலையுலகில் ஒரு சிறப்பிடத்தோடு என்றும் நிலைத்திருக்க என் மனமார்ந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி கீதமஞ்சரி.

      Delete
  11. அன்புள்ள உமையாள் காயத்ரி!

    உங்களின் வலைப்பூ குழந்தைக்கு அகவை ஒன்றாகி விட்டதறிந்து மகிழ்ந்தேன். தளிர்நடை போடுவதற்குள்ளாகவே 217 பதிவுகள் என்பது அசத்தலான விஷயம். மேன்மேலும் அழகாய் வளர மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி மனோ சாமிநாதன்.

      Delete
  12. Happy Birthday .............
    Keep it up chitti.

    ReplyDelete
  13. உங்கள் பதிவுகளைப் படித்திருக்கிறேன்... எனினும் இதுவே முதல் பின்னூட்டம். மேலும் பலப்பல பிறந்த நாட்கள் கொண்டாட மனமார்ந்த வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் முதல் வருகைக்கும், கருத்திற்கும்,வாழ்த்திற்கும் நன்றி சகோதரி

      Delete
  14. நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் .....தொடரட்டும் உங்கள் யதார்த்தம் .....

    ReplyDelete
  15. தாமதமானாலும் தந்தேன் என் வாழ்த்தும் உமையாள்!

    இனிக்க இனிக்கப் படைக்கும் உங்கள் படைப்புகள் எல்லாமே மிக அருமை!
    இன்னும் நிறையத் தாருங்கள் உங்கள் இனிய ஆக்கங்களை..!
    மேலும் சிறந்து விளங்கிட அன்புடன் வாழ்த்துகிறேன்!

    ReplyDelete
  16. நல் வாழ்த்துக்கள்! வலைப்பதிவர் சந்திப்பு நிகழ்ச்சிக்கு மதுரைக்கு சென்றுவிட்டதால் உடனே வந்து வாழ்த்தைச் சொல்ல முடியாமல் போய்விட்டது.

    Tha.ma.3.

    ReplyDelete
    Replies
    1. ஆம் ஐயா நீங்கள் செல்வதாய் பதிவிட்டு இருந்தீர்கள். பரவாயில்லை ஐயா. நன்றி

      Delete
  17. எழுத்தைப் பார்த்தால் ஒருவயதுக் குழந்தையோல் தெரியவில்லையே!
    முதல் பிறந்தநாள்விழாவிற்கு இவ்வளவு “கூட்டத்தை“ சேர்த்துவிட்ட அன்பின் மதிப்பே அதிகம் எனபது புரிகிறது. (உங்கள் சமையல் குறிப்புகள் தந்த ருசி வேறு!) தொடர்ந்து இன்னும் பலநூறு பதிவுகளில் உங்கள் சமையல் தாண்டியும் கதை,கவிதை, கட்டுரைகளையும் சிற்ப்பாகச் சமைத்துத் தர வாழ்த்துகிறேன் சகோதரி.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஐயா

      அன்பான நண்பர்கள் வந்து வாழ்த்தியது மிகவும் சந்தோஷம் அளிக்கிறது. என் அழைப்பை ஏற்று அவர்கள் வந்ததற்க்கு மன நெகிழ்கிறது ஐயா.

      எழுத்தைப் பார்த்தால் ஒருவயதுக் குழந்தையோல் தெரியவில்லையே! //...

      தங்களைப் போன்றும், நிறைய நண்பர்கள் எழுதுவது போலும் எல்லாம் அந்த அளவு எழுதத் தெரியாது. எழுத வேண்டும் என்கிற ஆர்வத்தில் எழுத முயன்று கொண்டு இருக்கிறேன்.

      பலநூறு பதிவுகளில் உங்கள் சமையல் தாண்டியும் கதை,கவிதை, கட்டுரைகளையும் சிற்ப்பாகச் சமைத்துத் தர வாழ்த்துகிறேன் சகோதரி.//

      இயன்ற வரை செம்மையாய் செய்கிறேன் சகோதரரே.

      நன்றி.

      Delete
    2. அன்பின் ஆச்சி - வலைத்தளம் துவங்கி ஓராண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது - மிக்க ம்கைழ்ச்சி - தாமதமான பிறந்த நாள் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

      Delete
  18. இனிய வாழ்த்துக்கள் தொடர்ந்தும் எழுதுங்கள். சில சமையல் குறிப்புக்கள் குறித்துக்கொண்டேன் ஓய்வின் போது செய்து உண்டு மகிழ்வோம்.உங்கள் பெயர் சொல்லி.

    ReplyDelete