காற்றடிக்க காலணா இல்லை
கைவண்டியில் காய்கறிகள்
பச்சை தண்ணீராய் சிரிக்கின்றன...!!!
விற்க கூவுகிறேன்...
விரைகின்றார் காரெடுத்து
அன்னியக் கொள்முதல் கொள்ளையரிடம்
அன்னதானம் இடுகிறேன் என
அழைக்கின்றனர்...
எதற்கு...?
முடக்கி விட்டு முட்டுக் கொடுக்கவா...?
சிலர் உள்ளன்புடன் இடுகின்றனர்
சிலர் பாவம் பறக்க வேண்டும் என படைக்கின்றனர்
சில்லரை வியாபாரம் பாராது செல்லுதல் கூட
பாவம் தானே...?
காய் வாங்கலையோ...?
கறிகாய் வாங்கலையோ...?
சிறிய கை கொடுங்கள் - எங்களுக்கு
சிறிய கை கொடுங்கள்
பிச்சைக்காரர்களாய் ஆக்காதீர்கள்
இலவசத்திற்கு ஆசை காட்டி
இழுத்து முடக்காதீர்கள்..
சோம்பேறிகளாய் நாட்டில் நடமாட விடாதீர்கள்.
படம் கூகுள் நன்றி
சிறிய கை கொடுங்கள்
ReplyDeleteசிறப்பான சிந்தனை..!
முதலில் வந்து கருத்திட்டமைக்கு நன்றி அம்மா.
ReplyDeleteSuper
ReplyDeleteநன்றி சகோ
Deleteநல்ல கருத்தை சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்! என்னுடைய கருத்தும் இதேதான்.
ReplyDeleteதங்கள் முதல் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி அம்மா
Deleteசிறப்பான படைப்பு! வாழ்த்துக்கள்!
ReplyDeleteசொல்லவேண்டியதை அருமையாகச் சொன்னது
ReplyDeleteமனம் கவர்ந்தது
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
நன்றி ஐயா
Deleteவணக்கம் சகோதரி.!
ReplyDeleteஉண்மையை சரியாய் சுட்டிக்காட்டி இருக்கிறீர்கள் சகோதரி.! உங்கள் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன்.! பகிர்ந்தமைக்கு நன்றிகள்.!
வாழ்த்துக்களுடன்,
கமலா ஹரிஹரன்.
//சில்லரை வியாபாரம் பாராது செல்லுதல் கூட
ReplyDeleteபாவம் தானே...?//
மனதை தொட்ட வரிகள் ..:(பாவம்தான் அதனினும் கொடுமை அவர்களிடம் பேரம் பேசுவார்களே சிலர் :(
மக்கள் ஒன்றை புரிஞ்சிக்கணும் இப்படிப்பட்ட சிறு வியாபாரிகளிடம் அதிக பணமில்லாததால் கொடிய பூச்சி மருந்துகளை வாங்க மாட்டாங்க ..அவர்களிடம் உள்ள காய்கறிகள் பாதுகாப்பனவையும் கூட .வாழ்த்துக்கள் பாராட்டுகல் உங்க ஆதங்கத்தைஅருமையான கவியாய் வடித்ததற்க்கு
பாவம்தான் அதனினும் கொடுமை அவர்களிடம் பேரம் பேசுவார்களே சிலர் :..
Deleteஆமாம். வயதானவர்கள் எத்த்னை பேர் உழைத்து இது போல் வாழ்கிறாகள். நம்மால் முடிந்ததையாவது நாம் செய்யலாம் அல்லாவா..
நன்றி சகோதரி.
விற்க கூவுகிறேன்...
ReplyDeleteவிரைகின்றார் காரெடுத்து
அன்னியக் கொள்முதல் கொள்ளையரிடம்//
உண்மையே பலரும் அபப்டித்தான் செய்கின்றனர்......பாவம் இவர்கள்...
சில்லரை வியாபாரம் பாராது செல்லுதல் கூட
பாவம் தானே...?//
நிச்சயமாக பாவமே இவர்கள்தானே இவ்வளவு வருடங்களும் விற்று வந்தனர்...இப்போதுதானே பவிஷான கண்ணாடிக் கதவுகளுடன், குளிரூட்டப்பட்டக் கடைகள்! இவர்கள் வெயிலிலும், மழையிலும் உழைத்து...பாவ,..பார்க்கப்போனாம் இவர்கள் சில்லைறை வியாபாரிகள் இல்லை....சில்லறை வியாபாரிகள் பெரிய கடைகளே! பல சமயங்களில் சில்லறை இலலாமல் ரொம்பவும் நாகரீகமாக நமக்கு வேண்டாத சாக்லேட்டுகளை நீட்டுவார்கள்....ஆனால் இந்த ச் சில்லறை வியாபாரிகள் என்று சொல்பவர்கள், இஞ்சியோ, கறிவேப்பிலையோ, கொத்தமல்லியோ கூடத் தருவார்கள்....இலவசமாகக் கூட....
சிறிய கை அல்ல சகோதரி பெரியகையே கூட கொடுக்கலாம்...இவர்கள் பிச்சைக்காரர்கள் ஆகக் கூடாது.....இவர்களும் இந்த் நாட்டுப் பிரஜைகள்தாம்.....வாழ வேண்டும்.....ஆம் நாங்கள் கண்ணாடிக் கதவுகளைக் கடந்து, சென்று இவர்களிடம் தான் வாங்குவது....பேரம் பேசாமல்....என்ற கொள்கை....
அருமையான வரிகள்...பாராட்டுக்கள்! நாங்களும் உங்கள் பக்கம்....
பெரிய கடைகளே! பல சமயங்களில் சில்லறை இலலாமல் ரொம்பவும் நாகரீகமாக நமக்கு வேண்டாத சாக்லேட்டுகளை நீட்டுவார்கள்....ஆனால் இந்த ச் சில்லறை வியாபாரிகள் என்று சொல்பவர்கள், இஞ்சியோ, கறிவேப்பிலையோ, கொத்தமல்லியோ கூடத் தருவார்கள்....இலவசமாகக் கூட....
Deleteஆம் சகோதரரே..அவர்கள் மனது கூட பெரியது தான்...சில்லரை இல்லை என்றால் பதிலுக்கு எதையாவது கொடுத்து விடுவார்கள்.
பெரிய கடைகள் சில்லரையிலும்...சில்லரை பார்த்து விடுவார்கள்.
சிறிய கை அல்ல சகோதரி பெரியகையே கூட கொடுக்கலாம்...இவர்கள் பிச்சைக்காரர்கள் ஆகக் கூடாது.....இவர்களும் இந்த் நாட்டுப் பிரஜைகள்தாம்.....வாழ வேண்டும்.....ஆம் நாங்கள் கண்ணாடிக் கதவுகளைக் கடந்து, சென்று இவர்களிடம் தான் வாங்குவது....பேரம் பேசாமல்....என்ற கொள்கை....
அவர்கள் அன்பாக பேசுவது கூட ஆத்மார்த்தமாக இருக்கும்...நன்றி
என் இல்லாளுக்கு ஒரு நல்ல பழக்கம் ..காய்கறி கூடையில் தூக்கி வருபவர்களிடம் பேரம் பேசாமல் வாங்குவதுடன் ,எப்பொழுதாவது டீயும் போட்டுக் கொடுப்பார் .இதனால் நட்பு தொடர்கிறது !
ReplyDeleteத ம 2
எப்பொழுதாவது டீயும் போட்டுக் கொடுப்பார் .இதனால் நட்பு தொடர்கிறது !//
Deleteஅருமை அருமை நல்ல காரியம் ஆற்றும் சகோதரிக்கு நன்றியை சொல்லிவிடுங்கள் ஐயா.
நன்றி
சிறந்த பாவரிகள்
ReplyDeleteசிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்
உண்மை தான் இவர்களிடம் பேரம் பேசவே கூடாது தான் என் கணவர் பெரிய கடைகளிலே பேரம் பேசினாலே இது என்ன பழக்கம் என்று பேசுவார். ஆனாலும் ஒரு பொருளுக்கு தகுந்த விலையை விட அதிகமாக கொடுப்பது முட்டாள் தனம் என்று சொல்வேன். ஆனால் இவர்களிடம் பேசுவது முறை யல்லவே நல்ல சிந்தனைம்மா. வாழ்க வளமுடன் ....!
ReplyDeleteஆம் சகோதரி. உண்மை தான்
Deleteநன்றி
நாட்டு நடப்பை அருமையாக சுட்டிக்காட்டியுள்ளீர்கள்.
ReplyDeleteஅந்த கடைசி பத்தி - அரசியல்வாதிகளின் தோலை உரித்து காயப்போட்டு விட்டீர்கள். ஆனாலும் அவர்கள் எருமைமாட்டு ஜென்மங்களாகி விட்டார்களே!!! என்ன செய்வது....
மனவருத்தம் என்ன செய்வது
Deleteநன்றி சகோ.