Thursday, 16 October 2014

கிருஷ்ண கானம்






மறைந்தே இருக்கிறாயடா மா...தவா    
மறந்தே இருக்கிறாயடா
மறைந்தே இருந்தா...லும் உன்னை நானறிவேன்
மறைந்தே இருந்தா...லும் உன்னை நானறிவேன் வாசுதேவா...


நிறைந்து இருக்கின்றாய்... நெஞ்சம் தன்னில்
நிறைந்து இருக்கின்றாய்... பக்தர்  நெஞ்சம் தன்னில்
பொல்லா...தவன் நீயடா கண்ணா....
பொல்லா...தவன் நீயடா

கோவிந்தா... கோபம் எதற்கு நான் விளையாடினேன்
கோவிந்தா... கோபம் எதற்கு
மையல் கூடல் வே...ண்.டா மோகாதல் தன்னில்
மையல் கூடல் வேண்டாமோ

காணா...மல் எங்கு மறைந்தாய்...கபடதாரி
காணா...மல் எங்கு மறைந்தாய்
கண்ணீர்... துளி துடைக்க வந்த கையை...
கண்ணீர்...
துளி துடைக்க வந்த கையை பற்றிக் கொண்டேன்

பரந்தா...மா பரிவோடு எனைசேர்த்துக் கொள்
பரந்தா...மா பரிவோடு எனைசேர்த்துக் கொள்...
நீயே...யெல்லாமடா கண்ணா.இப்பேதைக்கு
நீயே...யெல்லாமடா


மீண்டும் ஒரு கிருஷ்ணகானம் தந்த கிருஷ்ணருக்கு நன்றிகள்.

படம் கூகுள் நன்றி

10 comments:

  1. சிறப்பான பாடல் மிகவும் ரசித்தேன் வாழ்த்துக்கள் தோழி !

    ReplyDelete
  2. மற்றுமொரு அருமையான கிருஷ்ண கானம். அருமை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. வணக்கம் சகோதரி.!

    கிருஷ்ண கானம் அருமையாக பாடியிருக்கிறீர்கள்.! கிருஷ்ணனைப் பற்றி நினைப்பதுவே ஒரு ஆனந்தம் அல்லவா.?

    \\பரந்தா...மா பரிவோடு எனைசேர்த்துக் கொள்
    பரந்தா...மா பரிவோடு எனைசேர்த்துக் கொள்...
    நீயே...யெல்லாமடா கண்ணா.இப்பேதைக்கு
    நீயே...யெல்லாமடா//

    பக்தி பரவசத்தின் இந்த வார்த்தைகள் அற்புதம்.! பகிர்விற்கு நன்றி! மேலும் தொடர வாழ்த்துக்கள்.!

    நட்புடன்,
    கமலா ஹரிஹரன்.




    ReplyDelete
    Replies
    1. ஆமாம் கிருஷ்ணனைப் பற்றி நினைப்பது ஆனந்தம் தான்....

      நன்றி சகோ

      Delete
  4. ஆஹா கண்ணன் மீது அவ்வளவு பிரியமா. நன்றாக படுவீர்கள் போல் தெரிகிறதே ம்..ம்..ம்..அப்படியா தோழி!எனக்கு பாட வராது என்றாலும் நானும் சும்மா பாடி ப் பார்த்தேன். நன்றக உள்ளது. வாழ்த்துக்கள் தோழி !

    ReplyDelete
    Replies
    1. பாட எல்லாம் வராது...எல்லோரையும் போல் தான்...

      நன்றி சகோ

      Delete
  5. வணக்கம்
    இரசிக்கவைக்கும் படல் வரிகள் பகிர்வுக்கு நன்றி த.ம2

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. # பக்தர் நெஞ்சம் தன்னில்
    பொல்லா...தவன் நீயடா கண்ணா....#
    பக்தை என்றிருக்க வேண்டுமோ )
    த ம 3

    ReplyDelete