ஜலவாயு மென்தென்றல்
ஆட்சி செய்ய வந்து விட்டாள்
இதமோடு இன்பமாய் அணைக்க வருகிறாள்
செவிகள் சிலிர்க்கையிலே
மெய்யும் சிலிர்த்ததடி தோழி
மென்மையானான்வெயிலோன்
உரைக்குள் அடங்கியவேர்வைத்துளி
வெட்கம் கொண்டாளோ பருவமங்கை
ரசிக்கிறேன் அவளின் அழகில் மயங்கி
கார்முகிலும் கதிரோனும் கண்ணாமூட்சியாட
வானில் ஓவியச்சிறார்கள் வந்துதித்தார்கள்
கருப்பன், செவ்விந்தியன்,வெள்ளையன் என
அங்கோர் உலகம் தோன்றியதடி தோழி
முன்பனிக்காலம் தொடங்கியதே...
முத்தம் சிந்தும் பனித்துளிகள்
மூடிய காலை வெளிச்சத்திலே
முகமோ சாரள வெளியினிலே...!
கொஞ்சலில் இயற்கை தந்ததுவே
உள்ளம் நிறைந்து வழிந்தனவே
ஈர்ப்பு ஏனோ வந்ததடி...
உன்னை நினைவில் கொண்டதடி
குழம்பியின் ஆவியும் பனிப்புகையும்
கைகள் கோர்த்துக் கொண்டனவே
கன்னம் தட்டிய பனி உரசல்
அதரம் குழம்பிசுவைக்கையிலே
ஓடக் கைகள் ஆட்டியதே...!
வந்தனம் சொன்னேன் அவைகளுக்கு
வாட்டிடும் இனிமேல் என் செய்ய...?
கடந்து போகும் காலமாற்றம்
கடப்போம் அதனுடன் நாம் நடந்து..
கதிரோன், குளிரோன் கைபிடித்து
ஆள்வோம் ஒவ்வொரு ஆண்டையும் நாம் தோழி
ஆள்வோம் ஒவ்வொரு ஆண்டையும் நாம் தோழி
படம் கூகுள் நன்றி
அருமை. அருமை. எல்லா வரிகளும் அற்புதம். வாழ்த்துக்கள்
ReplyDelete
ReplyDeleteஉங்களுக்கு உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இதயகனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்..
வாங்க சகோ நிறைய நாட்கள் ஆகிவிட்டன.
Deleteதங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
தீபாவளி வாழ்த்துக்கள்.
மிக மிக அற்புதம்
ReplyDeleteபகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா
Deleteதீபாவளி வாழ்த்துக்கள்.
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அம்மா.
Deleteதீபாவளி வாழ்த்துக்கள்.
இங்கு தமிழ்நாட்டில் கொட்டோ கொட்டென்று கொட்டிக் கொண்டு இருக்கிறது, மழை! உங்களுக்கு முன்பனிக் கால குளிரின் வாட்டம். கவிதை வரிகளில் பனியின் சுகம்! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteத.ம.2
இங்கு மழை பொழிவது என்பது அரிதான ஒன்று. வருடம் சிறுமழை 3 அல்லது 4 முறை மட்டுமே வந்து விட்டுச் செல்லும். அதிலிருந்து குளிர் ஆரம்பித்து விடும். வரும் மழை தெருக்களை நனைத்து விட்டு போய்விடும்.
Deleteஇப்போது அந்த மற்றத்தின் ஆரம்ப..... சுகம் என்னை எழுதத்தூண்டியது.
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா
தீபாவளி வாழ்த்துக்கள்.
சிறந்த பாவரிகள்
ReplyDeleteசிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
Deleteதீபாவளி வாழ்த்துக்கள்.
மிக அருமை!
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் யாவருக்கும்
இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி இளமதி
Deleteதீபாவளி வாழ்த்துக்கள்.
வணக்கம்
ReplyDeleteஅற்புதமான வரிகள் நன்றாக உள்ளது.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் !
ReplyDeleteசிறப்பான வரிகள் தோழி ! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் .
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
Deleteதீபாவளி வாழ்த்துக்கள்.
ஆஹா பனிக்காலம்! அதை எவ்வளவு அழகான வரிகளில் கவிதையாய் வடித்துள்ளீர்கள்! அருமை!
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருகும் எங்கள் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
Deleteதீபாவளி வாழ்த்துக்கள்.
அருமையான கவிதை !
ReplyDeleteதங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும்
என் மனம்கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள் .....!