Thursday, 9 October 2014

கிருஷ்ண கானம்

வாசிப்பு பாடலாக






நீயேன் அழைக்கவில்லை முராரி….
நிந்தன் பாதம் காணவில்லையே முராரி

ஆடுவோமே ஊஞ்சள் ஆகாயத்தில்
அன்பனே வா வசந்த மரம் நோக்கி

எங்கிருக்கிறாய் நீ கருணா மூர்த்தி
ஏகாந்தமாய் உன்னுடன் இருக்க வாராய் விரைந்து

காற்றினிலே குளிர்சியில்லை
காண்பவையாவும் கருத்தில் நிற்கவில்லை

மலரின் மணமது ஏனோ சுகந்தம் தரவில்லை
மற்றவரின் பார்வையில் பித்தனாகி நிற்கின்றேன்

நின்னுரு கண்டிலேனாகின் உன் பெயருக்கு
நிந்தை வராதோ முகுந்தா சொல்

கண்ணப் பித்து கொண்டு கதறுகிறேன் கேட்கலையோ
கதிகலங்கி நிற்பது உண்மைதானோ என நீ நிற்கிறாயா?

உன்னாட்டத்தில் எனை சேர்த்துக் கொள்
உன்னடி சரணம் அடைந்திட்டேன் அல்லவா

எங்கும் இருக்கும் நீ இல்லாதவனாய் ஏன் நிற்கின்றாய்
கள்ளத்தனமாய் ஓளிந்தது போதுமடா

திருவுரு அற்ற ஒளியோனே வா என்
திருவுரு இல்லா ஒளியோடு கலவாயப்பா

மானிடனாய் நடக்க தெரியவில்லை வாசுதேவா
மானிடம் கடக்க வருவாய் நீ  வாசுதேவகிருஷ்ணனாய்

காரியம் யாவும் நீயேயப்பா
கருத்தில் கருத்தை தருவதும் நீயேதான்

காரணதாரி நீ இருக்க கருத்திலையெனக்கு
காப்பதுன் கடன் கருவி நானாக

காலமெல்லாம் காலார நின் கைபிடித்து
கடக்க வரம் தருவாயப்பா.  



10 comments:

  1. இதுக்கும் மேலே ஒரு காரிகை எப்படிவெட்கத்தை விட்டு காதலனை அழைப்பாள்?சீக்கிரம் வந்திடு கிருஷ்ணா)
    த ம 1

    ReplyDelete
  2. இப்படி எல்லாம் அருமையாக கவி எழுதினால் அந்தக் காரணதாரி அவர் கை பிடித்து கடக்க வரம் தராமல் இருப்பாரா என்ன!?

    ReplyDelete
  3. ஆஹா அருமையான ஒரு கண்ணன் கீதம். ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. ரசித்தமைக்கு நன்றி சகோ

      Delete
  4. எங்கும் இருக்கும் நீ இல்லாதவனாய் ஏன் நிற்கின்றாய்
    கள்ளத்தனமாய் ஓளிந்தது போதுமடா
    அருமை அருமை தோழி வாழ்த்துக்கள் ....!

    ReplyDelete
  5. வணக்கம் சகோதரி..!

    அருமையான, பாடல்.! கண்ணனைப் பற்றி பாடல்கள் காலமெல்லாம், இனிதானவை.!

    \\காரணதாரி நீ இருக்க கருத்திலையெனக்கு
    காப்பதுன் கடன் கருவி நானாக

    காலமெல்லாம் காலார நின் கைபிடித்து
    கடக்க வரம் தருவாயப்பா. //

    நல்லதோர் வரிகள்.! நானும் இனி தங்களை தொடர்கிறேன்.!
    தங்கள் வருகைக்கு நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  6. மிகவும் ரசித்தேன் வாழ்த்துக்கள் தோழி !

    ReplyDelete
  7. சிறந்த பக்திப் பா வரிகள்
    தொடருங்கள்

    ReplyDelete