Saturday, 4 October 2014

குழிப்பணியாரம் - இனிப்பு

செட்டி நாட்டு இனிப்பு குழிப்பணியாரம்....இதோ...

செவ்வாய் கிழமை லலிதா சகஸ்ரநாமத்திற்கு பிரசாதமாய்  இனிப்பு பணியாரம்.






தேவையான பொருட்கள்

இட்லி அரிசி - 3 கோப்பை
பச்சரிசி - 1 கோப்பை
உளுந்து - 1/2 கோப்பை
வெந்தயம் - 1 தே.க

இவை அனைத்தையும் ஊறவைத்து முதல் நாள் ஆட்டி உப்பு போடாமல் கெட்டியாக கரைத்து வைக்கவும்.

அடுத்த நாள் காலை இந்த மாவில் பாதியை  எடுத்துக் கொள்ளவும். 

மீதி காரப் பணியாரத்திற்கு... நாளை பதிவில்



கருப்பட்டி வெல்லம் இரண்டும் சேர்த்து 3/4 ல் கோப்பை எடுத்துக்கொண்டு நனைய சிறிது நீர் சேர்த்து அடுப்பில் வைத்து கரைக்கவும். பின் வடிகட்டி மாவில் விட்டு கரைக்கவும்.  1சிட்டிகை உப்பு,1 சிட்டிகை சுக்கு,சிறிது ஏலம் சேர்த்து கலக்கவும்.  










குழிப்பணியாரச் சட்டியில் எண்ணெய்
விட்டு காயவும்











மாவை ஊற்றவும்.













பின் திருப்பி விடவும்.












வேகவும் எடுக்கவும்.

விருப்பம் இருந்தால் மாவுடன் தேங்காய்த் துருவலை சேர்த்துக் கொள்ளலாம்.







       காரம் , இனிப்பு பணியாரம் இதோ. காரம் அடுத்த பதிவில் இடுகிறேன்.








                  பஞ்சு போன்று மிருதுவான , சுவையான இனிப்பு பணியாரம்.



18 comments:

  1. Super...!!! tks.

    ReplyDelete
  2. குழிப்பணியாரம் இட்லி அரியிலா?? புதியதா இருக்கு. பார்க்க நன்றாகவும் இருக்கு. எவ்வளவு நேரம் ஊறவிடவேண்டும் அரிசி. நன்றி உமையாள்.

    ReplyDelete
    Replies
    1. 4 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். நன்கு மைய அரைக்க வேண்டும்.

      நன்றி பிரியசகி உடனே வந்து கருத்திட்டமைக்கு.

      Delete
  3. ஸ்ஸ்ஸ்... நாவூறுதே பார்க்க!..:)
    பஞ்சு போல கோல்டன் கலரில் சூப்பர்!

    அருமை! நல்ல பகிர்வு!
    மிக்க நன்றி உமையாள்!

    காரத்தையும் உடனேயே தாருங்க.. செய்து பார்த்திடுவோம்!

    ReplyDelete
    Replies
    1. நாளை பார்த்து விட்டு உடனேயே செய்யுங்கள். அப்புறம் எப்படி இருந்துச்சுன்னு மறக்காம சொல்லனும் சரியா..சகோதரி...நன்றி

      Delete
  4. ஆஹா! நாக்கு நீண்டு ஸாரி ...கை நீண்டு அந்தப் பணியாரத்தை எடுக்க முயற்சி செய்துச்சு....ம்ம்ம்ம் என்ன செய்ய ஃபோட்டோ ஆகிடுச்சே! இல்லனா காணாம போயிருக்கும்!!!மிக்க நன்றி சகோதரி! ஃபோட்டோல பணியாரத்துக்கு! ஹாஹஹாஹ்....கீதா வீட்டுல செய்வதுண்டு! கீதா துளசி வீட்டுக்குச் செல்லும் போது செய்வதுண்டு!

    அது சரி நாளைக்குத்தான் காரப் பணியாரமா! அப்போ இந்த மாவு என்னாகும்?!!!?!?! ஹஹஹ்(சும்மா சகோதரி! தமாஷ்....அந்த மாவு உடனெ செய்யப்படும்னு தெரியும்.....நீங்க அத எடுத்து வைங்க நாளைக்கு நு சொல்லிருக்கீங்கல்ல...அதான்...

    ஒரு சம்பவம் நினைவுக்கு வருது....இப்படித்தான் கீதாவின் தோழி ஒருவர் ஒரு சமையல் குறுப்பு பார்த்து செய்ய முயற்சி செய்ய....அதில் அடுப்பை ஏற்ற வேண்டும் என்று குறிப்பாகச் சொல்லாததால் அவர் ஏற்றவே இல்லை. அவர் என்னடா இது ஸ்வீட் வரவே இல்லை! ரிசிப்பி தவறு என்று சொல்லி .....செம காமெடி.....ஸ்வீட் தண்ணியாகவே இருந்தது!

    ReplyDelete
    Replies
    1. ஆஹா! நாக்கு நீண்டு ஸாரி ...கை நீண்டு அந்தப் பணியாரத்தை எடுக்க முயற்சி செய்துச்சு....ம்ம்ம்ம் என்ன செய்ய ஃபோட்டோ ஆகிடுச்சே! இல்லனா காணாம போயிருக்கும்!!! //ஹஹஹஹஹஹா...

      ஆமா போட்டோ எடுத்து வைத்து இருக்கேன்...பணியாரம் ஸ்வாகா ஆகிடுச்சு...ஸாரி

      ஐய்யய்யோ....நான் அடுப்பை ஏற்றவும் அப்படின்னு போடலையே பணியாரம் மாவாவுல இருக்கும்... (சும்மானாலும்)

      Delete
    2. ஆஹா நல்ல காலம் உமா சகோதரர் பக்கத்து வீட்டில் இல்லை. இருந்திருந்தால் என்ன நிலைமை வாசம் எல்லாம் உறிஞ்சியே எடுத்திருவார் போல.

      Delete
    3. குழிப்பணியாரம் ம்..ம்..ம்.. யம்மி செய்து பார்க்க விருப்பம் தான் ஆனால் நேரம் இல்லை. இலகுவான முறையில் பணியாரம். நன்றி நன்றி தொடர வாழ்த்துக்கள்....!

      Delete
    4. ஹஹஹஹஹஹா....!

      நன்றி இனியா. நேரம் கிடைக்கும் போது செய்து பார்த்துவிட்டால் போச்சு..

      Delete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. 'நேற்று இன்று நாளை' பதிவை சுவைத்தேன் !
    த ம 1

    ReplyDelete
  7. குழிப்பணியாரம் சிறுவயதில் நான் மிகவும் விரும்புவேன். பழைய ஞாபகம் வந்து வி்ட்டது பரவாயில்லை அடுத்தவாரம் எனது அன்னை கையால் கண்டிப்பாக உண்ணுவேன்.

    ReplyDelete
  8. இனிப்பு குழிப்பணியாரம் படமே அருமையாக இருக்கிறதே. கண்டிப்பாக சுவையும் நன்றாக தான் இருக்கும்.

    ReplyDelete