Wednesday, 5 November 2014

பாலாஜிக்கு பா இரண்டு

இன்று இரண்டு பாடல்கள்.
பாமாலை பாடல் 1எண்ணில் அடங்கா ஏழுலகில் அடங்கா
தண்ணில் அடங்கும் அவன் தாள்படிவாய்
கண்ணில் நிறைவான் கருத்தில் உறைவான்
சுவைவாய் அவன் பெயர் மொழி

அறிவாய் அறிவாய் அறிவாய் அறியாது
அறியா அறியா அறியா கிடந்திட்டே
அவன் சரணமே கதியாய் கதியாய்
காத்திட வேண்டி டுவாய் அகத்தே

உண்ணுமுன் ஈந்தே உவப்பில் மகிழ்ந்தே
உடனிருக்க உயிர் கரைந்தே மறப்பீர்தனை
நெடிந்து நிற்போன் பாரீர் நீக்கமற
நீங்கள் வாரீர் மாதவனை வரிக்க

மறக்க மறக்க உலகை மறக்க
உலகே அவன் அவனேயுலகு யென்றே
ஓப்பி யும்மை உலக ளந்தோனிடம்
ஓப்பிப்பீர் ஓப்பிப்பீர் ஒரு மனதாய்

கடக்க வைத்திடுவான் காத்தே யிருந்திடுவான்
கரடுமுரடு யாவிலும் கால் பதியா
கைபிடித்தே போவான் அழைந்தே நம்மை
பாலாஜி அப்பா யிருக்க பயமேன்     பாமாலை பாடல் 2இரண்டாவதாக பாதம் படத்தை போட்டவுடனேயே பாமாலை வந்து விட்டது.பாதம் வந்தது கிங்கிணி பாதம் வந்தது
பணியு மென்றது பக்தி தந்தது
மோகம் கொள்ள செய்து என்னை
கைது செய்து அருளவென்றது

நிற்கும் நிலை யறிய வில்லை
நீண்டு கிடந்தேன் கண்கள் விழிந்திருந்தே
கலகல வென்று அவன் நகைத்து விட்டான்
கதறி யழுதேன் காரணமின்றி

பொன்னு முகப் பாத மிரண்டும்
அசையா தென்னை யாட்டி வித்தது
பாமாலை விரிய வென்றே அடியை
உமையாண்டாளுக்கு ஈந்து சென்றது.படம் கூகுள் நன்றி.


மீண்டும் பாமாலையை என்னில் தொடுத்த இறைவா நன்றி நன்றி.
28 comments:

 1. வணக்கம்

  சிந்திய வரிகள் எம்சிந்தனைக்கு பசுமையை ஊட்டுகிறது..
  பகிர்வுக்கு நன்றி

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. உடனடியாய் வந்து
   பசுமையை ஊட்டுகிறது // எனச் சொல்லியதற்கு நன்றி சகோதரரே

   Delete
 2. பாடல்கள் அருமை சகோதரி!
  படித்தே வருகிறேன் அனைத்தையும்!
  நன்றி

  ReplyDelete
  Replies
  1. படித்தே வருகிறேன் அனைத்தையும்!//

   அறியாதிருந்தேன் அறிந்து மகிழ்ந்தேன் யாம்
   உடன்பிறவாதான் உவந்த வாக்கு

   நன்றி சகோதரரே.

   Delete
 3. வணக்கம் சகோதரி.!

  பாலாஜியின் அழகு வதனமும், தங்களுக்கு பாமாலை வரவழைத்த பாதங்களும், மனதில் பக்தியை உண்டாக்கியது! பரந்தாமன் மனம் மகிழும், பக்தி மணமுள்ள பாமாலைகள் இரண்டும் மிக நேர்த்தி.! அனைவருக்கும் பாலாஜியின் அருள் சிறக்க பிரார்த்திக்கிறேன்.!
  பகிர்ந்தமைக்கு நனறி.!

  நட்புடன்,
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
 4. பாமாலை அருமை சகோதரி.
  "//இரண்டாவதாக பாதம் படத்தை போட்டவுடனேயே பாமாலை வந்து விட்டது//" - உங்களின் திறனை என்னவென்று சொல்லி பாராட்டுவது.
  இன்னும் இன்னும் தாங்கள் பாமாலை இயற்றுவதற்கு அந்த இறைவன் அருள் புரியட்டும்

  ReplyDelete
 5. பெருமாளின் படத்தை முழுமையாக போட்டிருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
  இதே பெருமாளின் படம் தான் பல வருடங்களாக என்னுடைய அலுவலக கணிப்பொறியில் "desktop picture" ஆக அலங்கரித்துக்கொண்டிருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. ஓ..அப்படியா சகோ. இறைவனின் அருள் என்றும் உங்களுடன் இருக்கட்டும். நான் ரெம்ப பெரியதாக ஆகிவிடும் என நினைத்து இப்படத்தைப் போட்டேன்.

   Delete
 6. அதி அற்புத பாமாலையைத் தங்கள் மூலம்
  தந்த அந்த பாலாஜியை நாங்களும்
  சேவித்துக் கொள்கிறோம்
  மனம் தொட்ட பாமாலை
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. Replies
  1. வாருங்கள் சகோ நிறைய நாட்கள் ஆகிவிட்டது.
   நலம் தானே.
   நன்றி

   Delete
 8. சிறந்த பக்திப் பா வரிகள்
  தொடருங்கள்

  ReplyDelete
 9. பாலாஜிக்கு பக்தியோடு பரவசமாய் பாடிய பாமாலை அருமை
  பாதம் பணிய பகர்வான் விடை
  அவன் அருள் அனைவருக்கும் கிட்டட்டும் தோழி வாழ்த்துக்கள் ....!

  ReplyDelete
 10. பாமாலையை பூமாலையாக கோர்த்த விதம் அருமை.

  ReplyDelete
 11. வணக்கம் !

  சிறப்பான பாமாலை வாழ்த்துக்கள் தோழி !

  ReplyDelete
 12. ஆகா ... பாக்கள் அருமை .. பெருமாளின் படம் பார்த்த உடனே மனம் குளிர்ந்து விட்டது . கூடவே பாக்களும் ... அருமை அருமை

  ReplyDelete
 13. பெருமாளின் படம் பார்த்த உடனே மனம் குளிர்ந்து விட்டது //

  அவரின் சக்தி அப்படி நன்றி சங்கீதா

  ReplyDelete
 14. அருமையான பாடல்.....

  அவர் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்!

  ReplyDelete