Tuesday, 4 November 2014

Potato-square-gravy

வித்தியாசமான கிரேவி இது.

புது சுவையாக இருக்கும்.




தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு பெரிது - 3
சர்க்கரை வள்ளிக்கிழங்கு பெரிது - 3
பூண்டு - 15
வெங்காயம் பெரிது - 3
தக்காளி பெரிது - 2
மஞ்சள் தூள் - சிறிது
உப்பு - ருசிக்கு

அரைக்க வேண்டியது

புளி - சிறிய எலுமிச்சை அளவு
பழமிளகாய் - 4
மிளகு - 8
சோம்பு - 1 1/2 தே.க
பொட்டுக்கடலை - 1 1/2 மே.க.







கிழங்குகளை நறுக்கி மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும்.

தாளிக்க வேண்டியது

எண்ணெய் - 5 மே.க
கடுகு - 1 தே.க
உ.பருப்பு - 1 தே.க
பட்டை - 2 இலை
கிராம்பு -2
பட்டை - 1துண்டு

                                                தாளிக்கவும்





                    பூண்டு சேர்த்து வதக்கவும்.






        வெங்காயம் சேர்த்து வதக்கவும்.





               தக்காளி சேர்த்து வதக்கவும்.




 வேகவைத்த கிழங்குகளை ஒன்றிரண்டாக மசித்துக் கொண்டு சேர்க்கவும்..







                          அரைத்ததை ஊற்றவும்.











உப்பு சேர்த்து நன்கு சாரவும், இறக்கி வையுங்கள்.









இந்த கிரேவியை எல்லாவற்றிற்கும் சேர்த்துக் கொள்ளலாம். ( இட்லி ,தோசை, சப்பாத்தி, அடை, கலந்த சாதம்.....)

நான் இதை தேங்காய் சாதத்திற்கு தொட்டுக் கொள்ள செய்தேன்.

சூப்பர் காம்பினேஷனாக இருந்தது.

சாய் பஜனைக்காக அளவு கூடுதலாக செய்தேன். நீங்கள் குறைத்துக் கொள்ளுங்கள்.

வாசம் ஜம்னு இருக்கும். ஒகே..ஒகே..வருகிறேன்.



24 comments:

  1. புகைப்படம் நாவில் எச்சில் ஊறவைத்து விட்டது.

    ReplyDelete
    Replies
    1. புகைப்படம் எடுக்கவும் கற்றுக் கொண்டிருக்கிறேன்

      நன்றி சகோ

      Delete
  2. இந்த கிரேவி எல்லாத்துக்கும் பயன்படுமா!!!
    பகிர்ந்துக்கொண்டதற்கு மிக்க நன்றி

    ReplyDelete
    Replies
    1. ஆம் சகோ எல்லாவற்றிற்கும் பொருத்தமாக இருக்கும். ருசித்துப் பாருங்கள்.

      Delete
  3. கிரேவி குறிப்பு அசத்தலாக இருக்கு. எல்லாவற்றிக்கும் பயன்படும் என்பது கூடுதல் தகவல். செய்வேனே இதனையும். உங்க ப்ளஸ் பகிரும் படங்கள், simple & taste குறிப்புகள் தாம். Thanks umayal.

    ReplyDelete
    Replies
    1. என்ன பொருத்தம் ஆஹா...!!! என்ன பொருத்தம்...!!!

      செய்வேனே இதனையும். // செய்யுங்கள் மகிழுங்கள்.

      நன்றி தோழி

      Delete
  4. மிக வித்தியாசமான ,சுவையான கிரேவி அக்கா ... செய்முறை படங்கள் எல்லாமும் சூப்பர் ...வாழ்த்துக்கள் அக்கா ...

    ReplyDelete
    Replies
    1. ஆம்...சங்கீதா.. வித்தியாசமானது தான்

      நன்றி

      Delete
  5. சிறந்த செய்முறை வழிகாட்டல்
    தொடருங்கள்

    ReplyDelete
  6. சூப்பர்ப்பா! ரொம்ப நல்லாருக்கே! செய்துட்டா போச்சு!

    ReplyDelete
    Replies
    1. செய்துட்டா...போச்சா... செய்துட்டு சொல்லுங்கள்.

      நன்றி

      Delete
  7. வணக்கம் சகோதரி.!

    உண்மையிலேயே மிக வித்தியாசமான கிரேவிதான்.! படங்களையும், செய்முறைகளையும்,பார்க்கும் போதே நாவில் சுவை தெரிகிறது. மனமும் இதை சாப்பிட வேண்டுமென விரும்புகிறது.! சாதத்திற்கும் தொட்டு கொள்ளலாமா? பகிர்ந்தமைக்கு நன்றி சகோதரி.!

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. சாதத்திற்கும் தொட்டு கொள்ளலாமா?//

      ஆம் சகோதரி நான் தேங்காய் சாதத்திற்குத் தான் செய்தேன்

      நன்றி தோழி

      Delete
  8. படிக்கும் போதே வாயில் எச்சில் ஊறுகிறது.... செய்திட வேண்டியது தான்.
    நன்றி தோழி.

    ReplyDelete
    Replies
    1. செய்து சுவைத்திடுங்கள்.

      நன்றி தோழி

      Delete
  9. புதுமையான ரெசிபி...
    அழகாய் ஒவ்வொன்றிற்கும் படங்களுடன் விளக்கம்...
    அருமை சகோதரி.

    ReplyDelete
  10. செய்தும் பார்த்த்துவ் விட்டேன்....சூப்பர்! சகோதரி! மிக்க நன்றி! சர்க்கரை வள்ளிக் கிழங்கு பதிலாக மஞ்சள் பூஷணிக்காய் சேர்த்தும் செய்தென்.....நல்லாருக்கு....மற்ற காய்கள் போட்டு செய்தாலும் பொருந்தும் என்றுதான் தோன்றுகின்றது1 மிக்க நன்றி சகோதரி - கீதா

    ReplyDelete
    Replies
    1. செய்தும் பார்த்து விட்டேன்....சூப்பர்! சகோதரி! //

      செய்து பார்த்து விட்டு இன்னும் பல ஐடியாக்கள் சொன்னமைக்கு நன்றி தோழி...

      நானும் செய்து பார்க்கிறேன்..

      Delete
  11. பார்க்கும்போதே நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. ஒரு நாள் செய்து பார்த்துவிட வேண்டியது தான்!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ

      தங்கள் முதல் வருகை என நினைக்கிறேன்.

      செய்து பாருங்கள் சகோ. நன்றி

      Delete
  12. உருளைக்கிழங்கு,சர்க்கரைவள்ளிகிழங்கு இரண்டும் சேர்த்து வித்தியாசமான காம்பினேஷன் மற்றும் எல்லாவற்றுக்கும் பொருத்தமாக இருக்கும் என்று சொல்லி இருக்கிறீர்கள்,விரைவில் செய்கிறேன்....

    நன்றி

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  13. வித்தியாசமாக இருக்கிறது. குறித்துக் கொண்டுள்ளேன். நன்றி.

    ReplyDelete