இதை பார்த்தவுடனே....
உங்களுக்கு என்ன தோணுதுன்னு...
உடனே போடுங்க கருத்தை..!!!
--------------------------------------------------------------------------------------------------------------------------
அன்று மதியம் திடீரென இருட்டிக் கொண்டு மழை பெய்தது. சற்று நேரத்தில் விட்டு விட்டது.
பால்கனிக்கு போய் நின்றால்...வானில் மேகங்கள் விலக ஆரம்பித்தன. வானவெளிராக தெரிய..மேகங்களின் உருமாற்றம்....விரைவாய் மாறிக் கொண்டு இருந்தன. காரணம் வாயு பகவான் தான்.
அவர் இவர்களை அடுத்த ஊருக்கு அழைத்துச் செல்கிறார் போல.... !
மேகங்களில் உருவம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றாக ... தெரியும்.
ஒரு பொருள்..பல பார்வைகள்...!!! அந்த சுவாரஸ்யங்கள் தானே...படைப்புக்களாய்...வருகிறது.
எனக்கு இந்தப் படத்தை பார்த்தவுடன்...ஒரு நாய் அமர்ந்து கொண்டு பக்கத்து மேகமும் நம்முடன் வருகிறதா../ என ஆவலாய் பார்ப்பது போல் தோன்றியது.
சரி நமக்கு இப்படி... மற்றவர்களுக்கு எப்படி அப்படின்னு இப்படி புகைப்படத்தை பகிர்ந்து கொண்டேன்...எப்படி..? சும்மா ஜாலிக்கு தாங்க.
எல்லோரும் வந்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நன்றி நன்றி.
மழை வரப்போகுதோ....
ReplyDeleteமழை வந்து போனவுடன் எடுத்தது.
Deleteநன்றி சகோ
ReplyDeleteஉமையாள்காயத்ரி,
ஆஆஆ, இன்னிக்கு மழை வரப்போகுது, ஜாலிதான் !
ஒருவேளை எகிப்தில் எப்படியோ?
எனக்கென்னமோ சூரியன் இருக்கும் திசையை நோக்கிப் படமெடுத்து இருட்டாக்கிக் காட்டியதுபோல் தெரிகிறது.
மழை வந்து போனவுடன் எடுத்தது...எகிப்தில் தான்
Deleteஎனக்கென்னமோ சூரியன் இருக்கும் திசையை நோக்கிப் படமெடுத்து இருட்டாக்கிக் காட்டியதுபோல் தெரிகிறது.//
எனக்கென்னமோ சூரியன் இருக்கும் திசையை நோக்கிப் படமெடுத்தது...தான் ஆனால் எதையும் மாற்றவில்லை. மதியம் திடீர் என கருத்து மழை பெய்தது. மழை விட்டவுடன் பார்த்தால்..மேகம் அழகாக இருந்தது..உடனேயே கிளிக்கிட்டேன்.
நன்றி தோழி
வான வீதியில் மேக ஊர்வலம்...
ReplyDeleteஆம்..வான வீதியில் மேக ஊர்வலம் தான் சகோ.நன்றி
Deleteபொழுதுக்கு உடைமாற்றும்
ReplyDeleteவிண் மங்கையே!
நீருண்டு கருவாகி
கார்மேகம் நானும் - உனக்காக
உடையொன்று மாற்றுகிறேன்
வெண்பஞ்சு கூட்டமாய்
அலைந்து திரிந்த நான்
கறுத்துப்போன அவலத்தை
நினைத்து நினைத்து
கண்ணீர் விட்டு கதறி
பூமிப்பந்தினை முழுதாய்
நனைக்கப் போகிறேன்!
நான் சிந்தும் கண்ணீரை
காண உன் மனம் சகியாது!
ஆகையால் என்னையே
என் கறுத்த உடலையே
உனக்கான ஆடையாக்கிவிட்டு
கண்ணீர் தீர்ந்த பின் வருகிறேன்
வெண்ணிற ஆடை போர்த்த!!
வாருங்கள்..நலம் தானே
Deleteஆஹா...அருமையான கவிதை...
வெண்பஞ்சு கூட்டமாய்
அலைந்து திரிந்த நான்
கறுத்துப்போன அவலத்தை
நினைத்து நினைத்து
கண்ணீர் விட்டு கதறி...//
சூப்பராக இருக்கிறது.
நன்றி சகோ
பூமி முழுவதையும் முற்றுகை இட்டுவிட்டதோ புகைமண்டலம் என்று எண்ணத் தோன்றுகிறது. தோழி .
ReplyDeleteஆம் முற்றுகையிட்டு விட்டது நன்றி தோழி
Deleteமேகம் கருக்குது... மின்னல் சிரிக்குது...
ReplyDeleteசாரல் அடிக்குது... இதயம் பறக்குது...
மேகம் கருக்குது... மின்னல் சிரிக்குது...
Deleteசாரல் அடிக்குது... இதயம் பறக்குது...//
ஆம் அப்படித்தான் இருந்தது அன்று மதியம் ஜில்லுன்னு...நன்றி சகோ
மலைப் பயணம் செல்கையிலே
ReplyDeleteவானமுகில் ஓட்டத்தை
படம் பிடித்தாற் போல தெரியுதே!
மலைப்[ பயணம் செல்லவில்லை..ஐயா..நாங்கள் இருப்பது எட்டாவது மாடியில்..அதுவே அப்படித்தான் என்கிறீர்களா..?
Deleteஅன்று மதியம் மழை பெய்து விட்டு உடனேயே கலைய ஆரம்பித்து விட்டது. வானத்தின் ஜாலத்தை பார்த்தவுடன்..படம் எடுத்து விட்டேன். நன்றி
கண்ணன் தேர் ஓட்டுவது போலவும் , அசுரன் எதிரே வந்து நிற்பது போலவும் ,எனக்கு தெரியுது அக்கா (ஓவரா யோசிக்கறேனோ ...)
ReplyDeleteமேகங்களைப் பார்க்கும் போது அது ஒவ்வொருவர் கண்ணுக்கும் ஒவ்வொரு விதமாக தெரியும்...அது தான் அழகு சுவாரஸ்யம் இல்லையா..?
Deleteநன்றி சகோ
படத்தை பார்க்கும் போது இடியுடன் கூடிய மழை தான் !!
ReplyDeleteஆம் இடியுடன் மழை பெய்து விட்டு அகன்றது.
Deleteநன்றி சகோ
அட இதை பத்தி நேற்று தான் ஒரு பதிவு போட்டேன்.http://makizhnirai.blogspot.com/2014/11/under-my-sky-1.htmlபாருங்களேன்:)
ReplyDeleteஅட அப்படியா...ரசனை தான்.
Deleteஅதோ மேக ஊர்வலம் .இதோ மின்னல் தோரணம் என்ற பாடலைப் பாடத் தோணுதே :)
ReplyDeleteத ம +1
அஹா..நல்ல பாடல் ஐயா.
Deleteஅன்றைக்கு மழை பெய்ததா? நான் கொஞ்சம் லேட்டா வந்துட்டேன். (நம்ம ஊர் வானிலை அறிவிப்பாளர்கள் மாதிரி!!!)
ReplyDeleteநான் கொஞ்சம் லேட்டா வந்துட்டேன். (நம்ம ஊர் வானிலை அறிவிப்பாளர்கள் மாதிரி!!!)//
Deleteவேலைல கவனமாக இருக்கும் போது வெளியே என்ன நடக்குதுன்னு தெரியாதுல்ல..ஹஹஹ...
நன்றி சகோ
மழை வருது மழை வருது குடை கொண்டுவா.....
ReplyDeleteவான் மேகம் பூப்பூவாய் தூறும்....
எம்பா அன போட்டுருக்கற துணி எல்லாம் எடுத்து வை உள்ள.....வத்தல், சாம்பார்தூள் அரைக்க காய வைச்சதெல்லாம் கொண்டுவாபா உள்ள....
கற்பிணியாய் கரிய மேகம் திரண்டு
டெலிவரி செய்யவிருக்கும் மழையை
தமிழ்நாட்டில் பிரசவிக்க
அனுப்பிவிடுங்கள்!
வறண்டு கிடக்கும்
நாங்களும் சுகிக்கின்றோம்
மழையின் பூரிப்பில் குழந்தைகளாய்!
தண்ணீர் குடங்களையும் குறைப்பதற்காக!
ஆஹா...சும்மா பாட்டு வரிசையாக வருகிறதே...
Deleteஇடையில துணி,வத்தல்,மிளகாய்ப் பொடிக்கு.. ன்னு... அடடா...ஆ
கவிதை கொட்டுகிறதே...
தண்ணீர் குடங்களையும் குறைப்பதற்காக!//...
இதோ அடுத்த மழை வந்தால் உடனேயே திருப்பி விட்டு விடுகிறேன்...ஆனா...நான் சொன்னா கேட்குமா...? பார்க்கலாம் ஆசையா அழைப்பை கேட்டுக்கோன்னு சொல்கிறேன். சரியா சகோ