Saturday, 22 November 2014

தேங்காய்பால் வெந்தயக் கஞ்சி






தேவையான பொருட்கள்

ப.அரிசி - 1 கைப்பிடி
பூண்டு - 5
வெந்தயம் - 1/2 தே.க
தேங்காய் பால் - 1/2 டின்
உப்பு - ருசிக்கு





அரிசியை சுத்தம் செய்து குக்கரில் இடவும். பூண்டு, வெந்தயம் சேர்க்கவும்.









1/4 டின் பால் விடவும். 1  டம்ளர் தண்ணீர் விட்டு வேக விடவும்.









வெந்தபின் உப்பு சேர்த்து கரண்டியால் நன்கு கிண்டி விடவும். சாதம் குழைந்தும் குழையாமலும் இருக்க வேண்டும். (குக்கர் திறந்தவுடனேயே வாசம் நன்கு இருக்கும்)





மீதி 1/4 டின் பால் விட்டு முதல் கொதி வரும் போதே அடுப்பை அணைத்து விடவும்.



தேங்காய் பால் கஞ்சி தயார்.... சும்மா வாசம் கம்முன்னு இருக்கும்.

வாய்புண், உடல் சூடு, இவை இருக்கும் போது இக்கஞ்சி செய்து சாப்பிட்டால் நல்ல குணம் தெரியும்.

வாரம் ஒரு முறை செய்து சாப்பிட உடல் நன்கு இருக்கும்.

எங்களுக்கு எங்கள் அம்மா இவ்வாறு செய்து தருவார்கள். வாய் புண்ணாக இருக்கும் போது சாப்பிட கஷ்டமாக இருக்கும் அல்லவா...? காரமெல்லாம் சாப்பிட முடியாது.  இது தான் மூன்று வேளையும் சாப்பிடுவோம்.

உடல் சூடு  இதை சாப்பிட்ட பின்  குறைவது நமக்கு நன்கு தெரியும்.

இதற்கு தொட்டுக் கொள்ள வெல்லாம் ஒன்றும் வேண்டாம். இளஞ்சூட்டுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.


குறிப்பு

தேங்காய் கிடைக்காததால் நான் டின் பால் உபயோகித்தேன்.

தேங்காய் பூவில்  1, 2 ,3 என தனித்தனியாக பால் எடுத்துக் கொள்ளுங்கள்.

முதல் பால் கெட்டியாக இருக்கும். அதை கடைசிக்கு வைத்துக் கொள்ளுங்கள்.
2, 3 வது பாலை அரிசியுடன் வேக விடுங்கள்.

இங்கு பாலே நிறைய இருப்பதால் தண்ணீர் சேர்க்க வேண்டியது இல்லை.

டின் பால் மிகவும் கெட்டியாக இருப்பதால் நான் தண்ணீர் சேர்த்துக் கொண்டேன்.


20 comments:

  1. செய்முறையோடு, மருத்துவ குணங்களையும் எழுதியது அருமை, சகோதரி நன்றி.

    ReplyDelete
    Replies
    1. உடனடி வருகை தந்து கருத்திட்டமைக்கு நன்றி சகோ

      Delete
  2. சுவையான தேங்காய் பால் சாதம்...
    பார்க்கும் போதே சாப்பிடத் தோணுது...

    ReplyDelete
  3. உடல் சூட்டுக்கும் உள்ளாம் மகிழவும் நன்றாய் இருக்குமோ? பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  4. "வாய்புண், உடல் சூடு, இவை இருக்கும் போது இக்கஞ்சி செய்து சாப்பிட்டால் நல்ல குணம் தெரியும்." என்கிறீர்கள்.
    வெந்தயம், பூண்டு என்பன சிறந்த மருத்துவப் பொருள்களே!
    சிறந்த செய்முறை விளக்கம்.
    தொடருங்கள்.

    ReplyDelete
  5. எனக்கு மிகவும் பிடித்த கஞ்சி. கர்ப்பிணிப் பெண்களுக்கு அடிக்கடி செய்து தருவார்கள். நல்ல சுவையான சத்தான உணவு. நன்றி உமையாள்.

    ReplyDelete
  6. படங்களுடன் விளக்கம் பிரமாதம்...

    நன்றி...

    ReplyDelete
  7. கம, கம, கம .....வாசம் வருதே.....!! க.....ஞ்......சி..!!! இந்தத் தேங்காய் பால் கஞ்சி கேரளத்திலும் செய்வதுண்டு எங்கள் வீடுகளில், என்ன ஒன்று அரிசி மட்டுமே வேறு...கேரளத்து அரிசி....இப்போது இதைக் குறைத்துக் கொண்டோம்....அதாங்க கொலஸ்ட்ரால்...சுகர்..காரணங்களினால்...மிகவும் விரும்பி உண்ணும் ஒரு கஞ்சி ..

    ReplyDelete
  8. அருமையான வெந்தக் கஞ்சி தயாரிப்பும் அதன் மகத்துவமும்!..
    இனிய பதிவு.. வாழ்க நலம்!...

    ReplyDelete
  9. உமையாள்,

    நாளையே செய்து பார்க்கிறேன். கஞ்சியில் பூண்டு வாசனை வந்தால் நன்றாக இருக்குமா?

    ReplyDelete
    Replies
    1. கஞ்சியில் பூண்டு வாசனை வந்தால் நன்றாக இருக்குமா? //

      பூண்டின் மணம் அருமையாக இருக்கும். தேங்காய் பாலில் வேகவைப்பதால் மணம் தான் தரும்.
      பூண்டு வீசுதுன்னு சொல்லுவோம் இல்லையா...அப்படி இருக்காது.

      முயன்று பாருங்கள். தங்களுக்கும் பிடிக்கும் என நினைக்கிறேன்.

      Delete
  10. அருமையான சத்துள்ள உணவுக்குறிப்பு! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  11. உஷ்ணமான உடம்புக்கு ஏத்த உணவு. எனக்கு இதற்கு தொட்டுக்கொள்ள ஊருகாய் ரொம்ப பிடிக்கும்.

    ReplyDelete
    Replies
    1. ஆம் சகோ. தங்களுக்கு ஊறுகாய் பிடிக்குமா...ok. நன்றி

      Delete
  12. உமையாள்,

    வெந்தயக் கஞ்சியை அறிமுகப்படுத்தி விட்டதற்கு முதலில் நன்றிங்ங்ங்கோ ! அன்றே செய்ய விருப்பமிருந்தாலும் பூண்டு & வெந்தயம் சேர்ப்பதால் செய்யத் தயங்கினேன். இன்று காலைதான் புது தேங்காய்ப் பாலில் செய்தேன். பூண்டு, வெந்தயம், தேங்காய்ப்பால் எல்லாம் சேர்ந்து கம‌கம வாசனையுடன் சுவையான கஞ்சியை செய்து சாப்பிட்டாச்சு. நான் புழுங்கல் அரிசியை உடைத்து நொய்யாக்கி செய்தேன். சூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. நல்ல வேலை நான் தப்பிச்சேன்....

      செய்து பார்த்து சுவைத்து இங்கு வந்து கருத்துரைத்ததற்கு......ரொம்ப நன்றிங்கோ.

      Delete