Sunday, 2 November 2014

தண்ணீர் இல்லாமல் எப்படி காம்பெளண்ட் கட்டுவது

வீடு கட்ட இடம் வாங்கியாச்சு. போர் போட வேண்டும் அல்லவா…?
பூமிக்குள் எங்கே தண்ணீர் இருக்குன்னு பார்க்க போர் ஆபீஸில் இருந்து ஆளைக் கூட்டிக் கொண்டு போனேன். அவர் இடத்துப் பக்கத்தில் ஒரு மரக்கிளையை எடுத்துக் கொண்டு கவட்டைப்புல் அடித்து விளையாடுவோமே அது மாதிரி உடைத்துக் கொண்டார்.


இடத்தில் மெதுவாக குச்சியை இரண்டு விரல்களில் லேசாக சப்போர்ட் பண்ணிக் கொண்டு நடந்தார். நீர் இருக்கும் இடம் என்றால் அது சுற்றும் என்றார். அது மெதுவாக சில இடங்களில் சுற்றிற்று. தேங்காய் இருந்தால் நன்றாக தெரியும் எனவே தேங்காய் வேண்டும் என்றார். நேற்று நான் போர் ஆபீஸில் நீர் பார்க்க வேண்டும் என சொல்லும் போது கூட இருந்த இவர் தேங்காய் , மாங்காயுன்னு கேட்காமல் இங்க வந்து கேட்கிறாரேன்னு தோணித்து. இவர் மிஷின் எடுத்து வந்து தான் தண்ணீர் பார்ப்பார்னு நினைத்த எனக்கு முதலில் ஏமாற்றம். இப்போ இப்படி கேட்கவும் மனசுக்குள் கோபம் வேறு, அங்கேயோ ஒன்றிரண்டு வீடுகள் தான். திடீர்னு போய் தேங்காய் தாங்கன்னு எப்படி கேட்பது….? யாரிடமும் எதையும் கேட்கிறதுன்னா எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கும். முடிந்தவரை சமாளித்து தவிர்த்து விடுவேன். இப்போ வேற வழி… சரின்னு பக்கத்தில் யாரிடம் கேட்பதுன்னு யோசனை…அப்போ பக்கத்தில் இருந்த வீட்டில் இருந்து ஒரு பெண் வெளியில் வந்து பார்த்தார். சரின்னு அவர்கிட்ட போய் ஒரு தேங்காய் இருக்குமான்னு நிலைமையை சொன்னேன். இருக்கு தருகிறேன்னார். அதற்கு உண்டான பணத்தை கொடுத்து பெற்றுக் கொண்டேன். தண்ணீர் இருக்கும் இடம் வந்ததும் தேங்காய் எழுந்து சாய்வாக சுற்றியது. ( கவனிக்க...தண்ணீரின் அளவு பொருத்து, வேகம் பொருத்து தேங்காய் வேகமாக நேர நின்று கூட சுழலும். சாய்வாகன்னா கொஞ்சம் குறைவுன்னு தானே அர்த்தம். ஆனா நமக்கு இதெல்லாம் புதிது என்ன செய்றது. ஆஹா... சுத்துதே) இங்கு தண்ணி இருக்கும்மா.. அப்படின்னார். சரின்னு அடையாளத்திற்கு கல்லை வைத்து விட்டு வந்தோம். போர் அடுத்த நாள் போட்டாச்சு தண்ணீர் வரலை ஈரமண் தான் வந்தது. போர்க்காரர்கள் பாறை அதனால் இனிமேல் போட முடியாது. ஒருவீட்டுக்கு தேவையான தண்ணீர் ஊறி வரும் அப்படின்னு நடையை கட்டி விட்டார்கள்.

இரண்டு மாதமா வீடு கட்டுவதா வேண்டாமா என யோசனை. அப்புறம் சிறிய விளையாட்டு குடத்தை கயிற்றில் கட்டி போரினுள் விட்டோம். பார்த்தால் 80 அடியில் தண்ணீர் நின்றது. சரி என வீடு கட்டியாச்சு.

மூன்று மாதங்கள் எங்களுக்கு வேண்டிய நீர் ஊறி ஊறி வந்தது.
சுற்றுச் சுவர் கட்டலாம் என நினைத்தோம்.

2 மணி நேரத்திற்கு ஒரு முறை 10 நிமிடங்கள் போர் போட்டால் தண்ணீர் வரும். அப்படியாக 1000 லிட்டர் டேங்கில் நீர் சேர்த்து வைத்தாச்சு. வீட்டில் தண்ணீர் தொட்டி கிடையாது. எனவே டேக்கில் இருந்து தான் சுற்றுச் சுவர் கட்ட தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். சுற்றிலும் யார் வீட்டிலும் தண்ணீர் தொட்டி கிடையாது.

முதல் நாள் வேலை நடந்தது. வானம் தோன்றினார்கள்.  இரண்டு 200லிட்டர் பேரலில் தண்ணீர் நிரப்பி வைத்தும், டேங்கிலும் தண்ணீர் நிரப்பி வைத்தும் இருந்தேன்.

இது குறைய குறைய மோட்டர் போட்டு வந்தேன்.

3 மணிஅளவில் அவர்கள் அஸ்திவாரம் போட ஆரம்பித்தார்கள். நான் 5 மணி வாக்கில் வெளியே வந்தால் தண்ணீர் பாடு தரையில் போய் கொண்டு இருக்கிறது. பைப்பை அணைக்கவேயில்லை அவர்கள்.

 டேங்கில் தண்ணீர் காலி.
( புகைப் படங்களில் காண்பது வீட்டின்
சுற்றுச்சுவர் தான். )


அடுத்த நாளைக்காக மோட்டர் போட்டு போட்டு விட்டாலும் தண்ணீர் இவ்வளவு சேராது வராது. லாரி தண்ணி வாங்களாம்னா தொட்டி கிடையாது. யார் வீட்டிலயாவது டிரம் இருக்கான்னு கேட்டா யார்கிட்டவும் இல்லை. என்ன செய்வது..? வேலை நடக்குது நிப்பாட்டவும் முடியாது. தண்ணீரில்லாமல் வேலையும் நடக்காது…

மண்டையை பிய்துக் கொள்வது விட்டால் வேற வழி….? காம்பெளண்ட் இப்ப தேவையா..? சும்மா இல்லாம கட்டணும்னு சொல்லி... என்ன செய்றது.... எனக்குத் தெரியாதுன்னு அவர் அடுத்த நாள் ஆபீஸ் கிளம்பிப் போயிட்டார்.ஆட்கள் வேலைக்கு வந்தாச்சு. இருக்கிற தண்ணீரில வேலையை ஆரம்பிங்கன்னு சொல்லி விட்டு யோசிச்சப்போ தான் எங்க ஏரியாவுல இருந்து ஒருத்தர் பக்கத்துல வீடு கட்டி வத்திருந்தார். ஒரு வார வித்தியாசத்துல தான் கிரகப்பிரவேஷம் நடத்தி குடி வந்தோம். தெரிந்தவர். அதனால அவர் வீட்டுல இருந்து 10 ,15 குடம் சாயங்காலத்துல தண்ணீர் எடுத்துக் கொண்டோம். இரண்டாம் நாள் முடிவுற்றது. காம்பெளண்ட் கட்ட 15 முதல் 20 நாட்கள் ஆகும்னு சொல்லி இருந்தார் மேஸ்திரி. அம்மாடியோவ்... மற்ற நாட்கள்...? தண்ணீரில்லாமல்...?

தினமும் பக்கத்துல எடுப்பது நடவாத செயல்…. திக்கற்றவனுக்கு தெய்வம் தான் துணையில்லையா…?


சாமி ரூமுக்கு போனேன் யோகி ராம்சுரத்குமார் மகான் புகைப்படம் முன் நின்றேன். பிரார்த்தித்துக் கொண்டேன். காகிதத்தில் என் கோரிக்கையை எழுதி வைத்தேன். நீங்கள் தான் எப்படியாவது வழி செய்ய வேண்டும் என சரணடைந்து சமர்ப்பித்து வந்தேன். எனக்கு நாளை என்ன செய்வது பார்ப்போம் ஏதாவது வழி செய்வார் என திடமாக நம்பினேன்.

மறு நாள் காலை கட்டிய சுவருக்கு நீர் ஊற்ற வேண்டும் அல்லவா…?
மோட்டார் போட்டு விட்டு நீர் ஊற்றலாம் என வெளியே வந்தேன். குளிரகுளிர நீர் ஊற்றப்பட்டு இருந்தது. ஆம் இரவில் நல்ல மழை பெய்து இருந்தது.
சரி… வேலைக்கு எப்படி தண்ணீர்..? எங்கே அப்படின்னு நீங்கள் கேட்பது காதில் விழுகிறது.

எங்கள் வீட்டின் இரு புறமும் தெருக்கள். ஒன்று முன்னால். மற்றொன்று பக்க வாட்டில். அதில் லாரிகள் போய் போய் பள்ளமாக இருக்கும். முக்கால் வாசி ரோடு பள்ளம் தான். அதில் குளமாய் தேங்கி நின்ற தண்ணீர் என்னை பார்த்து சிரித்தது. எனக்கு ஆனந்தம் தாங்கவில்லை.
யோகி ராம்சுரத்குமார் கருணை மழை பொழிந்து விட்டார் நம் வேண்டுதல் அவருக்கு கேட்டு விட்டது என ஆனந்தம்.

இதே போல் தெடர்ந்தும், ஒரிரு நாட்கள் விட்டுவிட்டும் மழை பெய்து தெருவில் தண்ணீர் குறையாமல் காம்பெளண்ட் கட்டும் வரை இருந்தது கொண்டே இருந்தது.


அதுவும் மழை பகலில் பெய்து வேலைக்கு தடை செய்யவில்லை. ஒரிரு நாட்கள் பகலில் தூறியதுடன் விட்டு விட்டது. இரவில் மழை பெய்து விடும்.  காலையில் நீர் ஊற்ற வேண்டிய அவசியமும் இல்லை, ஒரிரு நாட்கள் தவிர மற்ற நாட்களில் இல்லை. கட்டி முடிக்கப்பட்ட பின் அப்புறம் மழையில்லை.  

தண்ணீர் இல்லாமல் எப்படி காம்பெளண்ட் கட்டுவது என முழித்த எங்களுக்கு இப்படியாக பகவான் யோகி ராம்சூரத்குமார் அருளால் எங்கள் இல்ல காம்பெளண்ட் கட்டிமுடிக்கப்பட்டது. அந்த சுற்றுச்சுவர் பார்க்கும்போதெல்லாம் அவரின் கருணை தான் நினைவில் நிற்கும்.

இன்று இதை எழுதும் போதும் அவர் நினைவு தான். இதை முன்பே எழுத வேண்டும் என நினைத்திருந்தேன்.   

யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
ஜெய குரு ராயா

  ஓசூரில் அமைந்துள்ள எங்கள் வீடு.

( புகைப் படங்களில் காண்பது வீட்டின்
சுற்றுச்சுவர் தான். )
அதே அளவின் நீர் போக போக எங்களுக்கு தேவையான அளவு வந்து கொண்டிருந்தது. தேவை இல்லாமல் நீரை செலவழிக்காமல் ....

அதில் தான் வீட்டைச் சுற்றி பூஞ்சோலைகள், மரங்கள்,காய்,கனிவகையராக்கள் வைத்து வளர்த்தேன்.

பசுமை தான் மனதின் குளுமையல்லவா...?

மழைக்காலத்தில் நீர் நன்றாக வரும்.திருவண்ணாமலையில் சாமியின் ஆஸ்ரமம் இருக்கிறது. அங்கு செல்பவர்கள்  ஆஸ்ரமம் சென்று தரிசியுங்கள். மலைப்பிரகாத்தில் ரமணாஸ்ரமத்திற்கு எதிரில் சாமியின் ஆஸ்ரமம்  செல்லும் வழித்தடம் போர்டு இருக்கிறது.

சாமியின் அதிஸ்டானம் இருக்கிறது. 

சாமியின் தத்ரூபமான சிலை அழகாக இருக்கிறது.


சாமி படங்களுக்கு   தோட்டத்தில் இருந்து வாளி வாளியாக  பூக்கள் கிடைக்கும்.
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
ஜெய குரு ராயா

26 comments:

 1. நல்ல பகிர்வு....
  யோகிராம் சுரத்குமாரை நானும் எதற்கும் நினைத்துக் கொள்வேன்...
  அம்மா... வீடு தேவகோட்டையிலா?

  ReplyDelete
  Replies
  1. யோகி ராம்சுரத்குமார்
   யோகி ராம்சுரத்குமார்
   யோகி ராம்சுரத்குமார்
   ஜெய குரு ராயா

   வீடு ஓசூரில் உள்ளது.

   நன்றி.

   Delete
 2. //திக்கற்றவனுக்கு தெய்வம் தான் துணையில்லையா…?//
  எவ்வளவு ஆச்சர்யமான அனுபவம் !! அந்நிலையில் இருந்த உங்களுக்கு பேரானந்தமாக இருந்திருக்கும் !!
  சந்தோஷத்தையும் தக்க சமயத்தில் ஆபத்பாந்தவன் இறைவன் அருளிய உதவியையும் இங்கு பகிர்ந்து கொண்டதற்கு நன்றி தோழி !

  ReplyDelete
  Replies
  1. யோகி ராம்சுரத்குமார்
   யோகி ராம்சுரத்குமார்
   யோகி ராம்சுரத்குமார்
   ஜெய குரு ராயா


   அந்நிலையில் இருந்த உங்களுக்கு பேரானந்தமாக இருந்திருக்கும் !! //

   ஆம். என்றும் மறக்க முடியாத அனுபவம் இது. அவர் நிறைய அனுபவங்களை எங்களுக்கு கொடுத்திருக்கிறார்.

   நன்றி

   Delete
 3. தண்ணீர் இல்லாமல்
  எப்படிக் காம்பெளண்ட் கட்டுவது என்றுத் தொடங்கி
  பகவான் யோகி ராம்சூரத்குமார் வரை
  சுவையாக, அழகாகப் பதிவு செய்துள்ளீர்கள்
  தொடருங்கள்

  ReplyDelete
  Replies
  1. யோகி ராம்சுரத்குமார்
   யோகி ராம்சுரத்குமார்
   யோகி ராம்சுரத்குமார்
   ஜெய குரு ராயா

   சுவையாக, அழகாகப் பதிவு செய்துள்ளீர்கள் // நன்றி ஐயா

   Delete
 4. பூக்களின் சிரிப்பில் யோகி தெரிகிறார் ?
  த ம +1

  ReplyDelete
  Replies
  1. யோகி ராம்சுரத்குமார்
   யோகி ராம்சுரத்குமார்
   யோகி ராம்சுரத்குமார்
   ஜெய குரு ராயா

   ஆம் ஐயா நன்றி

   Delete
 5. யோகி ராம்சுரத்குமார் சுவாமிகளின் அருள் உங்களுக்கு எப்போதும் இருக்கும்.நம்பிக்கையுடன் இருப்போருக்கு நிச்சயம் வழி கிடைக்கும் உமையாள். உங்களுக்கும் அதுதான் நடந்திருக்கு.
  நிறைய மஞ்சள் பூக்கள் மரம்கொள்ளாமல் பூத்திருக்கு. நாங்க இதனை நொச்சிப்பூ என்போம். அடுக்கு செம்பருத்தியும் அழகு. நல்பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. யோகி ராம்சுரத்குமார்
   யோகி ராம்சுரத்குமார்
   யோகி ராம்சுரத்குமார்
   ஜெய குரு ராயா

   ஆம் நம்பிக்கையுடன் இருக்கும் போது வழிகாட்டுவார்
   நன்றி பிரியசகி

   Delete
 6. யோகி ராம்சுரத்குமார் குழுவினர் எங்கள் இல்லத்தில் வந்து பஜனை பாடினார்கள்.. கற்பூர தீபாராதனை தட்டில் அவர் படம்போலவே அச்சு பதிந்தது ஆச்சரியம் அளித்தது.. மிக நீண்ட நாட்கள் அந்தத்தைட்டினை பூஜையில் வைத்திருந்தோம்..!

  ReplyDelete
  Replies
  1. யோகி ராம்சுரத்குமார்
   யோகி ராம்சுரத்குமார்
   யோகி ராம்சுரத்குமார்
   ஜெய குரு ராயா

   ஆம் ஓசூரிலும்( 94 -95 என நினைக்கிறேன் ) பஜனை குழுவினர் எல்லார் வீடுகளிலும்பாடினார்கள் அச்சமயம் அனைவரின் இல்லத்திலும் இது போல் தீபாராதனை தட்டில் அவர் படம் போலவே அச்சு பதிந்து இருந்தது.

   நானும் நிறைய நாட்கள் அத்தட்டினை பூசை அறையில் வைத்திருந்தேன்

   நன்றி அம்மா.

   Delete
 7. உண்மையில் இந்த பதிவில் மெய் சிலிர்த்தேன் உமையாள் ....உங்களுக்கு கடவுளின் அனுக்கிரகம் மென் மேலும் தொடர பிராத்திக்கிறேன் ..பூக்கள் எல்லாமே மிக அழகு ..

  ReplyDelete
  Replies
  1. 16 வருடங்கள் முன்பு நடந்தது. இப்போது பதிவிடுகையில் அந்நாளைய அவரின் கருணையை நினைத்து மனம் உருகி விட்டது.

   நன்றி சங்கீதா

   Delete
 8. நம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை விளக்கியது பதிவு! நன்றி வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 9. வந்துட்டன் அபுதாபி.
  நல்லதொரு பதிவு பூக்கள் அருமை.

  ReplyDelete
  Replies
  1. மிக நல்ல பதிவு! நாம் நிர்கதியாய் நிற்கும் போது அவன் தாளைப் பற்றிக் கொண்டால் உதவாமனால் போய்விடுவார்!!!?? மிக நல்ல பதிவு. மெய்சிலிர்க்க வைத்தது!

   Delete
 10. கடவுளை என்றும் மறக்காதவர்களுக்கு, அவனுடைய அனுக்கிரகம் என்றும் இருக்கும். உங்களுக்கு அந்த ஆண்டவனுடைய அருள் என்றும் நிலைத்திருக்கும். வாழ்த்துக்கள் சகோதரி.

  ReplyDelete
 11. உங்கள் வீட்டு பூக்கள் அழகாக சிரிக்கிறது.. நைஸ்...

  ReplyDelete
 12. அந்த காம்பெளண்ட் சுவற்றுக்கு பின்னாடி இவளோ பெரிய கதை இருக்கா...,உங்கள் அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி ,நானும் குரு யோகி ராம்சுரத்குமாரை நினைத்து கொள்கிறேன்

  ReplyDelete
 13. யோகி ராம்சுரத்குமார்
  யோகி ராம்சுரத்குமார்
  யோகி ராம்சுரத்குமார்
  ஜெய குரு ராயா//
  சாமியின் அதிஸ்டானம் சென்று அவரையும் தரிசனம் செய்து இருக்கிறேன். மறுபடியும் அவர் வெளியில் காரில் செல்லும் போது கையை தூக்கிஆஸீர்வாதம் செய்த காட்சி இன்னும் நினைவில் இருக்கிறது.
  அவரின் அருளால் தண்ணீர் பெற்றது மகிழ்ச்சி.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete