ஜோடிப் பொருத்தம் பார்க்கலாமா...?
தேவையான பொருட்கள்
து.பருப்பு - 1 1/2 மே.க
க.பருப்பு - 1/2 மே.க
மிளகாய் - 1
இவற்றை வறுத்து,சற்று கொர கொரப்பாக பொடி செய்து கொள்ளவும்
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிது
புளி - சிறிய எலுமிச்சை
தாளிக்க வேண்டியது
நல்லெண்ணெய் - 1 மே.க
கடுகு - 1/4 தே.க
சீரகம் - 1/4 தே.க
உ.பருப்பு - 1/2 தே.க
வரமிளகாய் - 1
பெருங்காயம் - சிறிது
தாளிக்கவும்
வெங்காயம்,ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.
தக்காளி சேர்த்து வதக்கவும்.
புளித்தண்ணீர் விடவும்.நன்கு பச்சை வாசம் போன பின் பொடியை தேவையான தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் முதலிலேயே தனியாக கலக்கி வைத்துக் கொள்ளவும்
அதை இப்போது சேர்க்கவும்
சுற்றி கொதி வந்து நுரைக்கூட்டும் போது
கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்
சாம்பார் தயார்...!!! இட்லி, தோசைக்கு சூப்பராக இருக்கும்.
ஆனா...சும்மா நல்லெண்ணெய் விட்டு ஓரமெல்லாம் லேசா ரோஸ்டா சுட்ட தோசைக்கு இதன் பொருத்தம்...ஆஹாஆ... நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடி தானுங்கன்னு...அசத்தல் தான் போங்க..
செட்டி நாட்டு சாம்பார்....!!!
பருப்பு முனுக்கி சாம்பார்!.. பெயரே - அருமை!..
ReplyDeleteசெயல் முறைக் குறிப்பைப் படிக்கும் போதே என்ன தவம் செய்தனை என்று பாட்டு காதில் கேட்கின்றது!..
இதில - நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடி தானுங்கன்னு!.. - அசத்தல் பாட்டு வேறயா!...
பருப்பு முனுக்கி சாம்பார்!.. பெயரே - அருமை!.. //
Deleteபெயர் நான் வைக்கவில்லைங்க...எங்க வீடுகளில் எப்போதும் செய்யும் சாம்பார்...
செயல் முறைக் குறிப்பைப் படிக்கும் போதே என்ன தவம் செய்தனை என்று பாட்டு காதில் கேட்கின்றது!..//
ஹஹஹஹா....
இதில - நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடி தானுங்கன்னு!.. - அசத்தல் பாட்டு வேறயா!...//
சார் ... தோசைக்கு இந்த சாம்பார் ரொம்ப நல்லா இருக்கும் அதான் ...ஹிஹிஹி...!
ஆமா!.. அந்த பாப்பா ரொம்ப நேரமா குளிச்சிக்கிட்டு இருந்ததே -
ReplyDeleteதண்ணி ஒத்துக்கலையா?.. ஜூரமா?..
இல்லசார்...அது கொஞ்சம் ரெஸ்டு வேணும் அப்படின்னது...சரி அப்படின்னுட்டு கிருஷ்ணர் வந்துட்டார்...அவருக்கு இளகின மனசு இல்லையா...
Deleteஆக மொத்தம் உங்களோட பதிவுக்கு வந்து... ஏமாந்துட்டுத்தான் போறேன் ஹூம்... ஊருக்குப்போகாமல் இங்கேயாவா இருக்கப்போறேன்.
ReplyDeleteஊருக்கு...போகும் போது வேளைக்கு ஒன்னா சாப்பிட்டுட்டு வாங்க சரியா சகோ...
Deleteபாச்சிலர்ஸ் சிலரை...பார்க்கும் போது எனக்கு கஷ்டமாகத் தான் இருக்கு....
"//பாச்சிலர்ஸ் சிலரை...பார்க்கும் போது எனக்கு கஷ்டமாகத் தான் இருக்கு//"
Deleteஎன்னையும் அந்த லிஸ்ட்ல சேர்த்துக்குங்க பிளீஸ்....
காரைக்குடியாரே... ஏங்கிறேன்...
Deleteசகோதரிக்கு தெரியுமா சகோ சொக்கன் அவர்களே... அப்புறம் உங்க பாடு.... பார்த்துக்குங்க...
Deleteஇன்றைய வலைச்சரத்தில் -
ReplyDeleteதங்களின் ஸ்ரீகிருஷ்ண கானமும் - சாம்பார் வாசமும்!...
அறிமுகத்துக்கு நல்வாழ்த்துக்கள்.
http://blogintamil.blogspot.com.au/2014/11/blog-post_28.html?
நன்றி ஐயா.
Deleteஹை புது பெயர் சாம்பார்! தனியா இல்லாத சாம்பார்...அசத்தல் செஞ்சுட்டா போச்சு....பகிர்வுக்கு மிக்க நன்றி.
ReplyDeleteதங்களது வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்!
பெயர் நான் வைக்கவில்லைங்க...எங்க வீடுகளில் எப்போதும் செய்யும் சாம்பார்...
Deleteநன்றி ஐயா
உங்க போட்டோவும்,அதற்கான வர்ணனையும் அசத்தல். பருப்பு முனுக்கி சாம்பார்!!!!! பெயரே வித்தியாசம்தான்.
ReplyDeleteவலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் உமையாள்.
நன்றி.. இது ஒரு சுலபமான மற்றும் சுவையான சாம்பார்..செய்து பாருங்கள்.நன்றி.
Deleteவணக்கம் சகோதரி!
ReplyDeleteஅருமையான சாம்பார்! அத்தோடு எத்தனை விரைவாகச்
செய்திடக்கூடியதாக இருக்கு..! மிக அருமை சகோதரி!
உங்க கைப்பக்கும் அசத்தல்தான்! எனக்கும் உங்களின் இத்தகைய
சுருக்கமான, சுவையான, அருமையான குறிப்புகள் மிகவும் உதவியாக இருக்கும்!
வாழ்த்துக்கள் உமையாள்!
நன்றி சகோதரி.. நான் செய்வதை விட மற்றவர்கள் செய்து பார்த்து பிடிக்கிறது என்று சொல்லும் போது மிகவும் மகிழ்வாக உள்ளது..
Deleteஎன் அம்மாவிற்கு கண்டனூர் பக்கம். so, உங்க குறிப்புகள் அவர்கள் கைமணத்தை நினைவுக்கு கொண்டுவருகிறது!
ReplyDeleteஎன் ஊரும் தேவகோட்டை தான்.. கைமணம் ஒத்திருப்பதில் ஆச்சர்யம் இல்லை தான்..
Deleteகண்டனூருக்கு பக்கம் காரைக்குடி தான் இருக்கு. தேவகோட்டை எல்லாம் கண்டனூருக்கு பக்கம்னு சொல்ல கூடாது.
Deleteகேள்விப்படாத பேராக இருக்கிறதே.. போட்டோவிலேயே சாம்பார் வாசனை தூக்குதே...
Deleteஅனைவருக்கும் தெரிந்தது தேவகோட்டை. தேவர் களின் கோட்டை..
Deleteஉங்கஊரு எங்க ஊருக்கு பக்கத்துல இருப்பதாலும்....அழகப்பா காலேஜ் இருப்பதாலும் ஏதோ தெரிகிறது என்று வேண்டுமானால்சொல்லலாம்.. கில்லர்ஜி, குமார் போன்ற நண்பர்களைக் கேட்டுப்பாருங்கள்.!!!
ஹலோ சொக்கரே ஆறாவயல் வழியாக போனால் ஈசியா கண்டனூருக்கு போகலாம்.
Deleteதி கிரேட் தேவகோட்டை
ஏ.வி. மெய்யப்ப செட்டியாரை தந்தது
எஸ்.பி.முத்துராமனை தந்தது
ஒருகாலத்துல ஏ.வி.எம் ஸ்டூடியோவே அங்கதான் இருந்தது
சன் . டிவிக்கு ராமநாதனை தந்தது
வலைப்பதிவர் சகோதரி ஆர். உமையாள் காயத்ரியை தந்தது
வலைப்பதிவர் சே.குமாரை தந்தது
ஏன் என்னையே தந்தது
இதுக்கு மேலே பேசுனா அவசியமில்லாமல் கோடரியை எடுக்கவேண்டியது வரும்.
ஸூப்பர் பின்னூட்டம் இதுதான் தி கிரேட் தேவகோட்டை மண்
Deleteகண்ணதாசனை மறந்து விட்டீரே சகோ...
Deleteஊருக்காரங்க சலம்பல் ஓவரா இருக்கே!!
Deleteஆம் சகோதரி எழுத்தாளர் லேனா.தமிழ்வாணனையும் மறந்து விட்டேன் ஸோரி.
Deleteஅட இது நம்மூரு சாம்பாருல்ல...
ReplyDeleteசூப்பர் சகோதரி...
அதே.. அதே...!!! யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்.. நன்றி சகோ..
Deleteஆஹா !! பேரும் சூப்பர் அதைவிட அருமை நீங்க ரசிச்சி படிய பாடல் :) இன்னிக்கு எங்க வீட்ல தோசைதான் ..கிடைச்சாச்சு முனிக்கி சாம்பார் சைட் டிஷ் :)
ReplyDeleteஆஹா... இந்த சாம்பாரா...இன்னைக்கு.....அசத்துங்கள் சகோ...!!!
Deleteபடங்களுடன் செய்முறை விளக்கம் சிறப்பு! நன்றி!
ReplyDeleteபடங்களுடன் செய்முறை விளக்கம் சிறப்பு! நன்றி!
ReplyDeletevazhakkam pola kalakkuringa
ReplyDeleteநன்றி சகோ
Deleteபுதுமையான சாம்பார், செய்து பார்த்துவிட வேண்டியதுதான்.
ReplyDeleteஅட, செட்டிநாட்டு ரெசிப்பி... ரொம்ப.ச் சுவையாய் இருக்குமே.. செய்துடலாம்.
ReplyDeleteவணக்கம்!
ReplyDeleteஇன்றைய வலைச்சரத்தின் வாசமிகு மலரானீர்.
வாழ்த்துக்கள்!
ஒட்டகத்து தேசத்தின் ஒளி நிலவு!
திருமதி.மனோ சாமிநாதனின் பார்வை வெளிச்சம்
பட்டுவிட பட்டிதொட்டி எங்கும் பரவட்டும் புகழொடு உமது
படைப்புகள் யாவும்.
நட்புடன்,
புதுவை வேலு,
www.kuzhalinnisai.blogspot.com
(இன்றைய எனது பதிவு
"எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்"
சிறிது நேரம் தங்களுக்கு இருக்குமேயாயின்
குழலின்னிசை மீது தங்களது பார்வை வெளிச்சம்
படரட்டும்!
(குழலின்னிசையை தொடர தாங்கள் உறுப்பினரானால் அகம் மகிழ்வேன்! நன்றி!)
அருமை இந்தச் சட்னியை நானும் என் சமையல் வலைத்தளத்தில் பகிர்ந்திருக்கின்றேன் உமையாள். ஆனால் பேர்தான் துவரம்பருப்புச் சட்னி. கொஞ்சம் காம்பினேஷன் வேறுபடும். அதுபடி செய்து பாருங்க இன்னும் ருசியா இருக்கும் :)
ReplyDelete