Sunday, 30 November 2014

பட்டாணி & காலிஃப்ளவர் குருமா






தேவையான பொருட்கள்

பட்டாணி - 1 கோப்பை
காலி ஃப்ளவர் - 1 1/2 கோப்பை
வெங்காயம் - 1 பெரியது
தக்காளி - 2 பெரியது


அரைக்க வேண்டியது

தேங்காய் துருவல் - 4 மே.க
பொட்டுக்கடலை - 2 மே.க
மிளகாய் - 6
சோம்பு - 3/4 தே.க

அரைத்துக் கொள்ளுங்கள்

தாளிக்க வேண்டியது
எண்ணெய் - 2 மே.க
பட்டை - 1
பிருஞ்சி இலை - 1
கிராம்பு - 1                      தாளிக்கவும்

வெங்காயத்தை வதக்கவும்









தக்காளி சேர்த்து வதக்கவும்.












பட்டாணி & காலிஃப்ளவர் சேர்த்து வதக்கவும்










அரைத்ததை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.






மிக்ஸி கழுவிய நீர் + வேண்டிய அளவு தண்ணீரை இப்போது சேர்க்கவும்  உப்பு சேர்க்கவும். நன்கு வெந்து சேர்மானம் ஆன பின் அடுப்பை அணைக்கவும். 




                                                          சப்பாத்திக்கு குருமா...குருமா....
                                                                      தாயாராகிவிட்டது.

நான் சம்பா சாதத்திற்கு தொட்டுக் கொள்ள செய்தேன்.

 லிங்க் இதோ - சம்பா சாதம்






26 comments:

  1. அருமை! அருமை!
    இதோ காலிப்ளவர் கைவசம் இருக்கு. பட்டாணி குளிரூட்டியில் இருக்கு..:)
    நாளைக்கே செய்திடணும்!... செய்வேன்!..)
    பார்க்கவே ஆவலைத் தூண்டுகிறது குருமா!

    நல்ல பகிர்வு! நன்றியுடன் வாழ்த்துக்கள் சகோதரி!

    ReplyDelete
    Replies
    1. ஆஹா...கைவசம் அனைத்தும்...செய்து இருப்பீர்கள் என நினைக்கிறேன்...தோழி சரியா...

      Delete
  2. அற்புதமான படங்களுடன்
    செய்முறை விளக்கியவிதம் அருமை
    இப்போது சைட் என்ன செய்யலாம என
    குழப்பம் வரும் போது தங்கள்
    பதிவுகளைத்தான் தொடர்கிறேன்
    அற்புதமான பணி தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. இப்போது சைட் என்ன செய்யலாம என
      குழப்பம் வரும் போது தங்கள்
      பதிவுகளைத்தான் தொடர்கிறேன்//

      கேட்கவே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது ஐயா. நன்றி

      Delete
  3. அருமையான குருமா. பொட்டுகடலை போட்டதில்லை, வெள்ளைபூண்டு வேண்டாமா?
    நல்லது நீங்கள் சொன்னமுறையில் செய்து பார்த்துவிடுகிறேன். காலிஃப்ளவர் இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. வெள்ளைபூண்டு வேண்டுமானால் சேர்த்துக் கொள்ளுங்கள்.
      பொட்டுக்கடலை சேர்ப்பதால் சேர்மானமாக வரும் . காலிஃப்ளவர் இருக்க உடனடி குருமாதான்.
      நன்றி

      Delete
  4. ம்ம்.. வெரி நைஸ்... டேஸ்ட்டி..

    ReplyDelete
  5. ஃப்ரம் கீதா.......டிட்டோ! ம்ம்மணக்குது!இன்னு என்ன மெனு செய்யலாம் என்றுனினைத்து சரி நம்ம உமையாள் சகோதரி காலி ஃப்ளவர் சூப், சொல்லிருங்காங்களே செய்யலாம், அப்படியே காலிஃப்ளவர் பட்டாணி - இப்ப ஃப்ரெஷ் பட்டாணி இங்க கிடைக்குதா ஸோ ரெண்டும் போட்டு குருமா செஞ்சு, வெஜிட்டபிள் புலாவ் செய்யலாம்னு நினைச்சு எடுத்து வைச்சுட்டு இங்க வந்தா அட நீங்களும் காலி ஃப்ளவர் குருமா....சூப்பர்! சேம் பிஞ்ச்...கிள்ளிக்கோங்க-----

    ReplyDelete
    Replies
    1. அட நீங்களும் காலி ஃப்ளவர் குருமா....சூப்பர்! சேம் பிஞ்ச்...கிள்ளிக்கோங்க--//
      ஆ....வலிக்குதுங்க...கிள்ளிக்கிட்டேன். சகோ சொன்ன பின்னால் கிள்ளாட்டி எப்படி...? இல்ல...ஹிஹிஹி...

      வெஜிடபுள் புலவ் & குருமா...சூப்பர் சன்டே ஸ்பெஷல்...

      ஆமா...காலிஃப்ளவர் சூப் என்னாச்சு....?

      Delete
  6. Replies
    1. தயாராகி...தயாராகி...செய்றீங்களா...சகோ...ok...

      Delete
  7. பார்த்தாலே பசிக்கும் பட்டாணி குருமா!..
    பாரெங்கும் தேடினாலும் இதுபோல வருமா!..

    சப்பாத்திக்கு குருமா.. குருமா!.. அருமை.. அருமை!..
    (ஆனாலும் - சப்பாத்திக்கு குருமா - தயாரானதில் எழுத்துப்பிழை உள்ளது. கவனிக்கவும்)

    ReplyDelete
    Replies
    1. பார்த்தாலே பசிக்கும் பட்டாணி குருமா!..
      பாரெங்கும் தேடினாலும் இதுபோல வருமா!..//

      ஆஹா..கவிதை..சூப்பர்... சரி செய்து விட்டேன் ஐயா..நன்றி

      Delete
  8. பட்டாணிக்குருமா மணக்குது! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. சப்பாத்திக்கு நல்ல காம்பினேஷன்....

    ReplyDelete
  10. எனக்கு ரொம்ப சப்பாத்தி பிடிக்காது (நாங்க எல்லாம் சாதப்பிரியர்களாக்கும்!!). வரத்திற்கு ஒரு முறை சப்பாத்தி செய்தால், கண்டிப்பாக இந்த குருமா செய்ய வேண்டும் என்று சொல்லிவிடுவேன்,

    ReplyDelete
    Replies
    1. பேச்சலரு..... ஹோட்டல்யா சாதம் சாப்புடுறீங்க...

      Delete
    2. வரத்திற்கு ஒரு முறை சப்பாத்தி செய்தால், கண்டிப்பாக இந்த குருமா செய்ய வேண்டும் என்று சொல்லிவிடுவேன்,//
      அப்படியா...நன்றி சகோ

      Delete
  11. சப்பாத்திக்கு நல்லா இருக்கும் போலயே......

    ReplyDelete
  12. ஆஹா உடனே சாப்பிடத்தோணுதேமா

    ReplyDelete