காலைல இருந்து ஒரே சோம்பேறித்தனமாக இருக்கிறது. வேலை ஓடவில்லை. ஹாயா...அப்படியே ஏகாந்தமா இருக்கனும் போல இருக்கு ஆனா முடியுமா....டிபன் சாப்பாடு என செய்ய வேண்டுமே. ஒருநாள் ஒரே ஒரு நாள் நமக்கு லீவு கிடைத்தால் எம்புட்டு சந்தோஷமாக இருக்கும்..ம்....
காப்பி கையிலே..மனசோ..நினைப்புல...மிதமான விடியல்..பறவைகளின் கூக்குரல்கள்...அவசரம் இன்றி ரசிக்க சில சமயம் முடிவதில்லை. ஆனால் கொஞ்ச நேரமேனும் ரசிக்க வேண்டும். அப்போது தான் அன்றைய பொழுது தெம்பாக இருக்கும்.
என்ன சமைப்பது...? இது ஒரு குழப்பம். கடகட என்று செய்தாலும் ஒரு குற்றவுணர்வு வருகிறது. காலை பரபரப்பு முடிந்தது.
குளிர் காலம் சற்று விலக வானத்தை ஊதாகலரில் பார்ப்பது பரவசமாய் இருக்கு.
வானத்தை பார்த்து வெறித்துக் கொண்டு இருப்பது ஒரு சுகம். அதன் ஜாலங்கள் அழகாய் மனதில் இறகாய் வருடிச் செல்லும். அண்டத்திற்கும் நமக்கும் தொடர்பு இருப்பது அப்போது தான் உறைக்கும்.
சின்ன நடை பயிலல் பால்கணியில். பார்வைகள் எங்கோ...மனமும் எங்கோ...
இதமான சூரியனின் இளஞ்சூட்டில் உடல் குளிர் காயும். மணித்துளிகள் மாயமாகும்.
மனது ஒரு நிலைக்கு வர ஹாசினி சோபாவில் சாய்ந்தாள். தூக்கம் கண்களைச் சுழட்ட அப்படியே அயர்ந்து விட்டாள். வேலை வேலை என ஓடிய நாட்கள்...
தனக்கு என வாழ ரசிக்க என இப்போது தான் சமயங்கள் கிடைக்கின்றன.
சாயங்காலம் அவர் வரவும் காலார நடக்க...காற்று தழுவ...கடைகள் ஒளிவெள்ளத்தில் சிமிட்ட ...
ஹாசினி ...ஹாசினி....குரல் வரவும்...விழித்தாள். நம்ம ஸ்டாப் வந்து விட்டது இறங்கு என தோழி அழைக்க....32 வயதில்...வரும் கனவு தானே...
வயதான பெற்றோர்கள்....அவர்களின் வயது போன காலத்தில் பிறந்த 4வர். மூத்தவளுக்கு இருக்கும் பொறுப்பைச் சொல்லவும் வேண்டுமா..?
ஹாசினிக்கு...கனவே...வாழ்க்கையாய் போய் கொண்டிருக்கிறது. மிதமான விடியல் எப்போது வேகமாய் விடியும் என...நடைபோட்டாள் தன் இல்லம் நோக்கி.
பஸ்ஸில் போகும்போது பகல் கனவா ? விரைவில் விடியட்டும் ஹாசினிக்கு நல்லதொரு காலை.
ReplyDeleteதமிழ் மணம் 1
ஆம் சகோ பகல் கனவு தான். தங்கள் கருத்துக்கும், முதல்வரவுக்கும், தமவுக்கும் நன்றி சகோ
Deleteஎன்ன இது கருத்து போடவும் கலர் மாறி விட்டது ?
ReplyDeleteதங்கள் கைவண்ணமோ....?
Deleteம்ம்.... பகல் கனவுகள். அவள் ஒரு தொடர்கதை போலும்!
ReplyDeleteஅன்பான வரவிற்கும், கருத்திற்கும் நன்றி சகோ
Deleteமீண்டும் ஒரு முறை பாலசந்தரின் அவள் ஒரு தொடர்கதை படத்தைப் பார்ப்பதைப் போல இருந்தது.
ReplyDeleteஅன்பான வரவிற்கும், கருத்திற்கும் நன்றி ஐயா
Deleteசிந்தனையை ரசித்தேன்...
ReplyDeleteஅன்பான வரவிற்கும், கருத்திற்கும் நன்றி சகோ
Deleteவணக்கம்
ReplyDeleteகதையின் கருத்தாடல் அருமையாக உள்ளது கனவு வாழ்க்கையில்தான் சிலர் வாழ்க்கை நகர்ந்து கொண்டுடிருக்கிறது நிழலாக... பகிர்வுக்கு நன்றி த.ம5
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ரூபன் ஏதோ நம்மளைத்தாக்குவது போல் இருக்கிறதே....
Deleteஅன்பான வரவிற்கும், கருத்திற்கும் நன்றி ரூபன்
Deleteஹாசினிக்கு நல்ல பொழுதாக விடியட்டும்..
ReplyDeleteநல்வாழ்த்துக்கள்!..
அன்பான வரவிற்கும், கருத்திற்கும் நன்றி ஐயா
Delete"ஒரு நாள் ஒரே ஒரு நாள் நமக்கு லீவு கிடைத்தால் எம்புட்டு சந்தோஷமாக இருக்கும்." என நானும் விடிய விடிய எண்ணிப்பார்ப்பதுண்டு,
ReplyDeleteசிறந்த பதிவு
தொடருங்கள்
அன்பான வரவிற்கும், கருத்திற்கும் நன்றி சகோ
Deleteஇந்தக்கனவு அழகாக அருமையாக எதார்த்தமாக இனிமையாக உள்ளது.
ReplyDeleteஆனால் நல்லவேளை இவற்றில் வரும் கனவுகள் போல இல்லையே என நான் எனக்குள் நினைத்துக்கொண்டேன்.
http://gopu1949.blogspot.in/2014/03/vgk-08.html
http://gopu1949.blogspot.in/2011/04/blog-post.html
அன்பான வரவிற்கும், கருத்திற்கும் நன்றி ஐயா
Deleteவீட்டுக்கு வீடு 'கவிதா'க்கள் ,பெயர்தான் வேறு வேறு :)
ReplyDeleteத ம 7
அன்பான வரவிற்கும், கருத்திற்கும் நன்றி சகோ
Deleteஇப்படியும் சிலர் இருக்கிறார்கள்!
ReplyDeleteஅன்பான வரவிற்கும், கருத்திற்கும் நன்றி ஐயா
Deleteவணக்கம் சகோதரி.!
ReplyDeleteநல்ல கதை சகோதரி...ஆரம்பித்து முடித்த விதமும் அற்புதமாக இருந்தது.
கடமைகள் கைகளை கட்டினாலும் கனவுலகத்திலேயே வாழ்வை நடத்தி வரும் ஹாசினிக்கு விரைவில் விடியல் வேகமாக விடியட்டும் என நானும் வேண்டிக்கொள்கிறேன்..
பகிர்ந்தமைக்கு நன்றி சகோதரி..
நட்புடன்,
கமலா ஹரிஹரன்.
அன்பான வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி
Deleteஹாசினியைப் போன்று எத்தனைப் பெண்களோ விடியலை நோக்கி பகல் கனவுகளுடன்! ம்ம்ம்ம்ம்
ReplyDeleteஅன்பான வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி
Deleteஓ ஹாசினியின் விடியல்தான் கவிதை வடிவிலோ இதற்கு அடுத்து வரும் கவிதை!
ReplyDeleteகதை வேறு
Deleteகவிதை வேறு
அன்பான வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா
ஹாசினியின் வாழ்வில் விரைவில் விடியல் வரட்டும்.
ReplyDeleteகனவுகள் மெய்ப்பட வேண்டும் என்பது எல்லாரின் விருப்பமும் தானே!
ReplyDeleteநடை அருமையாக உள்ளது சகோ!
தொடர்கிறேன்.