தேவையான பொருட்கள்
சோள ரவை - 3 மே.க
அரிசி மாவு - 2 மே.க
கோதுமை மாவு - 1 மே.க
வெங்காயம் - 1
சுக்கு பொடி - 1/4 தே.க
மிளகாய் துகள்கள் (Flakes) - 3/4 தே.க
(பச்சை மிளகாய் வேண்டுமென்றாலும் சேர்த்துக் கொள்ளலாம்)
தயிர் - 2 மே.க
கருவேப்பிலை - சிறிது
உப்பு - ருசிக்கு
எண்ணெய் - பொரிக்க தேவையானவை
வெங்காயம். கருவேப்பிலை, சுக்கு பொடி,மிளகாய் துகள்கள்,உப்பு போட்டு நன்கு பிசரவும்.
மாவுகளைப் போட்டு கலந்து கொன்டு தயிர் + வேண்டிய தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளுங்கள்.
குறைந்தது 1/2 மணி நேரம் ஊற விடவும்.
வடைகளாக தட்டி பொரிக்கவும்.
சத்தான வடை சாப்பிடலாமா....? எங்க ஓடுறீங்க....இது எண்ணெய்யை குடிக்கவே குடிக்காது. அப்புறம் எப்படிம்மா ...வடை சுட்ட....? நல்ல கேள்வி....!!!
ரெம்ப சமத்து கரைக்கிட்டா வேணும்கிற அளவைத்தவிர.....நம் கண்ணில் எண்ணெய்யே படாது.
சத்தான.....சுவையான.....கெடுதல் இல்லா வடை....அடடா.....என்ன யாரையுமே காணோம்...ஓ..... புரிந்து விட்டது. ஹாயா என்ஜாய்...பண்ணுங்க....
மொறு மொறுன்னு வடையைப் பார்த்தாலே பசியைக்கிளப்புதுங்க .... நள்ளிரவு இங்கு 1.15 மணி. வடைக்கு நான் எங்கே போவேன் :( ??????
ReplyDeleteபார்த்தால் பசி தீருமா? பசியைக்கிளப்புது.
எனினும் காட்சிப்படுத்தியுள்ளதற்குப் பாராட்டுக்கள்.
மொறு மொறுன்னு வடையைப் பார்த்தாலே பசியைக்கிளப்புதுங்க .... நள்ளிரவு இங்கு 1.15 மணி. வடைக்கு நான் எங்கே போவேன் :( ?????? //
Delete:))))......
நாளைய இடைப் பலகாரத்துக்கு...இன்றே கொடுத்தேன்....புதிய மெனு....
உடனடி வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா.
சத்தான வடை. பிரமாதம். சோள ரவை நாங்கள் வாங்கியதில்லை. இதில் வாழைப்பூ சேர்த்துக் கொள்ளலாமோ? (இரண்டாவது படத்தில் இருப்பது வாழைப்பூப் போலத் தோன்றியது. எனவே தோன்றியதால் கேட்டேன்!!)
ReplyDeleteஇரண்டாவது படத்தில் இருப்பது வாழைப்பூப் போலத் தோன்றியது//
Deleteஆம் நீங்கள் சொன்ன பின் தான் எனக்கும் அப்படம் வாழைப்பூ மாதிரி தோன்றுகிறது.
வெங்காயம் தான் அப்படி தெரிகிறது. வாழைப்பூ வடை செய்வோம் இல்லையா..? இதிலும் சேர்த்துக் கொள்ளலாம் புதிய சுவையாய் இருக்கும் சகோ நன்றி
எண்ணெய்யை குடிக்கவே குடிக்காது... இது தான் முக்கியம்...
ReplyDeleteசெய்து பார்த்திடுவோம்... நன்றி சகோதரி...
செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள் சகோ
Deleteரசித்தோம், ருசித்தோம். நன்றி.
ReplyDeleteமகளிர் தினத்தை முன்னிட்டு இனிப்பு ஏதும் கிடையாதா!?..
ReplyDeleteஆனால் - நான் கொடுத்திருக்கின்றேன்.. வந்து பெற்றுக் கொள்ளவும்!..
மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!. வாழ்க நலம்!..
நான் கொடுத்திருக்கின்றேன்.. வந்து பெற்றுக் கொள்ளவும்!..
Deleteவந்து பெற்றுக் கொள்கிறேன் ஐயா நன்றி
சோள ரவை வடையா புதுசா இருக்கே,இன்று மாலை ஸ்நாக்ஸுக்கு புது மெனு கிடைத்தாச்சு,செய்து அசத்திடவேண்டியதுதான்!!!!
ReplyDeleteஅம்மா ஊருக்கு போயிருந்தேன் ஆன்ட்டி,அதான் வலைப்பூ பக்கம் வரல,
வந்து எல்லா பதிவுகளையும் பார்த்தேன்,அனைத்தும் அருமை...
நன்றி
வாழ்க வளமுடன்....
ஆஹா...அம்மா ஊருக்கு ஜாலியா போய் வந்தாச்சா...சூப்பர் சரிதா
Deleteபார்க்கவே மொறுமொறுன்னு இருக்கு.....
ReplyDeleteபகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
நன்றி சகோ
Deleteஅட, வடை அடடே...
ReplyDeleteம்ஹூம் எனக்கு வயித்தெரிச்சலாக இருக்கு.. வேறென்ன சொல்ல...
தமிழ் மணம் 6
தண்ணீர் அருந்துங்கள் சகோ......வேறென்ன சொல்ல...
Deleteநன்றி
பசியைக் கிளப்பிய வடை! ஏக்கம்தான் என்வயதுக்கு விடை!
ReplyDeleteவருகைக்கு நன்றி ஐயா
Deleteவணக்கம் சகோதரி.!
ReplyDeleteகாணும் போதே சாப்பிட வேண்டும் போல் இருக்கிறது. நல்ல செய்முறை.! சத்துள்ள பொருள்களுடன் குறிப்பாக எண்ணெய் அதிகம் குடிக்காத வடை.! செய்து பார்த்திடலாம். பகிர்ந்தமைக்கு நன்றி.!
என் வலைத்தளம் பக்கம் தங்கள் வருகையை காண முடிவதில்லையே. சகோதரி ! நேரம் கிடைக்கும்போது, என் தளத்திற்கு வருகை தரவும். நன்றி.!
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
தங்கள் தளத்திற்கு வந்து கருத்திட்டு வந்தேன் சகோ. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ
Deleteசாப்பிடணும் போல இருக்கு அக்கா....
ReplyDeleteவாங்கோ சகோ சாப்பிட்டு விடலாம்.
Deleteஇந்த வடையை இந்த ஞாயிற்றுக்கிழமை செய்து பார்க்கச் சொல்லி சாப்பிட்டு விட வேண்டியது தான்.
ReplyDeleteகட்டாயமாக செய்து சாப்பிட்டு விட்டு சொல்லுங்கள் சகோ.நன்றி
Deleteஹை புதுசா இருக்கே! பகிர்வுக்கு நன்றி சகோதரி! செய்துட வேண்டியதுதான்....அதுவும் எண்ணைக் குடிக்காதுனு வேற சொல்லிருக்கீங்க.....
ReplyDeleteஆஹா...வாங்கோ சகோ...நீங்கள் விரைவில் செய்து பார்த்து விடுவீர்கள் அப்புறம் வந்து சொல்லுங்கள். நன்றி
Deleteசோள் வடை அருமை.
ReplyDelete