தேவையான பொருட்கள்
கூழ் வற்றல் - 2 கை
வெங்காயம் - 1
சிறிய வெங்காயம் இருந்தால் நல்லது
தக்காளி -1
பூண்டு - 20
கருவேப்பிலை
சம்பார் பொடி - 1 1/4 மே.க
மஞ்சள் தூள் - சிறிது
வெந்தயத்தூள் - சிறிது
புளி - 1எலுமிச்சை
உப்பு - தேவைக்கு
வெல்லம் - சிறிது
அரிசி கழுவிய நீர் - 1 டம்ளர்
தாளிக்க வேண்டியவை
நல்லெண்ணெய் - 5 மே.க
கடுகு - 1/4 தே.க
கடலைப்பருப்பு - 3/4 தே.க
சோம்பு - 1/4 தே.க
பெருங்காயம் - சிறிது
தாளிக்கவும்.
வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
பூண்டு சேர்த்து வதக்கவும்.
தக்காளி சேர்த்து வதக்கவும்.
பொடிகளைப் போட்டு எண்ணெய்யில் நன்கு வதக்கவும். பச்சைவாசம் போய் பொடி சற்று நிறம் மாறும்
புளித்தண்ணீரை சேர்க்கவும்.
வற்றலை தண்ணீரில் அலசி விட்டு, 3 நிமிடங்கள் ஊறவிடவும். அதை சேர்க்கவும்
அரிசி கழுவிய நீரை சேருங்கள்
வெல்லம் சேர்த்து இறக்கவும். நேரம் ஆக ஆக வற்றல் குழம்பை உறிஞ்சிக் கொள்ளும். ஆகையால் சற்று தளற வைக்கவும்.
செட்டி நாட்டு கூழ் வத்தல் குழம்பு தயார்.....!!!
நான் வரேன்.....எங்கேன்னு கேட்குறீங்களா...? சாப்பாட்டை ஒரு பிடி பிடிக்கத்தான். மிகவும் பிடித்த குழம்பு. வரட்டா...வரட்டா....
கூழ் வற்றல் குழம்பு..
ReplyDeleteசெய்முறையைப் படிக்கும் போதே கலக்குகின்றது!..
எளிதாக இருந்தாலும் - குவைத்தில் கூழ் வற்றலுக்கு எங்கே போவேன்!..
உடனடி வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா
Deleteசுவை! நாங்கள் அப்பளக் குழம்பு செய்வோம். அதுசரி, வெந்தயம் தாளிக்க வேண்டாமோ!
ReplyDeleteநண்பர் ஸ்ரீராம்! அவங்க வெந்தயப் பொடியா போட்டுருக்காங்களே! நாங்களும் வெந்தயம் தான் தாளிப்பதுண்டு...அப்பளக் குழம்பு செய்யும் போது....-கீதா
Deleteவெந்தயப்பொடி சிறிது... ஓகே ஓகே.. ஆனால் தாளிக்கும்போது கொஞ்சம் தாராளமாகவே வெந்தயம் தாளிப்போம்!
Deleteமுழு வெந்தயம் கசக்கும் என்பதால் நான் பொடியாக உபயோகப்படுத்துவேன் சகோ.
Deleteசில சமயங்களில் சிறிதாக தாளிப்பேன்.
//நான் வரேன்.....எங்கேன்னு கேட்குறீங்களா...?//
ReplyDeleteஆமாம். ஆமாம்.
//சாப்பாட்டை ஒரு பிடி பிடிக்கத்தான்.//
அதானே பார்த்தேன் ! :)
//மிகவும் பிடித்த குழம்பு. வரட்டா...வரட்டா....//
கொடுத்து வைத்த மகராஜிக்கு ....... வாழ்த்துகள்.
பெண்கள் பொதுவாக வத்தக்காய்ச்சியாக [SLIM ஆக] இருக்கவே விரும்புவார்கள். ஆனால் நீங்க தினமும் ஏதாவது ஒரு தீனிப்பதிவுகள் வீதம் வெளியிட்டுக் கலக்குவதுடன், என்னைப்போலவே, சாப்பாட்டை ஒரு பிடி பிடிக்கக் கிளம்பி விடுகிறீர்கள் .....
கேட்கவே மிகவும் சந்தோஷமாகவும் சற்றே பொறாமையாகவும்கூட உள்ளதுங்க :)
வாழ்த்துகள் !
ஹஹஹா.....நன்றி ஐயா.
Deleteவீட்டில் சொன்னது : "எல்லாமே இருக்கு... கூழ் வற்றல் தான் இல்லை..."
ReplyDeleteநன்றி...
அந்தப் பக்கம் கூழ் வற்றல் கிடைக்குமே சகோ. வாங்கி சகோதரிக்கு கொடுங்கள். நன்றி
Deleteஅருமையான கூழ்வத்தல் குழம்பு .
ReplyDeleteசெய்து பார்க்கிறேன்.
வத்தக்குழம்பு எனக்குமிகவும் பிடிக்கும்
ReplyDeleteதமிழ் மணம் 4
ருசித்தோம். நன்று.
ReplyDeleteகூழ்வற்றல் பொரித்து உண்ண மட்டும்தான் என்று நினைத்திருந்தேன். குழம்பும் வைக்கலாம் என்று அறிந்து வியப்பு. பகிர்வுக்கு நன்றி உமையாள். நிச்சயம் செய்துபார்க்கிறேன்.
ReplyDeleteநன்றி கீத மஞ்சரி.
Deleteசகோதரி இந்தக் குழம்பு, அப்பளம் அல்லது கூழ் வற்றல் போட்டு, வெங்காயம் + பூண்டு சேர்த்தோ சேர்க்காமலோ செய்வதுண்டு.சோம்பு போட்டதில்லை. அது போல் சாம்பார் பொடியும் சேர்க்காமல், வற்றல் மிளகாய் சிறிது சிறிதாகக் கிள்ளிப் போட்டுச் செய்வதுண்டு. இந்தக் குறிப்பையும் எங்கள் லிஸ்டில் சேர்த்தாயிற்று. மிக்க நன்றி!
ReplyDeleteநன்றி சகோ
Deleteஹை!!! புது ரெசிபி !! நானும் ட்ரை பண்ணுறேன். நன்றி தோழி!
ReplyDeleteநன்றி சகோ
Deleteவணக்கம் சகோதரி.!
ReplyDeleteசுவையான குழம்பை அறிமுகம் செய்ததற்கு நன்றி. செய்முறைகளுடன், படங்களுமாக கண்ணை கவர்ந்தது. நான் அப்பளத்தை வைத்துதான் வழக்கப்படி செய்வேன். ( இன்று ௬ட அந்த குழம்புதான் எங்கள் வீட்டில்.) தங்கள் செய்முறை வித்தியாசமாக இருந்தது. அவசியம் செய்து பார்க்கிறேன். ஒரு சிறு சந்தேகம்.... அரிசி கழுவிய நீர் எதற்கு.? குழம்பு கெட்டியான பதத்திற்கு வரவா.? இல்லை. ருசிக்கா.?
தங்களுக்கு என் மனமார்ந்த மகளிர் தின வாழ்த்துக்கள்...
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
அரிசி கழுவிய நீர் எதற்கு.? குழம்பு கெட்டியான பதத்திற்கு வரவா.? இல்லை. ருசிக்கா.?//
ReplyDeleteகெட்டியான பதத்திற்க்காகவும், கூடுதல் ருசிக்காகவும், அதில் உள்ள சத்துக்களுக்காகவும் பயன் படுத்துவது.
பொதுவாக இந்த நீரை நாம் தினமும் பயன் படுத்திக் கொள்ளாலாம். ஒன்றிரண்டு ஐட்டத்திற்கு கண்டிப்பாக பயன் படுத்துவார்கள். ஆகையால் அப்போது அதை மறக்காமல் பயன் படுத்துவேன். மற்ற நாட்களில் நினைவு இருக்கும் போது பயன் படுத்திக் கொள்வேன்.
உங்களுக்கும் என் மனமார்ந்த மகளிர் தின வாழ்த்துக்கள்... சகோ
வணக்கம் சகோதரி.!
Deleteஅரிய தகவல்களுக்கு நன்றி.! பொங்கலன்று முதலில் லேசாக அரிசி பருப்பை கழுவி விட்டு இரண்டாம் முறை கழுவிய நீருடனே அடுப்பில் கொதிக்கும் நீர் கலந்த பாலுடன் கலந்து பொங்கல் செய்வோம். வேறு எந்த சமையலுக்கும், அரிசி கழுவிய நீரை உபயோகபடுத்தினதில்லையாததால், விபரம் கேட்டேன் ௬றியமைக்கு நன்றி.!
சிறு குழந்தைகளுக்கு அதாவது நடக்கும் பிராயத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு, காலில் பலமில்லாமல் சற்றை துவண்டால், இந்த அரிசி கழுவிய நீரை தினமும் வெதுவெதுப்பாக சுடவைத்து முழங்காலிருந்து பாதம் வரை லேசாக கைகளினால் நீவி விட்டு அந்நீரை விட்டு வர குழந்தைகள் சட்டென்று ஒருமாதத்தில் நடை பயில ஆரம்பித்து விடுவார்கள்.
இது என் மாமியார் சொல்லி என் அனுபவத்தில் பலன் கண்டது. இந்த நீரின் பலனை சொல்லவேண்டுமென தோன்றியது. சொன்னேன். மற்றபடி நன்றி சகோதரி.!
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நல்ல ரெசிப்பி... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
ReplyDeleteமனமார்ந்த மகளிர் தின நல்வாழ்த்துகள்.
கூழ் வத்தல் குழம்பு வந்ததால்
ReplyDeleteஇனி...
சுண்ட வத்தல் குழம்பு
உண்ணும் வாயிடமிருந்து
வாய்தா வாங்கும் நிலை வரலாம்!
மணம் வீசும் கூழ் வத்தலை
குளீர்தேசத்தில் வாழும் நாங்கள் எங்கே போட்டு காய வைப்பது?
தமிழ் மணத்தில் மணம் வீசும் சகோதரி இனி இந்த குழம்பு
த ம 7
நட்புடன்,
புதுவை வேலு
புது ரெசிப்பியா இருக்கே. வீட்டுக்கார அம்மாக்கிட்ட சொல்லிடுறேன்.
ReplyDelete