இலவம் பஞ்சு போல்
இல்லையே மனசு
நனைந்த பஞ்சு போல்
கனத்திருக்குது ஏனோ...?
பஞ்சு மெத்தையில்
நித்திரை வரவில்லை...
பஞ்சு தலையணையில்
முகம் புதைத்தும்
உடல் கிடக்க
மனம் மட்டும்
ஊர்வலம் போகிறதே...?
அடங்காத்தனம்
அல்லல் செய்யும் குணம்
விசா தேவையில்லை
விளையாட்டாய் சுற்றுகிறது...
கட்டிவைக்க முடியவில்லை
கயிறு தேவையில்லை
இளையராஜா இசைக்கு மட்டும் சற்று...
இளைப்பாறி விடுகிறது
ஆஹா...!!!
கட்டிவைக்க
இசைக்கயிறு கிடைத்ததே நமக்கு...!!!
படம் கூகுள் நன்றி
ஓ ...இசைதான் உங்களையும் இப்படிப் பாட வைத்து விட்டதோ என் தோழி ?..:)
ReplyDeleteவாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் இசை என்னும் இன்ப வெள்ளத்தில் உங்கள் மனமும்
நீச்சல் அடிக்கடும் அதன் வழியில் இன்பக் கவிதைகள் பிறக்கட்டும் .
இளைப்பாற இசை தான் சகோ தோள்கள். தங்கள் வருக்கைக்கும் கருத்திற்கும் நன்றி
DeleteTamil manam 2
ReplyDeleteதமிழ் மண வாக்கிற்கும், வரவிற்கும் நன்றி சகோ.
Delete
ReplyDeleteஇளையராஜாவின் இசை வாழ்வில் இரண்டரக் கலந்தது.நல்ல கவிதை சகோ.
ஆம் நிறையப் பேர்களின் வாழ்க்கையில் இளையராஜாவின் இசை இரண்டரக் கலந்து தான் இருக்கிறது . வரவுக்கும், கருத்திற்கும் நன்றி சகோ
Deleteஇசைக்கயிறு என்னுந் தலைப்பே கவிதைதானே சகோ!
ReplyDeleteதொடர்கிறேன்.
த ம 3
இசைக்கயிறு என்னுந் தலைப்பே கவிதைதானே சகோ!//
Deleteநீங்கள் சொன்னால் சரிதான் சகோ. தொடர்வதற்கு நன்றி.
ஆஹா கவிதை அருமை இளையராஜாகூட இணைப்பில் வந்தது ஸூப்பர்.
ReplyDeleteதமிழ் மணம் அதான் நேரத்தே மொபைல்ல போட்டாச்சுல.....
தமிழ் மணம் அதான் நேரத்தே மொபைல்ல போட்டாச்சுல.....//
Deleteமேலே நீங்கள் வந்ததற்கு கருத்து போட்டு இருக்கிறேன் சகோ. தேவகோட்டைக்காரர்கள் முதல்ல மொய்வைத்து விட்டுத்தானே பேசவே ஆரம்பிப்போம்.
ரசித்து மகிழ்ந்தமைக்கு நன்றி சகோ
வணக்கம்
ReplyDeleteஇசையால் வசமாகாத இதயம் எது இளையராஜா பாடல் என்றால் ஒரு மவுசுதான் அருமையான வரிகள் பகிர்வுக்கு நன்றி
த.ம 4
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இசையால் வசமாகாத இதயம் எது//
Deleteஉண்மைதான். இசைக்கு அவ்வளவு சக்தியுண்டு அல்லவா..
தமவிற்கும், வரவிற்கும், ரசித்து கருத்திட்டமைக்கும் நன்றி ரூபன்
வணக்கம் சகோதரி.!
ReplyDeleteஇசையுடன் ௬டிய இசைவான கவிதை.. இசை கேட்டால் புவியே அசைந்தாடும் போது நம் மனமும் ஆடாதா சகோதரி?
மனக்கவலைகள் பஞ்சாக பறக்கவும் இசைதான் ஒரு நல்மருந்தாகும். சிறப்பாக உணர்ந்து கவிதையை எழுதியிருக்கும் தங்களுக்கு வாழ்த்துக்கள்.!
இசையினூடேயே முடிந்தால் என்தளம் வந்து பார்வையிட்டால் மகிழ்வடைவேன்.. நன்றி..
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
மனக்கவலைகள் பஞ்சாக பறக்கவும் இசைதான் ஒரு நல்மருந்தாகும்.//
Deleteவாஸ்தவமான ஒன்று சகோ. ரசித்து கருத்திட்டமைக்கு நன்றி சகோ
அருமை சகோதரி! கவிதை ! இசையே நம்மைக் கட்டிப் போடுவதுதான் அதில் இளையராஜாவும் இணைந்தது அருமை!!
ReplyDeleteஅன்பின் வரவிற்கும் கருத்திற்கும் நன்றி சகோ
Deleteஇசைக் கயிறு!..
ReplyDeleteகவித்துவமான வார்த்தை!..
கவிதை அருமை.. அருமை!..
அன்பின் வரவிற்கும் கருத்திற்கும் நன்றி ஐயா
Deleteரசித்தேன்...
ReplyDeleteஅன்பின் வரவிற்கும் கருத்திற்கும் நன்றி சகோ
Deleteகவிதை அருமை சகோ.
ReplyDeleteஇளையராஜா இசையை யார் தான் கேட்க மாட்டேன் என்று சொல்லுவார்கள்.
அன்பான வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி
Deleteமனதை இசையவைப்பது இசைதான். கவிதை அருமை.
ReplyDeleteஇளையராஜா இசைக்கு மட்டும் சற்று...
ReplyDeleteஇளைப்பாறி விடுகிறது!
அருமை!