உன் திருவடி தொழுதிட நினைத்திட்டாலும்
மனமது அலைபாயாமல் நிற்கவில்லை
உன்னுரு கண்முன் நின்றாலும் கூட
மனமது மிதந்து ஏந்தான் செல்கிறதோ
நாளும் நாளும் கடந்திட்டாலும்
நாம் தான் மாறாது செல்கின்றோமே?
நாளும் நீயுந் தான் பொறுத்தே போனாய்
நலவிரும்பி நீயும் கூடவே வந்தாய்
வந்தாய் வந்தாய் சாய் நாதா
தந்தாய் தந்தாய் அருளினை நீயும்
வென்றாய் வென்றாய் என் மனதினையும்
நின்றாய் நின்றாய் நினைவில் நாளும்
பாடல் தந்த சாய்பாபாவிற்கு நன்றி
படம் கூகுள் நன்றி
வந்தாய் சாய் நாதா சரணம் போற்றி...
ReplyDeleteசகோ நலம்தானே....
தமிழ் மணம் 2
நலம் சகோ..மிக்க நன்றி
Deleteஎன் உள்ளத்தில் எழும் உண்மையை
ReplyDelete"வந்தாய் வந்தாய் சாய் நாதா
தந்தாய் தந்தாய் அருளினை நீயும்
வென்றாய் வென்றாய் என் மனதினையும்
நின்றாய் நின்றாய் நினைவில் நாளும்" என்ற
வரிகள் வெளிப்படுத்துகின்றனவே!
மிக்க நன்றி ஐயா
Deleteநலமா சகோ ? பதிவும் அருமை.
ReplyDeleteநலம் சகோ நன்றி
Deleteவென்றாய் வென்றாய் என் மனதினையும்
ReplyDeleteநின்றாய் நின்றாய் நினைவில் நாளும்//
அருமையான இறுதி வரிகளுடன் அழகான பாடல். பாராட்டுக்கள்.
மிக்க நன்றி ஐயா
Deleteசாயி சரணம்! அருமை!
ReplyDeleteநன்றி சகோ
Deleteவாழ்க நலம்...
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteசாயி பற்றிய பாடல் அருமையாக உள்ளது.. பாடி மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம4
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி சகோ
Deleteகுருநாதர் திருவடிகள் சரணம்.. சரணம்!..
ReplyDeleteசாய் சரணம் நன்றி ஐயா
Deleteவியாழன் சாய் பகவானுக்கு உகந்த தினம்
ReplyDeleteகவிதை வடிவில் வந்தார்
நின்றார் நெஞ்சில்
படித்தாலே பரவசம்!
த ம +1
நட்புடன்,
புதுவை வேலு
சாய்ராம் நன்றி சகோ
Deletehttps://www.youtube.com/watch?v=GK_75Jsu5wc
ReplyDeleteஇந்த பாடலை இங்கே கேட்கலாம்.
ராகம் தர்பாரி கானடா.
ஆர்காட் ரோடில் உள்ள காமகோடி நகர் வளசரவாக்கம்
இங்கு தரிசனம் தரும் சாய் கோவிலில்
நான் இந்த பாடலை இன்று மாலை பாடி உளம் மகிழ்ந்தேன்.
சுப்பு தாத்தா.
www.menakasury.blogspot.com
உடனே சென்று கேட்கிறேன் ஐயா
Deleteசாய்பாபா முன் சென்று தாங்கள் பாடிவந்தது மிக்க மகிழ்ச்சி தாத்தா.மிக்க நன்றி
சாய் சரணம்! அருமையான வரிகள்! சகோதரி!
ReplyDeleteநலமா? சகோதரி?
ReplyDeleteநலம் சகோ
Deleteமனதை நெருடும் வரிகள். பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteஅருமையான பாடல்கள், அத்துனையும் அழகு.
ReplyDeleteதங்கள் நம்பிக்கை வெற்றியாக வாழ்த்துகிறேன்! நம்பிக்கையில் ஓடுவது தானே வாழ்க்கை!
ReplyDeleteநலம் தானே தோழி ....
ReplyDeleteசாயியின் நாமம் சங்கடம் தீர்க்கும்
தாயின் வடிவில் தரணியைக் காக்கும்
நோயின் பிடியை தளர்த்தி நீக்கும்
சேயினைப் போல அணைத்தே மகிழும்.
அருமையான பாடல் அமைதியை காக்கும் வாழ்த்துக்கள் ...!
நல்ல கவிதை...
ReplyDeleteசாய் நாமம் போற்றுவோம்...
அருமை சகோ..!
ReplyDeleteஇனியா அவர்கள் எழுதிய சாய் பற்றிய கவிதையையும் பார்க்க வேண்டுகிறேன்.
நன்றி
தம கூடுதல் 1