Thursday 26 March 2015

நலவிரும்பி




உன் திருவடி தொழுதிட நினைத்திட்டாலும்
மனமது அலைபாயாமல் நிற்கவில்லை
உன்னுரு கண்முன் நின்றாலும் கூட
மனமது மிதந்து ஏந்தான் செல்கிறதோ


நாளும் நாளும் கடந்திட்டாலும்
நாம் தான் மாறாது செல்கின்றோமே?
நாளும் நீயுந் தான் பொறுத்தே போனாய்
நலவிரும்பி நீயும் கூடவே வந்தாய்

வந்தாய் வந்தாய் சாய் நாதா
தந்தாய் தந்தாய் அருளினை நீயும்
வென்றாய் வென்றாய் என் மனதினையும்
நின்றாய் நின்றாய் நினைவில் நாளும்




பாடல் தந்த சாய்பாபாவிற்கு நன்றி

படம் கூகுள் நன்றி


28 comments:

  1. வந்தாய் சாய் நாதா சரணம் போற்றி...
    சகோ நலம்தானே....
    தமிழ் மணம் 2

    ReplyDelete
    Replies
    1. நலம் சகோ..மிக்க நன்றி

      Delete
  2. என் உள்ளத்தில் எழும் உண்மையை
    "வந்தாய் வந்தாய் சாய் நாதா
    தந்தாய் தந்தாய் அருளினை நீயும்
    வென்றாய் வென்றாய் என் மனதினையும்
    நின்றாய் நின்றாய் நினைவில் நாளும்" என்ற
    வரிகள் வெளிப்படுத்துகின்றனவே!

    ReplyDelete
  3. நலமா சகோ ? பதிவும் அருமை.

    ReplyDelete
  4. வென்றாய் வென்றாய் என் மனதினையும்
    நின்றாய் நின்றாய் நினைவில் நாளும்//


    அருமையான இறுதி வரிகளுடன் அழகான பாடல். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  5. வணக்கம்
    சாயி பற்றிய பாடல் அருமையாக உள்ளது.. பாடி மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம4

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. குருநாதர் திருவடிகள் சரணம்.. சரணம்!..

    ReplyDelete
    Replies
    1. சாய் சரணம் நன்றி ஐயா

      Delete
  7. வியாழன் சாய் பகவானுக்கு உகந்த தினம்
    கவிதை வடிவில் வந்தார்
    நின்றார் நெஞ்சில்

    படித்தாலே பரவசம்!
    த ம +1
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. சாய்ராம் நன்றி சகோ

      Delete
  8. https://www.youtube.com/watch?v=GK_75Jsu5wc
    இந்த பாடலை இங்கே கேட்கலாம்.

    ராகம் தர்பாரி கானடா.
    ஆர்காட் ரோடில் உள்ள காமகோடி நகர் வளசரவாக்கம்
    இங்கு தரிசனம் தரும் சாய் கோவிலில்
    நான் இந்த பாடலை இன்று மாலை பாடி உளம் மகிழ்ந்தேன்.

    சுப்பு தாத்தா.
    www.menakasury.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. உடனே சென்று கேட்கிறேன் ஐயா
      சாய்பாபா முன் சென்று தாங்கள் பாடிவந்தது மிக்க மகிழ்ச்சி தாத்தா.மிக்க நன்றி

      Delete
  9. சாய் சரணம்! அருமையான வரிகள்! சகோதரி!

    ReplyDelete
  10. மனதை நெருடும் வரிகள். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  11. அருமையான பாடல்கள், அத்துனையும் அழகு.

    ReplyDelete
  12. தங்கள் நம்பிக்கை வெற்றியாக வாழ்த்துகிறேன்! நம்பிக்கையில் ஓடுவது தானே வாழ்க்கை!

    ReplyDelete
  13. நலம் தானே தோழி ....

    சாயியின் நாமம் சங்கடம் தீர்க்கும்
    தாயின் வடிவில் தரணியைக் காக்கும்
    நோயின் பிடியை தளர்த்தி நீக்கும்
    சேயினைப் போல அணைத்தே மகிழும்.

    அருமையான பாடல் அமைதியை காக்கும் வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
  14. நல்ல கவிதை...
    சாய் நாமம் போற்றுவோம்...

    ReplyDelete
  15. அருமை சகோ..!
    இனியா அவர்கள் எழுதிய சாய் பற்றிய கவிதையையும் பார்க்க வேண்டுகிறேன்.
    நன்றி
    தம கூடுதல் 1

    ReplyDelete