Wednesday, 18 March 2015

கடலுக்கு கண்ணாடி...!!!






நீலவானம் விரிந்திருக்க
நீலமாய் கடலும் கிடந்தது

சாம்பல் வண்ண மேகம் சூழ
பழுப்பேறிப் போனது

காற்று மேகக்கூட்டம் கலைக்க
கைவிரித்து கரை தொட்டது

அங்கங்கு தீவாய் மேகம் கிடக்க
திட்டுதிட்டாய் கருநீல நீரானது

காலைப் பனி வானம் போல
வெள்ளிப் போர்வை மூடிற்று

மூடுபனி வானம் மூட
தன்னையும் மூடிக் கொண்டது

சிவந்த வானம் விடை பெற
சோகமாகிப் போனது

பொன்னொளி பெளர்ணமிக்கு
பொங்கி பொங்கி வருகுது

அம்மாவாசை என்றாலும்
ஆர்ப்பாட்டம் செய்யுது

மழை நீரைச் சொரிந்தாலும்
மனமுவந்து கலக்குது

அதனின் சாயல் கண்டு இதுவும்
சாயல் மாறிப் போகுது

கடலுக்கு கண்ணாடி
வானம் தானே





21 comments:

  1. //கடலுக்கு கண்ணாடி வானம் தானே//

    நல்ல கற்பனை. அருமையான ஆக்கம். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. கடலுக்கு கண்ணாடி வானம் - வித்தியாசமான சிந்தனை.
    அருமையான கவிதை சகோ.

    ReplyDelete
  3. கடலுக்கு வானம் கண்ணாடிதானே?

    அப்படித்தான் தோன்றுகிறது!

    ReplyDelete
  4. கடலுக்குக் கண்ணாடி வானம்தான், அருமை.

    ReplyDelete
  5. அழகான ரசனையை ரசித்தேன்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. வணக்கம்
    கற்பனைத் திறன் கண்டு வியந்து விட்டேன் இரசிக்கவைக்கும்வரிகள்பகிர்வுக்கு நன்றி த.ம 4
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  7. கவிதை அழகு தொடருங்கள்..
    த.ம.5

    ReplyDelete
  8. நீல வானம் முகம் பார்க்க - கடல் அல்லவா கண்ணாடி என்று எண்ணியிருந்தேன்!..

    கடல் அலை போல - கவிதை வரிகள்!.. வாழ்க.. வளர்க!..

    ReplyDelete
  9. இல்லை. வானத்தின் கண்ணாடி கடல். அப்படித்தான் நோபெல் பரிசு பெற்ற c.v. ராமன் சொல்கிறார்.
    Jayakumar

    ReplyDelete
  10. அன்பின் அருந்தகையீர்!
    வணக்கம்!
    இன்றைய...
    வலைச் சரத்திற்கு,
    தங்களது தகுதி வாய்ந்த பதிவு
    சிறப்பு செய்துள்ளது!
    வருக!
    வலைச்சரத்தில் கருத்தினை தருக!
    http://blogintamil.blogspot.fr/
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  11. மூடுபனி வானம் மூட
    தன்னையும் மூடிக் கொண்டது
    அருமையான வரிகள், அழகாக செல்கிறது. வாழ்த்துக்கள். நன்றி.

    ReplyDelete
  12. வணக்கம் சகோதரி.!

    கற்பனைச் செறிவுடன் ௬டிய அட்டகாசமான வார்தைகளுடன் கடலுக்கு கண்ணாடி அணிவித்துள்ளீர்கள்....
    ஒவ்வொன்றையும் ரசித்தேன் .

    உண்மைதான்.. வானத்தின் செயல்களோடு என்றும் கடலும் ஒத்துழைக்கிறது....

    \\அதனின் சாயல் கண்டு இதுவும்
    சாயல் மாறிப் போகுது

    கடலுக்கு கண்ணாடி
    வானம் தானே//

    மிகப்பொருத்தமான வார்த்தைகள்.. சிறப்பான கவிதைக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்..

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  13. கடைசி வரி நச்:)

    ReplyDelete
  14. கடலுக்கு கண்ணாடி வானம் அருமையான கவிதை.

    ReplyDelete
  15. அதுவும் சரிதானே.

    ReplyDelete
  16. கடலுக்கு கண்ணாடி வானம் ஆஹா...நல்ல கற்பனை...

    ReplyDelete
  17. மிக அருமையான கவிதை சகோ. தொடருங்கள் நானும் தொடர்கிறேன்.

    ReplyDelete
  18. என்ன ஆச்சு சகோ ? பதிவையே காணோம்....

    ReplyDelete
  19. நல்ல ரசனை....

    வாழ்க வளமுடன்...

    ReplyDelete
  20. ஓ! கடலுக்குக் கண்ணாடி வானமா....அட! வானிற்குக் கண்ணாடி கடல் என்று நினைத்திருந்தோம்..அழகானக் கற்பனை.........

    ReplyDelete
  21. விரைவில் நலம் பெற வேண்டுகிறேன் சகோ.

    ReplyDelete