Monday 2 March 2015

வாழ்க்கை வசப்படும்




பரிதாபத்தை எதிர் பார்த்தான்...
பரிதாபம் கிடைத்தது
மகிழ்ந்து போனான்...


காரியம் கைகூடியது
அடுத்துஅடுத்து...
முயன்றான்...
பாவமாகிப் போனான்

தொடர்ந்தான்....
தொல்லையானான்

திரும்பவில்லை யாரும்
திருந்தாதவன் இவனென...
திசைமாறிப் போனார்கள்
நண்பர்கள்...

சுய பச்சாதாபம்
சூழ்ந்து கொண்டது
வீட்டுக் கைதியானான்

பரிதாபம் அவனை
இப்போது படுத்தியெடுக்கிறது.

பரிதாப நிலையென்றாலும்
யாருக்கும் இடம் கொடேல்
பரி போல் எழுச்சி கொண்டு ஓடலாம்
வாழ்க்கை வசப்படும்.





39 comments:

  1. ஆம் சகோதரி!
    "பரி போல் எழுச்சி கொண்டு ஓடலாம்
    வாழ்க்கை வசப்படும்."
    உண்மையும்கூட! ஆனால் பரி தறிக்கெட்டு ஓடாது இருக்க வேண்டும் அல்லவா?

    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. பரி தறிக்கெட்டு ஓடாது இருக்க வேண்டும் அல்லவா?//

      ஆம் அளவுக்கு மிஞ்சினால் எதுவும் ....அப்படித்தான். நம் கையில் தான் இருக்கிறது குதிரையின் கடிவாளம்.

      Delete
  2. அருமை. நல்லதொரு கருத்தை நயமாகச் சொல்லி இருக்கிறீர்கள்.

    ReplyDelete
  3. பரிதாபஞ்களும் சுய பச்சாதாபங்களும் நம்மை வளர்க்காது என்பார்கள் கற்றரிந்த பெரியவர்கள்,மாறாய் விழுந்து எழ பழக்கிக்கொள்ளுதல் நலம் என்கிறார்கள்.
    அதை நான் முன் மொழிகிறேன்/

    ReplyDelete
    Replies
    1. ஆம் உண்மை தான் சகோ பரிதாபத்திற்கு இடம் அளிக்காமலும், விழுந்து எழும் போது அதில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு , நம்மால் முடியும் என்கிற நம்பிக்கையுடன் செல்ல வேண்டும். மிக்க நன்றி

      Delete
  4. இன்னும் கொஞ்சம் முயற்சி செய்யுங்க. கவிதை உங்களுக்கு இயல்பாக வருகின்றது.

    ReplyDelete
    Replies
    1. இன்னும் முயற்சி செய்கிறேன் சகோ. மிக்க நன்றி

      Delete
  5. வணக்கம்
    பரியை மனித வாழ்க்கைக்கு ஒப்பிட்ட விதம் நன்று கவியை இரசித்தேன் த.ம 4
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. நமக்குள் நமக்கே வேண்டும் ஊக்கம்...

    ReplyDelete
  7. எழுந்துவிட்டாலே வெற்றிதான்...
    அழகிய வரிகள்

    ReplyDelete
    Replies
    1. ஆம் தங்களின் முதல் வருகைக்கு வந்தனங்கள்

      நன்றி சகோ

      Delete
  8. அவன் வேண்டியது பரிதாபம் தானே.. அதை அனுபவிக்கட்டும்!..

    ReplyDelete
  9. பரிதாபத்தை இனி பரிதாபமாகப் பார்க்க வைத்துவிட்டது உங்கள் கவிதை.

    ReplyDelete
  10. பரிக்கும் கடிவாளம் உண்டு. நம் முத்தோர் சொல். கவிதை அருமை.

    ReplyDelete
    Replies
    1. பரிக்கும் கடிவாளம் உண்டு. நம் முத்தோர் சொல்//

      ஆம். சோர்ந்து விடாமல் எழுச்சி கொண்டு நாம் இருக்கவேண்டும். நன்றி சகோ

      Delete
  11. பரிதாபத்திற்கு கடிவாளமிட்டால் பரியாக எழுந்து ஓடலாம்! அருமை!

    ReplyDelete
  12. வணக்கம் சகோதரி.!

    நல்லதோர் கவிதை.எதுவுமே அளவுக்கு அதிகமானால் வாழ்க்கை கசந்துதான் போகும். அது இனிதாக. மாற்றம் நிச்சயம் வேண்டும்.என்ற வாழ்க்கை தத்துவத்தை உணர்த்தியது தங்கள் கவிதை.!வாழ்த்துக்கள்.!

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  13. பரிதாப நிலையென்றாலும்
    யாருக்கும் இடம் கொடேல்
    பரி போல் எழுச்சி கொண்டு ஓடலாம்
    வாழ்க்கை வசப்படும்

    ஊக்கம் தரும் மருந்து போல நல்ல கருத்து!

    ReplyDelete
  14. அருமையான கவிதை சகோ பாராட்டுகள்
    தமிழ் மணம் நவரத்தினம்

    ReplyDelete
  15. வாழ்க்கை வசப்படும் ..... கவிதைத்தலைப்பும், வரிகளும், வெள்ளைக் குதிரைப்படமும் பேரெழுச்சியாக உள்ளன. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  16. நன்றாக எழுதுகிறீர்கள் தோழி.தொடர்ந்து எழுத வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. எழுதுகிறேன் சகோ நன்றி

      Delete
  17. அவன் ஆடிய வேடம் கலைந்ததா அந்தோ பரிதாபம் ,அடியேனின் அனுதாபம் :)
    த ம 10

    ReplyDelete
  18. பரி தாபம்
    பரிதாபம்
    சூப்பர் தோழி!!

    ReplyDelete
  19. நல்லதொரு கருத்து ! அதை நயம்பட அழகாகச் சொல்லி இருக்கின்றீர்கள் சகோதரி!

    ReplyDelete
  20. அட தன்னம்பிக்கை கவிதை உங்களுக்கு என்னமா வருது. அருமை அருமை. வாழ்த்துக்கள் சகோ.

    ReplyDelete
  21. நல்ல கருத்துக்கள் கொண்ட கவிதை..
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete