Thursday, 2 April 2015

அளவுகோ ளில்லா அன்பு...!!!




அளவுகோ ளில்லா அன்பு தன்னயே
அளவிடாது பொழிந்தாய் நல் சாயிநாதா
அன்புப் பூவிரி முகமது தன்னில்
அபயம் தந்தாய்  அருளிக் காத்தாய்

காற்றாற்று வெள்ளமென கடக்கவேண்டாம்
கரைக்குள் அழகாய் ஓடிடவே நீயும்
காத்தாய் காக்கவும் உதவிட வைத்தாய்
கற்றலின் நுட்பம் நொடிக்குள் விதைத்தாய்

பார்த்தாய் பார்த்தாய் ஆத்மத்தில் விழிப்பு
பார்க்க வைத்தாய் பறைகள் ஒலிக்காது
தேங்கி  நிற்கையிலும் தேடித்தேடி நடக்க வைத்தாய்
தேவன் நான் நிற்கையில் நடவாதது ஏது என்றாய்

மனதின் ஆட்டத்தை அடக்கி வைத்தாய்
மாற்றுக் கருத்தை காதில் போதித்தாய்
துள்ளும் போதும் துவளும் போதும்
தூண்ணில் நீயும் கட்டி வைத்தாய்

வட்டம் சின்னது ஆன போதும்
மனமதின் வட்டம் விரிந்த போதும்
வெளியில் காலடி வைக்காது சிறைபோல்
அடைபட்டு கிடந்து தவித்த போதும்

ஒளிக்குள் ஜுவாலை நீயாக காட்டி
ஒண்டிய மனமது கொதித்த போதும்
கோவிலற்ற ஊரின் நடுவே நீதான்
கோவிலாய் காத்து அமுது படைத்தாய்

திக்கெல்லாம் நீ என்கிற போதும்
தீண்டித் தழுவிட உன் பாதம் வேண்டும்
கொலுவாய் கோவிலில் வீற்றிருக்க உன்னை
காணாது கண்டம் கடந்தது ஏனோ?

அழகாய் அமர்ந்த உன்னுரு கண்டு
கண்கள் பூமாரிப் பொழிந்திட வேண்டும்
உள்ளக் கங்கை பிரவாகம் பெருகி
உன்னில் கலந்து மூழ்கிட வேண்டும்

தெவிட்டாது உன்கானம் இயற்றிட நீயும்
என்னுள் புகுந்து எழுதிட வேண்டும்
ஆணவம் தலைக்குள் புகாத  கவசம் வேண்டும்
எளிமையில் தீபமாய் ஒளிர்ந்திட வேண்டும்

வழிவழியாய் சந்ததி தழைக்க நீ வேண்டும்
வயிறது அனல் கொள்ளாது வாழவேண்டும்
வாழ்க்கையின் போக்கை வாழ்ந்து கழிக்க
வழித்துணையாக நீயே தினம் வந்திட வேண்டும்






நன்றி சாய்நாதா

படம் நன்றி கூகுள்



19 comments:

  1. அளவுகோள் இல்லா அன்புடன் எழுதியுள்ள குருவாரக் கவிதை அருமை. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. வழிவழியாய் சந்ததி தழைக்க நீ வேண்டும்
    வயிறது அனல் கொள்ளாது வாழவேண்டும்

    சீரடி சாய் பாபா பாதம் பணிவோம்

    ReplyDelete
  3. வணக்கம்
    சகோதரி

    கருணை உள்ள நெஞ்சிலே இறைவன்இருக்கிறார் ... அது போல கருணை உள்ளம் கொண்ட சாயி பற்றி சொல்லிய விதம் நன்று இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம1
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. ஆணவம் புகாத அளவிலான கவசம் நம் அனைவருக்குமே தேவை. நன்னெறிப்படுத்தும் நல்ல வரிகள். நன்று.

    ReplyDelete
  5. சாயி கடாட்சம் என்றும் கிடைக்கும் தோழி! அருமை அருமை வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
  6. // ஆணவம் தலைக்குள் புகாத கவசம் வேண்டும்
    எளிமையில் தீபமாய் ஒளிர்ந்திட வேண்டும் //

    சிறப்பான வரிகள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. Beautiful enunciation as how a baba devotee feels

    at his heart
    Serene and
    Supreme

    ReplyDelete
  8. குருவாரம் தோறும் குருவைப் போற்றிடும் பாமாலை!..

    நன்றாய் நாளும் நாளும் வாழ்க!..
    குருவே சரணம்!.. சரணம் .. சரணம்!..

    ReplyDelete
  9. அளவுகோ ளில்லா அன்பு தன்னயே
    அளவிடாது பொழிந்தாய் நல் சாயிநாதா//

    அருமை! அருமை! ஆம் இறைவனின் அன்பிற்கு அளவு உண்டோ? அடைக்கும் தாழ்தான் உண்டோ?! சாயி நாதா சரணம் சரணம்!!

    ReplyDelete
  10. சாயி புகழ் பாடும் கவிதை அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. வழிவழியாய் சந்ததி தழைக்க நீ வேண்டும்
    வயிறது அனல் கொள்ளாது வாழவேண்டும்
    வாழ்க்கையின் போக்கை வாழ்ந்து கழிக்க
    வழித்துணையாக நீயே தினம் வந்திட வேண்டும்

    இவை அனைவருக்கும் கிடைக்கட்டும்
    தமிழ் மணம் 5

    ReplyDelete
  12. அருமை.. அன்புக்கேது அளவுகோல்!! அளவுகடந்த அன்பு இது.

    ReplyDelete
  13. வணக்கம் சகோதரி.!

    நலமா ? அருமையான பாடல். மனமுருகி நீங்கள் பாடியதை நாங்களும் சேர்ந்து பாடும் போது மனச்சோர்வகன்றி சாயின் அருளில் திளைப்பது போல் உள்ளது. பாடலை உங்களுக்கு அருளிய சாய் பாபாவுக்கு கோடி நமஸ்காரங்கள். இனிதான பாடலை எங்களுக்கும் சமர்பித்த தங்களுக்கும் என் பணிவான நன்றிகள். குருவின் பாதமே துணை.

    தாமத வருகை தந்து கருத்துரை இட்டமைக்கு மன்னிக்கவும்.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  14. yathavan nambiApril 14, 2015 at 3:01 AM
    அன்பு சகோதரி.!
    வணக்கம்!
    மன்மத ஆண்டில் மகுடம் சூடி மகிழ்வு பெறுக!
    இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்
    நட்புடன்,
    புதுவை வேலு
    WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM

    சித்திரைத் திருநாளே!
    சிறப்புடன் வருக!

    நித்திரையில் கண்ட கனவு
    சித்திரையில் பலிக்க வேண்டும்!
    முத்திரைபெறும் முழு ஆற்றல்
    முழு நிலவாய் ஒளிர வேண்டும்!


    மன்மத ஆண்டு மனதில்
    மகிழ்ச்சியை ஊட்ட வேண்டும்!
    மங்கலத் திருநாள் வாழ்வில்!
    மாண்பினை சூட வேண்டும்!

    தொல்லை தரும் இன்னல்கள்
    தொலைதூரம் செல்ல வேண்டும்
    நிலையான செல்வம் யாவும்
    கலையாக செழித்தல் வேண்டும்!

    பொங்குக தமிழ் ஓசை
    தங்குக தரணி எங்கும்!
    சீர்மிகு சித்திரைத் திருநாளே!
    சிறப்புடன் வருக! வருகவே!

    புதுவை வேலு

    ReplyDelete
  15. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete
  16. வணக்கம் சகோதரி.!

    நலமா? வெளியூர் பயணமா? தங்கள் பதிவுகளை காண ஆவலாயுள்ளேன்.
    தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  17. அருமையான சாய் பாடல், வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. சாய் குறித்த பாடல் அருமை.
    தாமதம் இல்லை, ஏற்கனவே வந்தேன், கருத்திட்ட நினைப்பில் சென்றுவிட்டேன் ,
    நன்றி.

    ReplyDelete