கண்கள் நிறைந்தன உன் தரிசனத்தால்
நானாக நான் இல்லை அப்போது சாயி
குரு நீயென திடமான மனதின் போக்கு
குருவின் அருகாமையை உணர்த்திடும் நாளும்
கூர்வாளாய் என்னுள் நீ இறங்கி விட்டதால்
வழிந்தோடும் இரத்தம் உன் பெயர் இசைத்தது
வலியது இன்றி வாழ்க்கையின் செயல்கள்
வந்தனம் பாடி உன்பின் வந்தது
படம் கூகுள் நன்றி
பாடல் தந்த சாய்க்கு நன்றி
சிறப்பான பாடல்! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteநன்றி சகோ
Deleteவணக்கம் சகோதரி.
ReplyDeleteநலமா? என் கண்களும் நிறைந்தன நீண்ட நாள் சென்று தங்கள் சாய் பாமாலை கண்டு. சாய்பாபாவின் பாமாலை இனித்தது. அந்த குருவின் அருளால் இவ்வுலகில் அனைவருக்கும் அனைத்துமே இனிதாக நடக்க நானும் சாயின் பாதங்களைப் பற்றித் தொழுகிறேன்
அவரின் அருள் உலகத்தனைக்கும் பூரணமாக கிடைக்க வேண்டுகிறேன்..நன்றி சகோதரி.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
நலம் சகோ. என் மனமும் நிறைந்தது.நன்றி
Deleteவருக.. வருக.. வெகு நாட்களுக்குப் பிறகு இனிய பதிவு..
ReplyDeleteசாய் நாதன் துணையிருக்க சஞ்சலங்கள் இல்லை!..
சாய் சரணம்.. சரணம்.. சரணம்..
ஆம் ஐயா. வெகுநாட்கள் ஆகிவிட்டன.
Deleteசாய் நாதன் துணையிருக்க சஞ்சலங்கள் இல்லை!..//
முற்றிலும் உண்மை. சாய்ராம் சாய்ராம்
வந்தனம் பாடி வந்த இசை
ReplyDeleteஎந்தன் சாய் நின்ற திசை
உந்து சக்தி தந்த விசை
சிந்துநதி யே எம் சாயே!
த ம 1
நட்புடன்,
புதுவை வேலு
மிக்க நன்றி சகோ
Deleteசகோவின் மீள் வருகையை வரவேற்கிறேன் தொடரட்டும் சாய் பாமாலை.
ReplyDeleteதமிழ் மணம் 2
சகோ நலமா ? மீண்டும் உங்களின் பதிவை பார்த்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். தொடரட்டும் உங்கள் பதிவு.
ReplyDeleteநலம் சகோ மிக்க நன்றி
Deleteஅன்பின் இனிய வலைப் பூ உறவே!
ReplyDeleteஅன்பு வணக்கம்
உழைக்கும் வர்க்கம் யாவருக்கும்
இனிய "உழைப்பாளர் தினம்" (மே 1)
நல்வாழ்த்துகள்
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
தங்களுக்கும் இனிய உழைப்பாளர் தினம் சகோ. நன்றி
Deleteஅன்பின் இனிய வலைப் பூ உறவே!
ReplyDeleteஅன்பு வணக்கம்
உழைக்கும் வர்க்கம் யாவருக்கும்
இனிய "உழைப்பாளர் தினம்" (மே 1)
நல்வாழ்த்துகள்
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
வியாழன் இன்று. சாய் கோவிலுக்கு என் மனைவியுடன் சென்று இருந்தேன்.
ReplyDeleteதலை குனிந்து அவள் சாயி பகவானின் பாதங்களை வணங்கியபோது அவள் மேல் புஷ்பம் ஒன்று விழுந்தது.
வீட்டுக்கு வந்து என் ஐ. பாட் திறந்தேன். நான் பாடவேண்டும் என்றே சாயி பகவான் உமையாள் காயத்ரி அவர்களைப் பாடல் எழுதித் தர போலும்.
காயத்ரி உமையாள் அவர்களுக்கு என்றுமே சாயி அருள் உண்டு.
சுப்பு தாத்தா.
www.menakasury.blogspot.com
சாயின் அருள் பூரணமாய் பெற்ற ஐயாவின் பாடல்...கேட்டு கண்கள் கசிந்தன. மிக்க நன்றி தாத்தா
Deleteகுருவாரத்திற்கேற்ற பதிவு .......
ReplyDeleteஅதனால்
வந்தனம் பாடி உன்பின் வந்தது
இந்த என் பின்னூட்டமும்
மிக்க நன்றி ஐயா
Deleteஅட நீண்ட நாட்களின் வருகை மிக்க மகிழ்ச்சியாய் உள்ளது.ம்..ம்..ம் இப்படி அசத்திவிட்டீர்களே சாயியை ம்..ம் புத்துணர்ச்சி யோடு படையுங்கள் பதிவுகளை இனி நாமும் அசர வாழ்த்துக்கள் தோழி .... !
ReplyDeleteஎனக்கும் கிக்க மகிழ்ச்சியாய் இருக்கிறது சகோ உங்கள் எல்லோரையும் கண்டது. வாழ்த்துக்களுக்கு நன்றி சகோ
Deleteஅருமை... தொடர வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி சகோ
Deleteவழக்கம் போல அருமையான கவிதை, அழகான புகைப்படத்துடன்.
ReplyDeleteநன்றி ஐயா
Deleteநலம்தானே உமையாள். நீண்ட இடைவெளிக்கு பின். சாய் யின் அருள் கிடைக்க வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅழகான படம். அருமையான படைப்பு.
நலம் சகோ. மிக்க நன்றி
Deleteஅருமை.
ReplyDeleteத.ம. +1