Friday, 1 May 2015

இஞ்சி குழம்பு

எல்லோரும் சுகம் தானே...?

ஒரு மாதம் ஆகிவிட்டது உங்கள் எல்லோரையும் பார்த்து...





தேவையான பொருட்கள்

இஞ்சி - 1 கை
வரமிளகாய் - 15
க.பருப்பு - 2 மே.க
புளி - எலுமிச்சை அளவு
உப்பு - ருசிக்கு
வெல்லம் - சிறிது


க.பருப்பு , மிளகாயை சிறிது எண்ணெய் விட்டு வறுக்கவும்.
சிவந்தபின் இஞ்சி, புளி சேர்த்து சிறிது வதக்கிவிட்டு ஆறவும் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.


தாளிக்க வேண்டியவை

நல்லெண்ணெய் - 5 மே,க
கடுகு - 1 தே.க
பெருங்காயம் - சிறிது


                                                   தாளிக்கவும்








அரைத்த விழுதை ஊற்றவும். நன்கு கொதித்து பச்சை வாசம் போய் குழம்பு பதம் வரவும் வெல்லம் சேர்த்து இறக்கவும்.




எளிதான சுவையான இஞ்சி குழம்பு தயாராகி விட்டது. குழம்பை எடுத்தபின் அதன் மேல் கொஞ்சம் நல்லெண்ணெய் விட்டு கிளறி விடவும். சாப்பிடும் போது சும்மா சூப்பராக இருக்கும்.

இதெல்லாம் எங்களுக்கு தெரியாதான்னு நீங்க கேட்பது கேட்குதுங்கோ...!!!

மருந்து மாதிரி இந்தக் குழம்பு வயிற்றுக்கு ஏற்றதாக இருக்கு. சுடு சாதம் + இ.குழம்பு + வற்றல் ம்கூம்....அப்புறம் தயிர் + மோர் சாதத்துக்கு தொட்டுக்கவும் நல்லா இருக்கு.

செய்வதும் சுலபம்....வயிற்றுக்கும் சுலபம்...ஹிஹிஹி...

நல்லா எண்ணெய் கக்கி வரவும் எடுத்து பாட்டிலில் போட்டு ஃப்ரிஜ்ஜில் வைத்தால்  அவ்வப்போது எடுத்துக் கொள்ளலாம். ( புளிக்காய்ச்சல் மாதிரி)

என்னங்க கிளம்பிட்டீங்க.....  சரிசரி அப்புறமா வந்து குழம்பு எப்படின்னு சொல்லுங்க ....மீண்டும் பார்க்கலாம்.



குறிப்பு

இந்த அளவில் குழம்பு நிறைய வரும்.

 குறைவாக வேண்டும் என நினைப்பவர்கள் அளவை குறைத்துக் கொள்ளுங்கள்.


13 comments:

  1. உடல் நலத்தை பாதுகாக்கும்
    உன்னத குழம்பு
    எல்லோருக்கும் சுகமான
    "இஞ்சி குழம்பு"
    மருத்துவ பீஸ்: த ம 1
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  2. இஞ்சிக்குழம்பின் படமே அழகாக இருக்கிறது மீண்டும் வலையுலகம் வந்தமைக்கு வாழ்த்துகள்
    தமிழ் மணம் 2

    ReplyDelete
  3. நாங்கள் சுகம், நீங்களும் சுகம்தானே !

    ஒரு கை இஞ்சி, 15 காய்ந்த மிளகாய்கள் என்றால் நல்ல்ல்ல காரசாரமாய் நாக்குக்கு இதமாய் இருக்கும் என்றே தோன்றுகிறது.

    ReplyDelete
  4. வாங்க வாங்க நாங்க நலம் நீங்க நலம் தானே. ..ம்...ம்.. செய்து பார்க்க வேண்டாமா அதான் போயிட்டு வந்து சொல்லுகிறேனே எப்படி என்று. நன்றி வாழ்த்துக்கள் ...! பார்க்கவே யம்மி. ம்..ம்..ம்

    ReplyDelete
  5. மீண்டும் வந்தமைக்கும் இஞ்சிகுழம்பிற்கும் நன்றிமா

    ReplyDelete
  6. சத்துள்ள பயனுள்ள குறிப்பு... நன்றி...

    ReplyDelete
  7. பல நாட்கள் கழித்து வந்ததும் - முதல் வேளையாக காரசாரமான இஞ்சி குழம்பு!..

    வாழ்க நலம்!..

    ReplyDelete
  8. இதுபோன்ற உணவு வகைகள் உடல் நலத்திற்கு மிகவும் சிறந்தவையாகும். ஏனோ பயன்படுத்த நாம் யோசிக்கிறோம்.
    எனது வலைப்பூவில் தேரோட்டம் காண வருக http://www.drbjambulingam.blogspot.com/2015/04/blog-post_29.html

    ReplyDelete
  9. இஞ்சித்துவையல் தெரியும். இஞ்சிக்குழம்பு இப்போதுதான் கேள்விப்படுகிறேன். படமே ஆவலைத் தூண்டுகிறது. செய்துபார்க்கவேண்டும். பகிர்வுக்கு நன்றி உமையாள்.

    ReplyDelete
  10. //ஒரு மாதம் ஆகிவிட்டது உங்கள் எல்லோரையும் பார்த்து... //

    எங்களைப்போலவே நீங்களும் சந்தோஷமாக இருந்திருப்பீர்கள் என நினைக்கிறோம். :)

    இஞ்சிக்குழம்புடன் இப்படி திடீரென வருவீர்கள் என எதிர்பார்க்கவே இல்லை. எனினும் மிக்க மகிழ்ச்சி. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  11. இஞ்சி நல்மருந்தாயின்
    இஞ்சிக் குழம்பு என்றால்
    மருத்துவக் குணமும்
    இருக்கத் தான் செய்யுமே!

    ReplyDelete
  12. வணக்கம்

    செய்முறை விளக்கத்துடன் அசத்தல் அருமை. த.ம5
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  13. செய்வதுண்டு பருப்பு சேர்க்காமல் ஆனால் பச்சை மிளகாய் சிறியதாக அரிந்து வதக்கிச் சேர்ப்பதுண்டு. இங்கு கேரளத்தில் இதை இஞ்சிக் கறி, புளி இஞ்சி என்று சொல்வதுண்டு.....இதையே கீதாவின் வீட்டில் இஞ்சிச் தொக்கு என்று சிறிது கெட்டியாகப் பருப்பு சேர்த்து செய்வதுண்டு....உங்கள் குறிப்பின் படியும் செய்துட்டாப் போச்சு...குழம்பு பார்க்க மனதை ஈர்க்கின்றது....நாவில் நீர்....

    ReplyDelete