வெயிலின் சூடு தாலாட்ட
பகலில் நித்திரை கண்தழுவ
கதிரவன் வீட்டில் சிறை வைக்க
காரியம் காத்து இருக்கையிலே
அடியை வெளியில் வைக்கலாமா?
அன்றி மற்றொரு நாள் பார்க்கலாமா..?
மனசு கொஞ்சம் யோசிக்க
வேர்வை கோந்தாய்
உடல் பரவ
எண்ணெய் பூசிய முக நிலவு
ஏக்கமாய் தோற்றம் கொண்டு விடும்
பின்னிய கூந்தல் ஏறிக் கொள்ளும்
நாமும் முன்னே போவோ மென்று
குளிக்க நீர் வேண்டிடவே
குழாயை திருப்ப முடியாது
குளத்தையும்,ஏரியையும்
கொண்டு விட்டார்
கொடுக்க அவர்களால் முடியாது
மரத்தை நட்டு குளத்தை வெட்டி
மன்னன் மகிழ்ந்தான் அன்று
மரத்தை அறுத்து குளத்தை தூர்த்து
மன்னர் போல் வாழவழியுண்டு இன்று
நீராதாரம் விட்டு
நீண்டு வாழ முடியுமா எவராயினும்
நீரையொட்டி சமவெளி நாகரீகம்
நீரை விட்டு சமாதி நாகரீகம்
எங்கே போகிறோம்...?
இறைவா...வா விரைந்து.
படத்தேர்வும் சமூக விழிப்புணர்வு தரும் பாடலும் அருமை.
ReplyDeleteமகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றிகள்
Deleteவெயிலின் சூடு தாலாட்டுகிறதா.... கொளுத்துகிறது சகோதரி!
ReplyDelete:))))))))))))
கவிதையின் கருத்து கவனிக்கப் படவேண்டிய, கவலைப்பட வேண்டிய விஷயம். அருமை.
:))))))))))))...
Deleteமகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றிகள்
வாழ்வின் ஆதாரங்களை அழித்து நாங்கள் நவீன முதலாளிகள் என வாழ்கிறோம்.
ReplyDeleteநீரையொட்டி சமவெளி நாகரீகம்
நீரை விட்டு சமாதி நாகரீகம்
அருமையான வரிகள். நன்றி.
வாழ்வின் ஆதாரங்களை அழித்து //
Deleteஅது தான் கவலையாக இருக்கிறது
மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றிகள்
சமவெளி நாகரிகத்திலிருந்து சமாதி நாகரிகம் என்ற நிலையில் யதார்த்தம் மிக அழகாகப் பகிரப்பட்டுள்ளது. நல்ல கவிதை.
ReplyDelete. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றிகள்
Deleteநீர் இல்லை என்றால் சமாதி தான்...
ReplyDeleteஉண்மை
Deleteமகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றிகள்
அருமை சகோ நல்லதொரு சமூகச்சாடல் வாழ்த்துகள்
ReplyDeleteதமிழ் மணம் 4
மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றிகள்
Deleteமரத்தை நட்டு குளத்தை வெட்டி
ReplyDeleteமன்னன் மகிழ்ந்தான் அன்று
மரத்தை அறுத்து குளத்தை தூர்த்து
மன்னர் போல் வாழவழியுண்டு இன்று
இது , அன்றும் இன்றும் நாட்டின் நடப்பு! உண்மையாகும் ! இன்று! உணரும் நாள்தான் என்று!?
உணரும் நாள்தான் என்று!?//
Deleteதெரியவில்லையே ஐயா.உணர்ந்தால் மாற்றம் வந்து விடும்
மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றிகள்
//மரத்தை நட்டு குளத்தை வெட்டி
ReplyDeleteமன்னன் மகிழ்ந்தான் அன்று
மரத்தை அறுத்து குளத்தை தூர்த்து
மன்னர் போல் வாழவழியுண்டு இன்று
நீராதாரம் விட்டு
நீண்டு வாழ முடியுமா எவராயினும்
நீரையொட்டி சமவெளி நாகரீகம்
நீரை விட்டு சமாதி நாகரீகம்//
சாடும் வரிகள் அத்தனையும் அருமை!
த ம 6
மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றிகள்
Delete//எங்கே போகிறோம்...?
ReplyDeleteஇறைவா...வா விரைந்து..//
இறைவன் வர வேண்டிய அவசியமேயில்லை..
நாகரிகம் தான் அவனை நோக்கி விரைந்து கொண்டிருக்கின்றதே!..
மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றிகள்
Deleteவணக்கம்
ReplyDeleteசிந்திக்க வேண்டிய கவிதை நல்ல விழிப்புணர்வு.. மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்
த.ம 7
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
#இறைவா...வா விரைந்து.#
ReplyDeleteஅவர் வருவாரா :)
மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றிகள்
Deleteமிகத்தாமதமாக வருகிறேனோ:(
ReplyDeleteசுற்றுச் சூழலின் அருமை உணர்ந்தாக வேண்டிய நிலையில் இக்கவிதை அவசியமும் அவசரமும் ஆனது.
த ம கூடுதல்.1
நன்றி
மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றிகள்
Deleteநல்ல கவிதை. அருமையான கருத்து. - இராய செல்லப்பா சென்னை
ReplyDelete