எல்லாவற்றிற்கும் காரணம் - நீ
மனம் மறுக்கிறது
ஒப்புக் கொண்டுமிருக்கிறது
எண்ணத்தின் துளிகளில்
வண்ணமும் இருக்கிறது...
வாட்டமும் இருக்கிறது
இனிய மழைக்கு வானம் நோக்கி - ஆனால்
சுடுமழை ஏன் சிந்தினாய் கண்களே...?
அடுத்தவர்களுக்காய் வாழ்ந்த வாழ்க்கை போதும்
அடுக்கிய முக மூடிகள் போதும்
மூலையில் பார்
எத்தனை வகையான
மூக மூடிகள் என்று...
உண்மையின் ஒளி பிரகாசிக்க
அடுத்தவர் அல்லவா...?
முகமூடி அணிய வேண்டும்
நீ எதற்கு அணிந்தாய்
உண்மையின் அழகு
தைரியத்தை கூட்டும்
உடன் வருவார் அனைத்து லட்சுமிகளும்
நிமிர்ந்து நில்
கூன் போட அவசியம் இல்லை
கூப்பித் தொழு இறைவனிடம் மட்டும்
நல் குரல் உள் சொல்ல
செவிமடு
அதை சிறையிடாதே...
அடைத்து விட்டாள் -
குப்பை மேல் பூசிய அர்த்தர் போல்
வாழ்க்கை உள்ளே
நாறிக் கொண்டு மணந்து கொண்டிருக்கும்...
அடைபட்ட கூட்டுக்குள்
அழையா விருந்தாளியாய்
பலமிருகங்கள் வந்து விடும் தங்க...
புற்றாய் மேல் போவாய்
உள்ளே என்ன இருக்கும்...?
அங்கு நீயார்...?
படம் கூகுள் நன்றி
//கூப்பித் தொழு இறைவனிடம் மட்டும்//
ReplyDeleteஅருமையான கவிதைக்குப் பாராட்டுகள்.
அங்கு நீயார்...? தலைப்பும் படத்தேர்வும் அழகு ! :)
மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி. நன்றி
Deleteநிமிர்ந்து நில்
ReplyDeleteகூன் போட அவசியம் இல்லை
கூப்பித் தொழு இறைவனிடம் மட்டும்
தன்னம்பிக்கை ஊட்டும் வரிகள்!
சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅடைபட்ட கூட்டுக்குள்
ReplyDeleteஅழையா விருந்தாளியாய்
பலமிருகங்கள் வந்து விடும் தங்க...
அருமையான வரிகள் சகோ வாழ்த்துகள்
தமிழ் மணம் 3
மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி. நன்றி
Deleteஅதான் யோசிக்கிறேன் ,நான் யார் ,நான் யார் ,நாலும் தெரிந்தவர் யார் யார் :)
ReplyDeleteமகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி. நன்றி
Deleteநல்லதொரு பின்னல் கவிதை..
ReplyDeleteவாழ்க நலம்!..
எதிர்மறையில் தன்னம்பிக்கை தரும் கவிதை. நன்று.
ReplyDeleteமகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி. நன்றி
Deleteஅடுத்தவர்களுக்காய் வாழ்ந்த வாழ்க்கை போதும்
ReplyDeleteஉண்மையான வார்த்தைகள். அருமையான அழகான கவிதை. நன்றி.
மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி. நன்றி
Deleteவணக்கம்
ReplyDeleteநம்பிகை தரும் வைர வரிகள்.. பகிர்வுக்கு நன்றி த.ம 5
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி. நன்றி
Deleteகடந்த வார அதிக பார்வையாளர்கள் பட்டியலில் முதலிடம் பெற்றமைக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteஇப்படியாக சும்மா புரூடா...... விட்டு இருக்கிறீர்களே சகோ.
Deleteமெய்யானால் மகிழ்ச்சி...சும்மா....
அடைபட்ட கூட்டுக்குள்
ReplyDeleteஅழையா விருந்தாளியாய்
பலமிருகங்கள் வந்து விடும் தங்க...
ரொம்பவே சரிங்க....அருமையான வரிகள்! வாழ்த்துகள் சகோதரி!
மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி. நன்றி
Deleteஅருமை... தைரியலட்சுமிக்கு பின் தான் அனைத்தும்...
ReplyDeleteமகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி. நன்றி
Delete"எண்ணத்தின் துளிகளில்
ReplyDeleteவண்ணமும் இருக்கிறது...
வாட்டமும் இருக்கிறது" என்பதில்
உண்மை இருக்கிறது - அது
மனித உள்ளத்தின் வெளியீடு!