Monday, 11 May 2015

வெந்தய மாங்காய் ஊறுகாய்




தேவையான பொருட்கள்

மாங்காய் -1
மிளகாய் தூள் - 3 1/2தே.க
உப்பு - 2 தே.க
வெந்தயத்தூள் - 3/4 தே.க



மாங்காயை துண்டுகளாக்கிக் கொண்டு உப்பு போடுங்கள்






வறுத்து பொடி செய்த வெந்தயத் தூளை சேருங்கள்.



மிளகாயை வெயிலில் உலர்த்தி கொரகொரப்பாக அரைத்த தூளை சேருங்கள்.



வேடுகட்டி வையுங்கள். அவ்வப்போது கிளறி  அல்லது குலுக்கி விடுங்கள். 4, 5 நாட்களில் நன்கு ஊறி விடும்.

                      காற்று புகாத  பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளுங்கள். குளிர் சாதனப் பெட்டியிலும் வைத்துக் கொள்ளலாம். உப்பு பற்றாவிட்டால் விரைவில் கெட்டு போய் விடும். உப்பு  பற்றவில்லை என்றால் சேர்த்துவிட்டு பாட்டிலில் போடவும்.




குறிப்பு

தேவைப்பட்டால் வினிகர் சேர்த்துக் கொள்ளலாம்.






23 comments:

  1. ஊறிய காயோ, ஊறும் காயோ, ஊறப்போகும் காயோ பொதுவாக ஊறுகாய் என்றாலே அதுவும் மாங்காய் ஊறுகாய் என்றாலே நாக்கில் நீர் சுரக்க ஆரம்பித்து விடுகிறது.

    அதுவும் வெந்தய மாங்காய் ஊறுகாய் என்று நீங்க படத்தில் காட்டிவிட்டதில், புளிப்பில்லாத தயிர் சாதத்துடன் சேர்த்து தொட்டுக்கொண்டு சாப்பிடுவது போல பரம திருப்தியாக உள்ளது.:) பகிர்வுக்கு நன்றிகள். .

    ReplyDelete
    Replies
    1. ஊறிய காயோ, ஊறும் காயோ, ஊறப்போகும் காயோ பொதுவாக ஊறுகாய் என்றாலே அதுவும் மாங்காய் ஊறுகாய் என்றாலே நாக்கில் நீர் சுரக்க ஆரம்பித்து விடுகிறது.//

      ஆம் ஐயா மாங்காய் ஊறுகாயை நினைத்தாலே...அப்படியாகிவிடும்

      அதுவும் வெந்தய மாங்காய் ஊறுகாய் என்று நீங்க படத்தில் காட்டிவிட்டதில், புளிப்பில்லாத தயிர் சாதத்துடன் சேர்த்து தொட்டுக்கொண்டு சாப்பிடுவது போல பரம திருப்தியாக உள்ளது.:) //

      தயிர் சாதத்துடன் சாப்பிட்டுக் கொண்டே இருக்காலாம் போல மனது ஆசைப்படுகிறது.
      ஆனா...வயிற்றில் இடம் கொஞ்சம் தானே....

      மாதா ஊட்டாத சோற்றை மா ஊட்டும்...என்று சொல்லி இருக்கிறார்கள். அதன் மணம் அப்படி பட்டது போல...

      Delete
  2. வணக்கம்

    படிக்கும் போது நாவில் எச்சில் ஊறுகிறது... செய்து பார்க்கிறோம் பகிர்வுக்கு நன்றி த.ம 2
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. படிக்கும் போது நாவில் எச்சில் ஊறுகிறது//

      மாங்காயின் மகத்துவம் அது.....மகிழ்வான வருகைக்கும், கருத்திற்கும், வாக்கிற்க்கும் மகிழ்ச்சி சகோ நன்றி

      Delete
  3. நாங்கள் வினிகர் சேர்ப்பதில்லை. படங்கள் ஈர்க்கிறது. மதியம் மோர் சாதம் சாப்பிடும்போது இதைப் பார்த்துக் கொண்டே சாப்பிட்டு விடலாம் போல!!!

    ReplyDelete
    Replies
    1. நாங்கள் வினிகர் சேர்ப்பதில்லை.

      நானும் சேர்க்கவில்லை. சிலருக்கு கெட்டுப்போகும் என்ற பயம் வந்தால்....ஆகையால் குறிப்பில் சேர்த்தேன்.

      படங்கள் ஈர்க்கிறது. மதியம் மோர் சாதம் சாப்பிடும்போது இதைப் பார்த்துக் கொண்டே சாப்பிட்டு விடலாம் போல!!! //

      மகிழ்வான வருகைக்கும், கருத்திற்கும், வாக்கிற்க்கும் மகிழ்ச்சி சகோ நன்றி

      Delete
  4. படங்களும் நீங்கள் சொல்லியிருக்கும் விளக்கமும் மிக அருமை சகோ. உங்களுடைய நிறைய பதிவுகள் எங்க அம்மாவின் கைப்பக்குவம் போல இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. உங்களுடைய நிறைய பதிவுகள் எங்க அம்மாவின் கைப்பக்குவம் போல இருக்கிறது.//

      இதை கேட்க சந்தோஷமாக இருக்கிறது சகோ.

      மகிழ்வான வருகைக்கும், கருத்திற்கும், மகிழ்ச்சி சகோ நன்றி

      Delete
  5. ஊறுகாய் அருமைம்மா,,,,,,,,,,,,,, சாப்பிடத்தோன்றுகிறது. செய்து சாப்பிடுங்கள் என்று சொல்வது கேட்கிறது.நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஊறுகாய் அருமைம்மா,,,,,,,,,,,,,, சாப்பிடத்தோன்றுகிறது. செய்து சாப்பிடுங்கள் என்று சொல்வது கேட்கிறது//

      இப்போ சீசன் அல்லவா...? செய்து விட்டால் அடுத்த சீசன் வரை கவலையில்லை....அல்லவா..?

      மகிழ்வான வருகைக்கும், கருத்திற்கும், மகிழ்ச்சி சகோ நன்றி

      Delete
  6. மாங்காய் ஊறுதோ இல்லையோ இதை படிக்கும்போதும் படங்கள் பார்க்கும்போது வாயூரத் தொடங்கிவிட்டதுப்பா... அருமையான ரெசிப்பி. எளிதாகவும் இருக்கு. செய்து பார்த்துடலாம்..

    த.ம.4

    ReplyDelete
    Replies
    1. வாங்க மஞ்சு...நிறைய நாட்கள் ஆகிவிட்டன ....சந்தோஷமாக இருக்கிறது வரவு.

      மாங்காய் ஊறுதோ இல்லையோ இதை படிக்கும்போதும் படங்கள் பார்க்கும்போது வாயூரத் தொடங்கிவிட்டதுப்பா...

      மாங்காயின் மகத்துவம் அது....

      அருமையான ரெசிப்பி. எளிதாகவும் இருக்கு. செய்து பார்த்துடலாம்..

      செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள்..

      மகிழ்வான வருகைக்கும், கருத்திற்கும், மகிழ்ச்சி சகோ நன்றி

      Delete
  7. ஈசியான மாங்காய் ஊறுகாய். வெயில்தான்.....பிரச்சனை. நல்லகுறிப்பு .

    ReplyDelete
    Replies
    1. மாங்காய் சீசன் ஆரம்பிக்கவும் செய்து விடுங்கள் சகோ....

      மகிழ்வான வருகைக்கும், கருத்திற்கும், மகிழ்ச்சி சகோ நன்றி

      Delete
  8. வணக்கம் சகோதரி.

    மாங்காய் ஊறுகாய் நல்லகுறிப்புக்கள். படங்கள் பார்த்தவுடன் செய்து சாப்பிட தூண்டுகிறது மாதா ஊட்டாத சோற்றை மாங்காய் ஊட்டுமென்று சொன்ன முதுமொழி பொய்யாகி விடுமா? மாங்காயிற்கு அவ்வளவு மகத்துவம். சின்ன வயதில் எங்கள் பாட்டி தயிர் சாதம் கலந்து கையில் போடும் போது, வயிறு நிரம்பி விட்டாலும் மாங்காய் ஊறுகாய்காக ௬ட இரண்டு கவளங்கள் வாங்கிக்கொண்ட நினைவுகள் தங்கள் மாங்காய் ஊறுகாய் பதிவினை படிக்கும் போது மனதில் எழுகின்றது. பழைய நினைவுகளை மீட்டுக் கொடுத்தமைக்கு நன்றி சகோதரி. தங்கள் பகிர்வுக்கும் நன்றி.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. மாதா ஊட்டாத சோற்றை மாங்காய் ஊட்டுமென்று சொன்ன முதுமொழி பொய்யாகி விடுமா? மாங்காயிற்கு அவ்வளவு மகத்துவம்.

      ஆம் சகோ உண்மை தான்

      சின்ன வயதில் எங்கள் பாட்டி தயிர் சாதம் கலந்து கையில் போடும் போது, வயிறு நிரம்பி விட்டாலும் மாங்காய் ஊறுகாய்காக ௬ட இரண்டு கவளங்கள் வாங்கிக்கொண்ட நினைவுகள் தங்கள் மாங்காய் ஊறுகாய் பதிவினை படிக்கும் போது மனதில் எழுகின்றது. பழைய நினைவுகளை மீட்டுக் கொடுத்தமைக்கு நன்றி

      மாங்காய்யின் வாசமும் காரமும் புளிப்பும் ஆஹா....சாப்பிட்டுக் கொண்டே இருக்கத்தூண்டும்....

      மகிழ்வான வருகைக்கும், கருத்திற்கும், மகிழ்ச்சி சகோ நன்றி

      Delete
  9. யப்பா...! எங்கே கர்சீப்...?

    நன்றி சகோதரி... செய்து பார்க்கிறோம்...

    ReplyDelete
    Replies

    1. யப்பா...! எங்கே கர்சீப்...?//

      )))))))).....


      மகிழ்வான வருகைக்கும், கருத்திற்கும்,வாக்கிற்கும் மகிழ்ச்சி சகோ நன்றி

      Delete
  10. வினிகர் சேர்க்காமல் இதே போல் செய்வதுண்டு...மாங்காய் சீசனாச்சே செய்து வைத்திருக்கின்றோம்...

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.நன்றி.

      Delete
  11. உப்பு என்கு ஆகாது!

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.நன்றி.

      Delete