Monday, 11 May 2015

ஆரோக்ய பானம்

பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி அருந்தும் பானம் இது.

சத்தாக வீட்டிலேயே குறைந்த விலையில் செய்து அருந்தலாம்.

உடல் வலுப்பெறும். போஷாக்காக இருக்கும்.

என் சிநேகிதி ஒருவர் கொடுத்த குறிப்பு இது. மிகவும்  அருமையாக இருக்கிறது. அவர் பல வருடங்களாக அருந்துகிறார். அவர் வீட்டிற்கு சென்ற போது அருந்தக் கொடுத்தார். உடனேயே குறிப்பை வாங்கிக் கொண்டு வந்து விட்டேன்.

எல்லாம் உங்களுக்காகத்தாங்க....ஆமா சொல்லிப்புட்டேன்.






தேவையான பொருட்கள்

பாதாம் - 1/2  கிலோ,
முந்திரி - 1/4  கிலோ
பிஸ்தா - 50 கிராம்
வால்நட் - 50 கிராம்
கசகசா - 1 மே.க
ஏலக்காய் - 12 அ 15


 இவற்றை தனித்தனியாக 10 நிமிடங்கள் வெயிலில் வைத்து விட்டு மிக்ஸியில் தனித்தனியாக கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள். பருப்புக்களில் எண்ணெய் பசை இருக்கும் ஆகையால் மிக்ஸியில் ஒட்டிக் கொண்டு அரைக்க வராது. ஆகையால் சற்று வெயிலில் உலர்த்தி விட்டு அரைக்க நன்கு வரும்.

வெயில் இல்லாத காலத்துல எப்படி அரைப்பது...?

அப்போது வெறும் வாணலியை அடுப்பில் வைத்து சூடான பின் அடுப்பை அணைத்து விட்டு பருப்புக்களை தனித்தனியாக சூடாக்கிக் கொள்ளுங்கள்.

ஏலக்காய் + கசகசா+ சர்க்கரை 2 மே.க சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள்

அரைத்ததை ஒன்றாக கலக்கி காற்று புகாத டப்பாவில் அல்லது பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.


கலக்க தேவையானவை

பால் - 1 டம்ளர்
சர்க்கரை - ருசிக்கு
குங்குமப்பூ - 1 பின்ஞ்
பாதாம் பொடி - 1 1/2 தே.க

பாலைக்காய்ச்சி விட்டு இவைகளைப்போட்டு கலந்து குடிக்க வேண்டியது தான்.

சூடாகவும், குளிரூட்டியும் அருந்தி மகிழலாம்



 இந்த பாலில் 1சிட்டிகை மஞ்சள் தூள் + 1 சிட்டிகை மிளகுத்தூள் சேர்த்தும் அருந்தலாம்.


எல்லோரும் சத்தான பானத்தை அருந்துங்கள். வரட்டா...


ஒரு முக்கியமான செய்தியை மறந்துட்டேனே.... சிலருக்கு தூக்கம் ஒரு பிரச்சனையாக இருக்கும். தூக்கம் வரவே வராது. ஆனா இந்த பால் அருந்த நன்கு வரும்.

ஏன்....? நல்ல கேள்வி....ஏன்னா இதில் நாம கொஞ்சம் கசகசா சேர்த்து இருக்கோமில்ல ஆகையால் நல்ல துக்கம் வரும்.

சரி சரி...இரு...அப்போ பகல்ல தூக்கம் வந்துடுமே....? இதுக்கு என்ன சொல்லுற....

தூக்கம் வருகிற இரவில் இது நன்றாக தூக்கத்தைக் கொடுப்பதால்...பகலில் தூக்கம் வராது. இது சத்துவேறயா....ஆகையால பகலில் நல்லா உற்சாகமாக நீங்கள் வேலை செய்வீர்கள்  களைப்படையாமல். அப்படி வேலை செய்தால் இரவு தூக்கம் நன்கு வரும்.

இது எப்படி....?

அப்பப்பா ஒருபானம் பதிவு போட என்னெல்லாம் செய்ய வேண்டி இருக்கு...

நான் போகிறேன் ஒரு கப் பாதாம் பால் அருந்த....அப்ப நீங்க...?



45 comments:

  1. எல்லாத்தையும் ஒரு மாதிரி வாங்கீடலாம். ஒரு பிஞ்ச் குங்கும்பஃபூ என்ன விலையாகும்னு தெரியுமா? அம்பானி மாதிரி இருப்பவர்களால் மட்டுமே குங்கும்பஃபூ உபயோகப்படுத்த முடியும்.
    காஷ்மீர் குங்குமப்பூ ஒரு கிராம் 400 ரூபாய். ஒரு பிஞ்ச் என்பது கால் கிராமாவது இருக்கும். ஆகவே ஒரு கிளாஸ் Health Drink எல்லாப் பொருட்களும் சேர்த்து 125 ரூபாய் ஆகும். இதற்குப் பதிலாக சத்து மாவு பானம் சாப்பிட்டால் ஒரு ஐந்து ரூபாயில் இதே சத்துக்கள் கிடைக்கும்.

    ReplyDelete
    Replies
    1. பழனி. கந்தசாமி 11 May 2015 at 01:06
      //எல்லாத்தையும் ஒரு மாதிரி வாங்கீடலாம். ஒரு பிஞ்ச் குங்கும்பஃபூ என்ன விலையாகும்னு தெரியுமா? அம்பானி மாதிரி இருப்பவர்களால் மட்டுமே குங்கும்பஃபூ உபயோகப்படுத்த முடியும். காஷ்மீர் குங்குமப்பூ ஒரு கிராம் 400 ரூபாய். ஒரு பிஞ்ச் என்பது கால் கிராமாவது இருக்கும். //

      ஒருமுறை ஒரு மிகப்பெரிய மடத்திற்கு ஒரு ஸ்வாமிகளை தரிஸிக்க நான் சென்றிருந்தேன். அங்கு ஏராளமான கூட்டமாக இருந்தது.

      ஒருவர் ஸ்வாமிகளுக்காக கொஞ்சூண்டு குங்குமப்பூவினை ஒரு சிறிய பொட்டலமாகக் கட்டிக்கொண்டு வந்து, அங்குள்ள சிப்பந்தி ஒருவரிடம் [ஸ்வாமிஜிக்கு பணிவிடை செய்யும் உதவியாளர்களில் ஒருவரிடம்] கொடுத்து, ஸ்வாமிகளுக்கு மறக்காமல் சேர்த்து விடும்படி கூறினார். அவரும் சரியென அதனை வாங்கிக்கொண்டார்.

      அந்த குங்குமப்பூவினைக் கொண்டு வந்து கொடுத்தவர், அந்த மடத்து சிப்பந்தியிடம் திரும்பத்திரும்ப ‘குங்குமப்பூ பொட்டலம் ஜாக்கிரதை; ஸ்வாமிகள் பால் சாப்பிடும் போது மறக்காமல் கலந்து கொடுத்துடுங்கோ” என பலமுறை நினைவூட்டிக்கொண்டே இருந்தார்.

      ஒரு கட்டத்தில், அந்த குங்குமப்பூவினை வாங்கிக்கொண்ட சிப்பந்திக்கே, அதைக்கொண்டு வந்து கொடுத்தவர் மீது வெறுப்பாகிப்போனது.

      “ஐயா, அவசர ஆத்திரத்திற்கு, இங்கு மடத்தில் குமுட்டி அடுப்பு பற்ற வைக்கவே, தேங்காய் நாருக்கு, பதிலாக நாங்கள் குங்குமப்பூவால் பற்ற வைத்துக்கொண்டிருக்கிறோம். நீங்க தம்மாத்தூண்டு [ஒரு பிஞ்ச்] குங்குமப்பூவைக்கொடுத்துட்டு, திரும்பத்திரும்ப அதையே நினைவூட்டிக் கொண்டுள்ளீர்களே! கொண்டுவந்ததைக் கொடுத்தோமா; ஸ்வாமிஜியை நமஸ்கரித்தோமா .... என மளமளன்னு போயிண்டே இருக்கணும்” என்றார்.

      இதையெல்லாம் அருகில் இருந்து கவனித்த எனக்கு அன்று ஒரே சிரிப்பாக வந்தது.

      இங்கு உங்கள் கருத்தினைப்படித்ததும், மீண்டும் அந்த நிகழ்வு என் நினைவுக்கு வந்தது. அதனால் பகிர்ந்துகொண்டேன் :)

      Delete
    2. பழனி.கந்தசாமி ஐயா...குங்குமப்பூ 5 இதழ்கள் அப்படின்னு தான் தோழி சொன்னார்கள்.
      1 பிஞ்சு போட்டால் நன்றாக மஞ்சள் நிறமும், மணமும் வருகிறது. ஆகையால் அவ்வாறு அளவு போட்டேன்.

      நீங்கள் சொல்வது உண்மை தான். குங்குமப்பூ விலை அதிகம் தான். குங்குமப்பூ போட்டுத்தான் இப்பாலை அருந்த வேண்டும் என்று இல்லை. அதைப் போடாமலும் பால் டேஸ்டாக இருக்கும்.

      சத்துமாவு பானத்திலும் இதே சத்துக்கள் கிடைக்கும் தான். நாம் அனைவரும் வித்தியாசமாக சாப்பிட அவ்வப்போது நினைப்போம் இல்லையா....அப்படி சாப்பிடலாம்.

      மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா

      Delete
    3. வை கோ ஐயா நிகழ்வை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி

      Delete
  2. //தூக்கம் வருகிற இரவில் இது நன்றாக தூக்கத்தைக் கொடுப்பதால்...பகலில் தூக்கம் வராது. இது சத்துவேறயா....ஆகையால பகலில் நல்லா உற்சாகமாக நீங்கள் வேலை செய்வீர்கள் களைப்படையாமல். அப்படி வேலை செய்தால் இரவு தூக்கம் நன்கு வரும்.//

    NIGHT SHIFT DUTY பேரெழுச்சியுடன் பார்க்கப் போக வேண்டியவர்கள், தூக்கம் வராமல் இருக்க இதனை இரவில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும் எனவும் ஓர் எச்சரிக்கைக் கொடுத்திருக்கலாம். :)

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. NIGHT SHIFT DUTY பேரெழுச்சியுடன் பார்க்கப் போக வேண்டியவர்கள், தூக்கம் வராமல் இருக்க இதனை இரவில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும் எனவும் ஓர் எச்சரிக்கைக் கொடுத்திருக்கலாம். :) //

      ))))).....

      Delete
  3. //நான் போகிறேன் ஒரு கப் பாதாம் பால் அருந்த....அப்ப நீங்க...?//

    எங்களுக்கும் அருந்த ஆசைதான். இப்போ இங்கு விடியற்காலம் 4 மணி. நல்ல வெயில் வரட்டும். கடைக்குப்போய் தாங்கள் சொன்ன பருப்புக்களையெல்லாம் வாங்கியாந்து, காயவைத்து அல்லது சூடாக்கி, தாங்கள் சொல்லியுள்ள செய்முறைப்படி பவுடரை முதலில் தயார் செய்யப்பார்க்கிறோம். அதன் பிறகு பாலுடன் சேர்த்து அருந்துவது சுலபம் தான்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்....நிதானமாக செய்து அருந்துங்கள் ஐயா

      Delete
  4. ’Health Drink’ என்ற ஆங்கிலத் தலைப்புக்கு பதில் ‘உற்சாக பானம்’ என்றோ ‘ஆரோக்ய பானம்’ என்றோ ’எழுச்சி வேண்டுமா ..... குடித்துப்பாருங்கள்’ என்றோ சற்று கவர்ச்சியான தலைப்புக் கொடுத்திருக்கலாம். மேலும் சிலர் எழுச்சியுடன் வருகைதர ஏதுவாகியிருக்கும்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது சரிதான் ஐயா தலைப்பை ஆரோக்கிய பானம் என மாற்றி விட்டேன். நன்றி

      Delete
  5. பாதாம் - 1/2 கிலோ, முந்திரி - 1/4 கிலோ, பிஸ்தா - 50 கிராம், வால்நட் - 50 கிராம், கசகசா - 1 மே.க., ஏலக்காய் - 12 அ 15

    இவை அனைத்தும் அருமையான சத்துள்ள பொருட்கள்தான். இதில் ’கசகசா’ தவிர அனைத்தும் ‘அப்படியே சாப்பிட்டுள்ளேன்’. கசகசா சாப்பிட்டால் நல்லா தூக்கம் வரும் என்பதை இப்போதுதான் தெரிந்துகொண்டுள்ளேன். அதற்காகவே [சமீபகாலமாக இரவில் தூக்கம் வராதவனாகிய] என் ஸ்பெஷல் நன்றிகள்.

    நல்லதொரு ஆரோக்யமான, எழுச்சிமிக்க, உற்சாக பானப்பகிர்வுக்குப் பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. இந்த அளவில் ......கசகசாவை ....2, 3 மே.கரண்டியாகவும் சேர்த்துக் கொள்ளலாம் இரவில் நன்கு தூக்கம் வர.

      மகிழ்ச்சியான வருகைக்கும் கருத்திற்கும் பாராட்டுக்களுக்கும் உற்சாகப்படுத்தியமைக்கும் மகிழ்வான நன்றிகள் ஐயா

      Delete
  6. Health Drink முதல் படத்தில் பார்க்கவே அழகாக உள்ளது. பார்த்ததும் Health Improve ஆனது போல ஒரு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. Thanks for sharing :)

    ReplyDelete
  7. காஸ்ட்லி பானமா இருக்கும் போலேருக்கே! ஆனாலும் செய்துபார்க்க ஆவலாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. இப்போது உடல் நலத்திற்காக பருப்பு வகைகளை பொரும் பாலும் சாப்பிடுகிறோம் இல்லையா. அதை பாலில் கலந்து சாப்பிட இன்னும் சுவையாக இருக்கிறது.

      குங்குமப்பூ கட்டாயம் இல்லை.....அது இன்றியும் பால் அருமையாக இருக்கிறது.

      முயற்சி செய்து விட்டு ஒரு எட்டு வந்து சொல்லுங்கள் சகோ.

      மகிழ்ச்சியான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்வான் நன்றிகள் சகோ

      Delete
  8. வணக்கம்
    சுவைத்த்தது போல ஒரு உணர்வு.... பகிர்வுக்கு நன்றி த.ம 2

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சியான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்வான் நன்றிகள் சகோ

      Delete
  9. இப்படி விதவித டிப்ஸ் கொடுத்து என் டயட் தவத்தை கலைக்கலாமா தோழி!! :))) செம சூப்பரா இருக்கு. நான் பிள்ளைகளுக்கு செய்து கொடுக்கிறேன். நன்றி!

    ReplyDelete
    Replies
    1. இப்படி விதவித டிப்ஸ் கொடுத்து என் டயட் தவத்தை கலைக்கலாமா தோழி!! :)))//

      டயட் இருக்குறீங்களா...? அப்படின்னா இரவில் இதை நீங்கள் கண்டிப்பாக அருந்த வேண்டும். அப்பத்தான் உங்களின் டயட்டிற்கு இது பலம் சேர்க்கும். டயர்ட் ஆகாமல் இருக்கைச் செய்யும் சகோ...ஆமா...உங்களுக்கு எதுக்கு சகோ டயட்...? நீங்க அப்படி இல்லை என நினைக்கிறேன்....

      நான் பிள்ளைகளுக்கு செய்து கொடுக்கிறேன்.//

      செய்து கொடுங்கள் சகோ
      மகிழ்ச்சியான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்வான நன்றிகள் சகோ

      Delete
  10. நல்ல குறிப்பு.... நன்றி.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சியான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்வான் நன்றிகள் சகோ

      Delete
  11. ஆரோக்கிய பானம் என்னவென்று தலைப்பில் கூறாமல் விட்டுவிட்டீர்கள். உள்ளே பதிவைக் குடித்த பின் (படித்தபின்) அறிந்தேன். நல்ல பானம்.

    ReplyDelete
    Replies



    1. மகிழ்ச்சியான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்வான் நன்றிகள் ஐயா

      Delete
  12. வேர்வை சிந்த வேலை செய்தால் (இருந்தால்) இரவில் படுத்தவுடன் தூக்கம் தான்...

    சுவையான குறிப்பிற்கு நன்றி...

    ReplyDelete
    Replies
    1. வேர்வை சிந்த வேலை செய்தால் (இருந்தால்) இரவில் படுத்தவுடன் தூக்கம் தான்..
      உண்மை...உண்மை...

      மகிழ்ச்சியான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்வான் நன்றிகள் சகோ

      Delete
  13. இந்தக் குறிப்பு சில மாதங்களுக்கு முன் எனது Fb -ல் வந்தது.
    அதோடு ஒரு மருத்துவ இதழிலும் வெளியானது.

    சற்றே மாற்றங்களுடன் - சுவையான பாதாம் பால் - தங்களுடைய பதிவில்!..

    பாதாம், பிஸ்தா முந்திரி விற்கின்ற விலையில் ஏழைகளுக்குக் கட்டுப்படியாகுமா!..

    ReplyDelete
    Replies
    1. இந்தக் குறிப்பு சில மாதங்களுக்கு முன் எனது Fb -ல் வந்தது.
      அதோடு ஒரு மருத்துவ இதழிலும் வெளியானது. //

      அப்படியா ஐயா...எனக்கு தெரியவில்லை....தோழியின் இல்லத்தில் பருகினேன்.


      சற்றே மாற்றங்களுடன் - சுவையான பாதாம் பால் - தங்களுடைய பதிவில்!..//

      என் சிநேகிதி ஒருவர் கொடுத்த குறிப்பு இது. மிகவும் அருமையாக இருக்கிறது. அவர் பல வருடங்களாக அருந்துகிறார். அவர் வீட்டிற்கு சென்ற போது அருந்தக் கொடுத்தார். உடனேயே குறிப்பை வாங்கிக் கொண்டு வந்து விட்டேன். சுவை எனக்கு மிகவும் பிடித்து இருந்ததால்...

      தங்களுடைய குறிப்பையும் தாருங்கள் ஐயா நாங்கள் சுவைத்து மகிழ......

      மகிழ்ச்சியான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்வான நன்றிகள்

      Delete
  14. எங்களை விட்டு விட்டுப் போனால் எப்படி ......

    நாங்களும் வருகிறோம் ;))

    த ம 6

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ வாருங்கள்...

      மகிழ்ச்சியான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்வான் நன்றிகள் சகோ

      Delete
  15. சூப்பரான சத்துமிக்க பானம். நல்லதொரு குறிப்பும்,அதன் பயன்களையும் கூடவே தந்தமைக்கு நன்றி உமையாள்.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சியான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்வான் நன்றிகள் சகோ

      Delete
  16. சூப்பரா தான் இருக்கு but எனக்கு எல்லாம் ஆகாதே ஒன்லி விண்டோ ஷாப்பிங் தான்மா ம்..ம்.ம் என்ன செய்வது நீங்கள் பருகுவதை பார்த்து ரசிக்கிறேன். ஆனால் வயிற்றெரிச்சல் படமாட்டேன் பயப்படாதீர்கள் ok வா

    ReplyDelete
    Replies
    1. சூப்பரா தான் இருக்கு but எனக்கு எல்லாம் ஆகாதே ஒன்லி விண்டோ ஷாப்பிங் தான்மா ம்..ம்.ம் என்ன செய்வது நீங்கள் பருகுவதை பார்த்து ரசிக்கிறேன்.

      வருத்தமாக இருக்கிறது...

      ஆனால் வயிற்றெரிச்சல் படமாட்டேன் பயப்படாதீர்கள் ok வா//

      சரி சகோ...மகிழ்ச்சியான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்வான நன்றிகள் சகோ

      Delete
  17. அருமையான குறிப்பு, பானமும் அருமையாகத்தான் இருக்கும், செய்து பார்த்து சொல்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சியான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்வான நன்றிகள் சகோ

      Delete
  18. Health Drink செய்முறை அழகு
    நலம் தரும் பானம் என்று
    நாள்தோறும் பருகலாம்
    சிறந்த வழிகாட்டல்
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சியான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்வான நன்றிகள் சகோ

      Delete
  19. காலையிலேயே பானம் குடித்ததற்க்கு 3 ஓட்டு போட்ட பிறகுதான் அலுவலகம் போனேன் ஸூப்பர் பானம்.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சியான வருகைக்கும் கருத்திற்கும், காலையிலேயே தாங்கள் வாக்கு அளித்தமைக்கும் மகிழ்வான நன்றிகள் சகோ

      Delete
  20. நல்ல அருமையான சத்தான பானம்.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சியான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்வான நன்றிகள் சகோ

      Delete
  21. வணக்கம் சகோதரி.

    அருமையான மிகவும் சத்தான பானத்தை அறிமுகபடுத்தியுள்ளீர்கள். இரவில் சரியாக உறக்கம் பிடிக்கவில்லையென்றால், படுக்க போகும் முன் சூடாக பசும் பால் அருந்தினால் உறக்கம் வரும் என்பார்கள். அதிலும் தங்கள் அறிமுகம் நன்று. மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. இரவில் சரியாக உறக்கம் பிடிக்கவில்லையென்றால், படுக்க போகும் முன் சூடாக பசும் பால் அருந்தினால் உறக்கம் வரும் என்பார்கள். ..//

      ஆம்...சகோ

      மகிழ்ச்சியான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்வான நன்றிகள் சகோ

      Delete
  22. யப்பா நல்ல பானம் தான் இதை கசகசா சேர்க்காமல் செய்வதுண்டு. ஆனால் செம காஸ்லி என்பதால் எப்போதேனும் ஒரு முறை...இதில் சிறிது பேரீச்சம் பழத்தைத் துண்டுகளாக்கி போட்டுக் குடித்துப் பாருங்கள் அருமையாக இருக்கும். ஆனால் நாங்கள் ப்ரும்பாலும் குடிப்பது நார்மல் வீட்டில் செய்த சத்துமா கஞ்சி. அதுவும் வித்தியாசமானது. கம்பு, வரகு, குதிரைவாலி, சோளம் சிறியது பெறியது, சாமை, தினை, ராகி, சிறுபயறு, புழுங்கல் சிவப்பரிசி, பொட்டுக்கடலை, கொள்ளு, பாசிப்பருப்பு, சம்பா கோதுமை, பார்லி, பாதாம், ஏலக்காய், கொண்டைக் கடலை சிவப்பு வெள்ளை என்று எல்லாம் சிறிது வறுத்து, முளைகட்ட வேண்டியதை முளை கட்டி, வறுத்து நன்றாக நைசாக மெஷினில் கொடுத்து அரைத்து.....கஞ்சி காய்ச்சி பால் கலந்து .....பானம்...

    ReplyDelete
    Replies
    1. ஆஹா...சத்தான பானம் பற்றிய குறிப்புற்கு நன்றி கீதா...

      மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.நன்றி.

      Delete