சொந்த மண்ணை தொடுகையிலே
சுவாசம் மூக்கில் நுழைகையிலே
எண்ணம் சிறகு அடிக்கையிலே
ஏதோ செய்யுது மனதினிலே...!!!
உறங்கிய உற்சாகம் உசும்பிடவே
உள்ளம் கொள்ளை போனதுவே
தன்னுயிர் உள்ளே சிலிர்க்கையிலே
தாயின் நினைப்பு அணைத்ததுவே...!!!
பலமாய் ஒன்று உருண்டிடவே
பார்வையில் குளிர்ச்சி மின்னிடவே
தாய்மடி சுகம் கண்டதினால்
சிறார்கள் போல மாறினோமே...!!!
எட்டுத்திக்கும் பறந்தாலும்
எம் தேசம் போல் வருமா.?
மணலின் நரம்பு எம்முடம்பில்
தண்ணீர் ரத்தம் பாய்கிறதே...!!!
பாசம் கொண்ட காரணத்தால்
தேசப் பற்று ஆகிறதோ.?
யாரும் சொல்லிக் கொடுக்கவில்லை
யாதாகி நாமும் கரைந்துவிட்டோம்.
தொலைவின் போது அதனருமை
தெள்ளத் தெளிவாய் புரிகிறது
இயல்பாய் மனது இசைக்கிறது
வந்தே மாதரம் என்கிறது
வந்தே மாதரம்
வந்தே மாதரம்
வந்தே மாதரம்
படம் கூகுள் நன்றி
தேசப்பற்றுதலையும், தாயின் பாசத்தையும் இணைத்தது அருமை சகோ
ReplyDeleteதமிழ் மணம் 1
மகிழ்வாய் முதலாய் பறந்தோடி வந்தமைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மகிழ்ச்சி சகோ. நன்றிகள்.
ReplyDelete//தாய்மடி சுகம் கண்டதினால் சிறார்கள் போல மாறினோமே...!!!
ReplyDeleteஎட்டுத்திக்கும் பறந்தாலும் எம் தேசம் போல் வருமா.?//
தாயும் தாய் நாடும் பற்றிய தங்கள் ஆக்கம் அருமை.
வந்தே மாதரம்
வந்தே மாதரம்
வந்தே மாதரம்
மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி, நன்றிகள். ஐயா
Deleteவெளிநாட்டில் இருந்து தாய் நாடு திரும்பும் ஒருவனின் மன உணர்வை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது கவிதை.
ReplyDeleteத ம 2
உண்மை...
Deleteமகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி, நன்றிகள்.
தேசப் பற்றை சொல்லும்
ReplyDeleteதேன் கவிதை வெல்லும்
த ம 3
நட்புடன்,
புதுவை வேலு
மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி, நன்றிகள்.
Deleteவெளியூர் சென்று விட்டு நம்மூர் வந்தாலே இந்த உணர்வு இருக்கும். வெளிநாடு சென்று விட்டு நம்நாடு வந்தால் கேட்கவா வேண்டும்? நன்றாகச் சொல்லி இருக்கிறீர்கள்.
ReplyDeleteமகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி, நன்றிகள்.
Deleteவரிகளில் உள்ளம் கொள்ளை போனது...
ReplyDeleteமகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி, நன்றிகள்.
Deleteஆஹா ஆஹா !!
ReplyDeleteவாய்விட்டுப் படித்தேன்.
மிக அருமை.
தொடருங்கள்.
த ம 6
நன்றி.
மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி, நன்றிகள்.
Deleteதொலைவின் போது அதனருமை
ReplyDeleteதெள்ளத் தெளிவாய் புரிகிறது
இயல்பாய் மனது இசைக்கிறது
வந்தே மாதரம் என்கிறது!..
அருமை.. அருமை!..
வாழ்க நலம்!..
மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி, நன்றிகள்.
Deleteஎட்டுத்திக்கும் பறந்தாலும்
ReplyDeleteஎம் தேசம் போல் வருமா.?
உண்மை உண்மை தோழி உணர்வு பூர்வமாக வடித்துள்ளீர்கள். அருமை அருமை வாழ்த்துக்கள் ...!
தாய் மடியில் படுக்கும் உணர்வு போல தாய் மண்ணை மிதிக்கும் போது....வருவது இயற்கை தானே.
ReplyDeleteஆம். ஆம்...
Deleteமகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி .நன்றி
வணக்கம்
ReplyDeleteதொலை தூரம் நாம் இருந்தாலும் எம்மண்னை மறக்க முடியாது.. மிக அழகாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: மனிதா மனிதத்தை இழந்தாயடா..:
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி .நன்றி
Deleteத.ம 7
ReplyDeleteவாக்கிற்கு நன்றி சகோ
Deleteதங்கள் பக்கம் வந்து கருத்து இட்டுவந்தேன் சகோ.
உள்ளம் கொள்ளைப் போகுதே, ஆம் உண்மை தான் உள்ளம் கொள்ளைத் தான் போனது, தங்கள் கவியைப் படித்து. அருமை. வாழ்த்துக்கள். நன்றி.
ReplyDeleteமகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி .நன்றி
Deleteஉள்ளத்து உணர்வுகளை தெள்ளிய தமிழில் வடித்தமை அழகு. மனந்தொட்ட கவிதைக்குப் பாராட்டுகள்.
ReplyDeleteமகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி .நன்றி
Deleteஎனக்கும் இதே உணர்வுதான் என்றாலும் ,தாய் மண்ணே வணக்கம்னு பாடத்தோன்றும் :)
ReplyDeleteமகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி .நன்றி
Deleteபல நாடுகளுக்கு, நான் சென்றிருந்தாலும் ,நம் தாய்மண்ணே சுகம் என்பதே நான் கொண்ட உணர்வு! கவிதை நன்று!
ReplyDeleteமகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி .நன்றி
Deleteதாய்மண் நினைவில் எழுதிய வரிகள் அருமை சகோ !
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
தம கூடுதல் ஒன்று
நம் மண்ணில் நாம் இருக்கும்போது கிடைக்கும் சுகமே அலாதி. அதனை அனுபவிக்கும்போதே உணரமுடியும். சூழல் காரணமாக பிழைப்பு தேடிச் சென்றவர்கள் தாய் மண்ணின்மீது வைத்திருக்கும் அன்பானது அளவிடற்கரியது என்பதையும் நினைவில் கொள்வோம்.
ReplyDeleteஅழகா , எளிமையா இருக்கு பாட்டு!! மாணவர்களுக்கு வகுப்பில் கூட சொல்லிதரலாம் போல:)
ReplyDeleteஎட்டுத்திக்கும் பறந்தாலும்
ReplyDeleteஎம் தேசம் போல் வருமா.?
எம் ஊரைப் போல வருமா?
சிறந்த பாவரிகள்
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்