Thursday, 21 May 2015

தாய்தந்தை...!!!




ஆத்ம தாமரை விரியாது
அறுபது வயது ஆன பின்பும்
வாழ்க்கையைத் தான் வாழ்ந்தோமா?
வாழாது அங்கேயே  நிற்கிறோமா?


அடிகளை அண்டிக் கிடந்திடவே
அவனருள் என்றும் வேண்டுமே
அழையாது செல்ல இயலாது
அவரின் கருணை நில்லாது

யுகங்கள் எத்தனை கடந்து வந்தோம்
யுகங்கள் எத்தனை கடக்கப் போறோம்
எத்தனை உலகங்களில் வாழ்ந்தோமோ?
என்னப்பர் ஒருவரே அறிவாரே

அறிவு இல்லை என்னிடத்தில்
அறிந்தேன் ஒன்று அவரென்று
பந்தம் மனதில் தொடர்கிறது
பாதகம் எனக்கில்லை அவரிருக்க

தாய்தந்தை அவர்தான் என்குருவே
கர்பவாசத்தில் அமர்ந்து விட்டேன்
மூச்சு சாயி ஆனதினால்
முனங்கினேன் சாய் சாயென்றே.



மீண்டும் பாடல் தந்தாய் சாய்நாதா...நன்றி
படம் கூகுள் நன்றி

11 comments:

  1. //மூச்சு சாயி ஆனதினால் முனங்கினேன் சாய் சாயென்றே.//

    மனதை சாய வைக்கும் குரு பற்றிய நல்ல கவிதை.

    சூடான ருசியானதோர் சாய் அல்லது சாயா சாப்பிட்டது போலதோர் திருப்தி படித்து முடித்ததும். :)

    பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. சாய் நாதா சாய் நாதா
    தாய் தந்தை சாய் நாதா
    சேய் நிந்தை அறி நாதா
    செய் வாய் சாயே!
    த ம 1
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  3. முச்சு சாயி ஆனதினால் முனங்கினேன் சாய் சாய் என்று, மனம் லயத்து ஒரு நிலையில் ஒரு பொருளில் குவிந்தால் மட்டுமே இவ்வாறு மாய முடியும்,
    அருமைம்மா, வாழ்த்துக்கள். தங்கள் கவிப் பாதை தொடரட்டும். நன்றி.

    ReplyDelete
  4. அருமை... அவனருள் என்றும் வேண்டும்...

    ReplyDelete
  5. வியாழன் தோறும் குருநாதரின் திவ்ய தரிசனம்!..

    சாய்நாதா சரணம்.. சரணம்!..
    சற்குருநாதா சரணம்.. சரணம்!..

    ReplyDelete
  6. சாயி நாமம் சங்கடம் தீர்க்கும் ! அருமை அருமை !

    ReplyDelete
  7. இறைமனத்தில் இருந்து இறைமணம் கமழும் பாடல்...!

    அருமை சகோ.

    த ம கூடுதல் 1

    ReplyDelete
  8. அருமை சகோ சாய் சரணம்
    தமிழ் மணம் 6

    ReplyDelete
  9. அறிவு இல்லை என்னிடத்தில்
    அறிந்தேன் ஒன்று அவரென்று

    தாய்தந்தை அவர்தான் என்குருவே
    ஆகையால் - என்
    மூச்சு சாயி என்றே உச்சரிக்கும்!

    ReplyDelete