Wednesday, 13 May 2015

தீப ஒளியில் சாயிராம்




தீப ஒளியில் சாயிராம்
தீமைகளை அகற்றிடும் சாயிராம்
மனக்குகை சேர்த்த அழுக்குகளை
மன்னித்து நீக்கும் சாயிராம்


தன்னுரு உரசத் தெரிந்து விடும்
தரத்தில் எப்படி நாமென்று
தனிமையின் சூழல் கற்பிக்கும்
தன்னில் என்ன உள்ளதென்று

ஆழ்ந்த அகத்தில் என்ன யிருக்கு
அறியாது வாழ்தல் புற அழகா
நீக்கும் போக்கும் மனமறியும்
நீந்திக் கடப்பது சுலபமல்ல

துடுப்பாய் குருவருள் கிடைத்திடவே
வாழ்க்கை துன்பம் வசந்தமாகும்
சுண்டுவிரல் அவர்பற்ற உடன் சென்றேன்
சுகமாய் மனது இருக்குதப்பா





படம் கூகுள் நன்றி
பாடல் தந்த சாய்க்கு நன்றி நன்றி




20 comments:

  1. சாய்ராம் சரணம் சாய்ராம் சரணம்
    தமிழ் மணம் 1

    ReplyDelete
  2. தீப ஒளியாய்ப் பிரகாசிக்கும் அருமையான பாடல் வியாழக்கிழமை பிறக்கப்போவதை அறிவித்து நினைவூட்டி மகிழ்விக்கிறது. மிக்க நன்றீங்கோ !

    ReplyDelete
  3. வணக்கம்

    வார்த்தைகளில் ஒளியே தெரிகிறது.. அருமையான பாடல்... பாடி மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி..த.ம 2
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. வழக்கமான தங்களது எழுத்துக்களால் நல்லதோர் கவிதை. மனதிற்கு இதமாக இருந்தது.

    ReplyDelete
  5. சுகமாய் மனது இருக்கு...

    ReplyDelete
  6. //..துடுப்பாய் குருவருள் கிடைத்திடவே
    வாழ்க்கைத் துன்பம் வசந்தமாகும்!..//

    சாய்நாதா சரணம்.. சரணம்..
    சற்குருநாதா சரணம்.. சரணம்..

    ReplyDelete
  7. www.youtube.com/watch?v=O1shx-RdlZ0

    Sayee Ram Sayee Ram Sayee Ram Sayee Ram.

    subbu thatha.
    www.subbuthatha72.blogspot.com

    ReplyDelete
  8. ஜெய் சாய்ராம்
    ஓம் சாய்ராம்

    ReplyDelete
  9. என் வணக்கங்களும்.

    ReplyDelete
  10. சாய்ராம் அவர் கருணை கிட்டட்டும் அனைவர்க்கும்.
    அருமையான பாடல் வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
  11. இதமாய் சாய்ராம் மனதிற்குள்! சாய்ராம்!

    ReplyDelete
  12. தங்கள் பதிவின் மூலம் நானும் சாய்-க்கு ஒரு பாட்டு பாடினேன்...

    வாழ்க வளமுடன் ...

    ReplyDelete