Friday, 15 May 2015

நல் மழை /கவிதை






நாணயமாய் இருந்தார்கள்
அக்காலத்தில்...
இப்போதோ
நா நயமாய் இருந்தால்
போதும் என நினைக்கிறார்கள்

மன சாட்சிகள் நிறைய வாழ்ந்தன
அக்காலத்தில்...
இட நெருக்கடி போலும்
அவைகள் வாழ இடமின்றி
தவிக்கின்றன...

மனிதன் வாழ்கிறான்
மனித நேயம்
நோய்வாய்ப்பட்டு
படுத்திருக்கிறது

நல்லோர் சிலர் நடுவிலே...
நான்மறைகள் வாழ்கின்றன
நல்மழை பொழிகிறது...!!!





படம் கூகுள் நன்றி





29 comments:

  1. ஆம் நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு.............!

    ஒருவராயினும் உளரோ......?!


    சமையல் இடையில் மனக்களைப்புப் போக்கும் இதுபோன்ற கவிதைகள்........!

    நெகிழ்ச்சி.

    த ம 1

    ReplyDelete
    Replies
    1. சமையல் இடையில் மனக்களைப்புப் போக்கும் இதுபோன்ற கவிதைகள்........!//

      அழகாகச் சொன்னீர்கள் சகோ.

      மகிழ்வான உடனடி வருகைக்கும், கருத்திற்கும், வாக்கிற்கும் மகிழ்ச்சி. நன்றி சகோ.

      Delete
  2. செவிக்குணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் என்பது இதுதானோ?

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி. நன்றி

      Delete
  3. மழை வர வாய்ப்பளிப்பவர்கள் குறைந்து வருகிறார்கள்!

    :))))

    ReplyDelete
  4. அருமை சகோ அருமையான மழைக்கு பொருத்தமான வரிகள் வாழ்த்துகள்
    தமிழ் மணம் ஐந்தருவி

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி. நன்றி

      Delete
  5. நல்லோர் சிலருக்காக இயற்கை தன் பங்கைச் செய்கிறது..எத்துணைக் காலமோ?
    நல்ல கவிதை சகோதரி

    ReplyDelete
  6. //நல்லோர் சிலர் நடுவிலே...
    நான்மறைகள் வாழ்கின்றன
    நல்மழை பொழிகிறது...!!!//

    உமையாள் காயத்ரி என்ற நல்லோர் நடுவிலே ........
    பதிவர்களாகிய நாங்கள் இன்று பதிவுலகில் வாழ்கின்றோம் !
    நல்ல பதிவுகள் மழையெனப் பொழிந்து வருகின்றன. :)

    சந்தோஷமாக உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  7. அக்காலத்தில்
    நாணயமாய் இருந்தார்கள்...
    இக்காலத்தில்
    நா நயமாய் இருக்க நினைக்கிறார்கள்

    ReplyDelete
  8. வணக்கம்
    அனைவரும் உணர்து படிக்கவேண்டிய கவிதை ...அருமையாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி த.ம 6
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி. நன்றி

      Delete
  9. அட நல்ல அழகாய் வந்திருக்கிறது கவிதை நடை சூப்பர்மா. இது போன்று தொடர வாழ்த்துக்கள். ..!

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி. நன்றி

      Delete
  10. வாழ இடமின்றி தவிப்பது உண்மை தான்...

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி. நன்றி

      Delete
  11. அருமையான வரிகள் சகோதரி! இப்போதெல்லாம் நல்லவர் குறைந்துவிட்டனர்....போலும் அதனால் தான் மழையும் அரிதாகி வருகின்றது...ஆம் மனிதன் செய்யும் அட்டகாசத்தினால்தான்...

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி. நன்றி

      Delete
  12. இங்கு ஒரு வாரமாக நல்ல மழை ! மழைக்கு ஏற்ற அருமையான கவிதை சகோ.

    ReplyDelete
  13. மணக்கும் சமையல் குறிப்புகள் போல உங்கள் கவிதையும் மணக்கிறது மல்லிகையாய்!

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி. நன்றி

      Delete
  14. பொழியும் மழையிலும்,தங்கள் கவிதை மழையிலும் ஆனந்தமாக நனைந்தேன்...

    வாழ்க வளமுடன்....

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி. நன்றி

      Delete
  15. தங்கள் கவி மழைப் போல்,
    நல்லோர் வாழ்வர், நன்றி.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி. நன்றி

      Delete
  16. நல்லோர் சிலர் நடுவிலே.......சரியாக என்னைக் கணித்து விட்டீர்கள் ,நன்றி :)

    ReplyDelete
    Replies
    1. ஆம் ஐயா உண்மைதானே....

      மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி. நன்றி

      Delete
  17. நான்மறை நாம் ஓதி
    நல்லோர் ஆவதற்கு
    பூந்தேன் பூங்கவிதை
    புனைந்திட்டாய் பூவரசி!


    உள்ளத்தை உருக்கும்! நல்ல சிந்தை!
    வெல்லும் "சாய்" அருளாலே வாழி!
    த ம 11
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி. நன்றி

      Delete