Sunday, 3 May 2015

புதினா மோர்



தேவையான பொருட்கள்

மோர் - 2 டம்ளர்
புதினா - சிறிது
மல்லி - 2  இனுக்கு
உப்பு - ருசிக்கு

தாளிக்க வேண்டியவை

எண்ணெய் - 1/2 தே.க
கடுகு - சிறிது
பெருங்காயம் - சிறிது
வரமிளகாய் - 1
பச்சை மிளகாய் - 1



மோரில் மல்லி, புதினா இலைகளை நறுக்கி சேர்க்கவும். 

உப்பு போடவும்.

தாளிக்கவும்.

கலக்கவும்.





சாதத்துடன் கலந்து மோர் சாதமாக சாப்பிட அருமையாக இருக்கும்....!!!

தாகத்திற்கு குடிக்க குளுமையாக இருக்கும்...!!!

மேலும் ருசிக்கு....2, 3 செட்டு எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளலாம்.



என்  சிநேகிதிகள் வித்தியாசமா நல்லா இருக்குன்னு விரும்பி சாப்பிட்டார்கள் + குடித்தார்கள்.


30 comments:

  1. அடிக்கும் வெயிலுக்கு இந்தக் குளுமை தினமும் தேவை தான்...

    நன்றி...

    ReplyDelete
  2. வெயிலுக்கு ஏற்ற பானம்.

    ReplyDelete
  3. I WANT MORE and MORE மோர் ! :)

    இங்கு திருச்சியில் வெயில் தாங்கவே முடியாத அளவுக்குக் கொளுத்தி வருகிறது. எனவே ஊத்தி ஊத்தி கொடுத்துக்கொண்டே இருங்கோ ..... ஒரு பெரிய அண்டா நிறைய வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. ஒரு பெரிய அண்டா நிறைய வேண்டும்.//

      1 என்ன சார் 2 கலக்கிடுவோம்...நன்றி

      Delete
  4. வெயிலுக்கு உகந்தது.. உடலுக்கு நல்லது!..

    ReplyDelete
  5. புதினாக் கீரை எனக்கும் பிடிக்குமே ..!

    ReplyDelete
    Replies
    1. அதன் வாசம் அருமையல்லவா...நன்றி சகோ..நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்களின் வருகை மகிழ்வளிக்கிறது

      Delete
  6. எனக்கு பிடித்தமானது தமிழ் மணம் 2

    ReplyDelete
    Replies
    1. அதன் வாசம் அருமையல்லவா...நன்றி சகோ

      Delete
  7. சிறந்த வழிகாட்டல்
    தொடருங்கள்

    ReplyDelete
  8. வணக்கம்
    உண்மையில் குடித்தால் சுவைதான் .... த.ம 3
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  9. கொளுத்தும் வெயிலுக்கு ஏற்றது. இக்காலத்திற்குத் தேவையான பகிர்வு.

    ReplyDelete
    Replies
    1. இப்போ நல்ல வெயில் அங்கு அல்லவா..நன்றி ஐயா

      Delete
  10. கோடைகேற்ற அருமையான ஆரோக்கிய பானம்!

    த ம 5

    ReplyDelete
  11. வெயில் இன்னமும் வரவில்லை. அதோடு என்னிடம் புதினா நல்லா வளர்ந்துவருகிறது. வெயில் வர செய்யக்காத்திருக்கேன். நல்ல குறிப்பு.நன்றி உமையாள்.

    ReplyDelete
    Replies
    1. ஊருல நல்ல வெயில்..

      இன்னும் இங்கு ஆரம்பிக்க வில்லை...

      ஆஹா...கைவசம் புதினா...வெயில் வரவும் செய்து பாருங்கள். நன்றி

      Delete
  12. இன்று அக்னி நட்சத்திரம் ஆரம்பம் ஆகி விட்டது. வெயிலின் தாக்கத்திற்கு உங்களுடைய புதினா மோர் குடிப்பதற்கு நல்ல சுவையாக இருக்கும்.

    எனது பதிவு மாவத்தல் ! வருகை தாருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. இன்று அக்னி நட்சத்திரம் ஆரம்பம் ஆகி விட்டது.//

      21 நாட்கள் கடுமைதான்...

      நன்றி சகோ...வந்து கருத்திட்டு இருக்கிறேன்

      Delete
  13. உங்க ப்ளாக் அப்டேட்ஸ் வரவேயில்லப்பா எனக்கு ..வெகேஷன் ஊருக்கு போயிருந்தீங்கன்னு நினைச்சேன் உங்க பின்னூட்டம் பார்த்துதான் வரேன்

    அருமையான ஹெல்தி மோர் ..இன்னிக்கே செய்றேன்

    ReplyDelete
    Replies
    1. நீங்க ரெம்ப பிஸி அதான் வரலைனு நினைத்தேன் சகோ...அப்படியா..? ஏன்னு தெரியவில்லையே...செய்து விட்டு சொல்லுங்கள் சகோ நன்றி

      Delete
  14. இனி, இந்த மோர்தான்!

    ReplyDelete
    Replies
    1. அருந்துங்கள் ஐயா நன்றி

      Delete
  15. என்னை மாதிரி நியாபக மறதி உள்ளவர்களுக்கு ஏற்ற ரெசிப்பி ..சுவையான பதிவு ...

    ReplyDelete
    Replies
    1. வாங்க வாங்க ராஜி...தங்கள் வரவிற்கும் கருத்திற்கும் நன்றி

      Delete
  16. வெயில்லுக்கு சூப்பர்! செய்வதுண்டு....தாங்கள் மிக அழகாக செய்முறை எல்லாம் மிகவும் பொறுமையாகவும் சொல்கின்றீர்கள்.

    ReplyDelete