Saturday, 2 May 2015

கொத்தமல்லி சூப்






தேவையான பொருட்கள்

கொத்தமல்லி - 1/2 கட்டு
தக்காளி - 1
ப.பருப்பு - 1 மே.க
மஞ்சள் தூள் - சிறிது
நெய் - 1/2 தே.க
மிளகு சீரகப் பொடி - 1/2 தே.க


தாளிக்க வேண்டியது


எண்ணெய் - 1/2 தே.க
சோம்பு - 1/2 தே.க
பிருஞ்சி இலை - 1


                                                     தாளிக்கவும்







தக்காளியை சேர்த்து வதக்கவும்.




கொத்தமல்லியை சேர்த்து வதக்கவும்


ப.பருப்பு, மஞ்சள் தூள், தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக விடவும்.

ஆறிய பின் மிக்ஸியில் அரைக்கவும்.








அரைத்ததில் வேண்டும் அளவு தண்ணீர் சேர்த்துக் கொண்டு, உப்பு + மிளகு சீரகப் பொடி, நெய் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்.





                              மணம், குணம் நிறைந்த மல்லி சூப்......அருந்துங்கள் 





படத்தில் இருக்கும் அளவு கூடுதலானது. ஆகையால் அளவான குறிப்பை போட்டு இருக்கிறேன்.



27 comments:

  1. ஸூப்பர் ஸூப் படங்களும்....
    தமிழ் மணம் 1

    ReplyDelete
    Replies
    1. முதலில் வந்தமைக்கு நன்றி சகோ வாக்கிற்கும்..

      Delete
  2. கொத்தமல்லி சூப் படங்களும் பதிவும் ருசியோ ருசியாக உள்ளன. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  3. மருத்துவ மணம் கமழும் மல்லி சூப்
    ஆரோக்கியத்தோடு ஆனந்தத்தை அள்ளித் தரும் எனர்ஜி!
    த ம
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  4. த ம 2
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. வாக்கிற்கு நன்றி சகோ

      Delete
  5. பதிவும் படங்களும் மிக அருமை சகோ.

    ReplyDelete
  6. இப்படி சுவைமிகுந்த பதிவுகளாக வெளியிட்டு ஆசையைத் தூண்டிவிடுகிறீர்கள். :))

    தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வீட்டில் செய்யச்சொல்லி சாப்பிட்டு மகிழுங்கள் சகோ

      Delete
  7. வணக்கம்
    செய்முறை விளக்கத்துடன் அசத்தல் அருமை... சொல்லிய பொருட்களில் ஒன்று குறைந்தாலும் சூப் நல்லாயிருக்குமா.
    த.ம3

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. சேர்மானங்கள் தான் முக்கியம் சகோ நன்றி

      Delete
  8. மணம், குணம் நிறைந்த மல்லி சூப்......
    அருந்துங்கள் என்கிறீர்கள்
    அருந்தினால் நோய்கள் குணமாகுமென
    நம்மாளுகளுக்குத் தெரியணுமே!

    ReplyDelete
  9. வார இறுதி மாலைகளில் செய்து பார்த்துடுவோம்! நாளையே முயற்சி செய்வோம்.

    ReplyDelete
    Replies
    1. முயற்சித்து விட்டீர்களா..? சகோ எப்படி இருந்தது..? நன்றி

      Delete
  10. கொத்தமல்லி ரசம் செய்முறை அருமை..
    செய்து விட வேண்டியதுதான்!..

    ReplyDelete
    Replies
    1. சூப்...செய்து விட்டு சொல்லுங்கள் ஐயா நன்றி

      Delete
  11. செய்முறை எளிமையாக இருக்கிறது. மணக்க மணக்க கொத்தமல்லி சூப் செய்து பார்த்திட வேண்டியதுதான்.

    த ம 5

    ReplyDelete
  12. சுடச் சுட இந்த சூப்பக் குடிச்சே ஆகணும் இது இலகுவான செய்முறை அதனால் சுவிஸ் வாங் மூலம் அனுப்ப வேண்டாம் நானே செய்து
    சாப்பிடுவேன் தோழி :)))))நன்றி மிக்க நன்றி பகிர்வுக்கு .

    ReplyDelete
    Replies
    1. ஆஹா...பார்சல் வேண்டாம் நானே செய்கிறேன்..என்று விட்டீர்கள் சகோ...உடம்பிற்கு பலமும் தெம்பு இந்த சூப் வகையறாக்கள் தரும். நன்றி

      Delete
  13. நாங்களும் செய்து பார்க்கிறோம்.... நன்றி....

    ReplyDelete
    Replies
    1. சகோதரியார் விரைவில் செய்து விடுவார்கள்...நன்றி சகோ

      Delete
  14. படிக்கவே சுவையாக உள்ளது!

    ReplyDelete
  15. சூப்பர் இங்க மணக்குதுப்பா.....செய்வதுண்டு சோம்பு சேர்க்காமல் .....சேர்த்தும் செய்து பார்த்துடுவோம்...

    ReplyDelete