தமிழ் நாட்டில் நீர் வளம் பெருகட்டும்
தமிழ் நாட்டில் விவசாயம் ஓங்கட்டும்
தஞ்சையில் சோறு பெருகட்டும்
தரணிக் கெல்லாம் உணவு படைக்கட்டும்
காவிரி பொங்கி கடக்கட்டும்
சிறு நதிகளின் ஊற்றுக் கண் திறக்கட்டும்
மலைமகளின் மர அலங்காரம் விரியட்டும்
மேக ராஜாவைத் தழுவி ஆனந்த மழை பொழியட்டும்
மக்கள் மனதில் நல்லெண்ணம் ஓங்கட்டும்
அரசியல்வாதிகள் ஆத்தாளை நினைத்து பணி செய்யட்டும்
தமிழும் தரணியும் ஆதித்தோன்றல்
தழைக்கும் தழைக்கும் கலிமுடியும் மட்டும்
வந்தோரை வாழவைப்பான் தமிழன் வாஞ்சையோடு
வஞ்சனைகள் செய்வோரை வீழ்த்திடுவான் தன் மானத்தோடு
இயற்கை முளைக்க வழிவிடுங்கள்
இன்பமாய் சந்ததி வாழ கருதிடுங்கள்.
தமிழ் நாடு செழிக்கும்
தமிழ்நாடு செழிக்கும்
தமிழ் நாடு செழிக்கும்
நீர்வளம் பெருகி இயற்கை செழித்து அனைவரும் இன்பமுடன் வாழவேண்டும். நல்லெண்ணங்கள் நன்மையை படைக்கும். நீரும் விவசாயமும் உயிரும் உடம்பும் போல....இரண்டும் நீக்க மறநிறைந்து வாழட்டும் பல்லாண்டு. வாழிய வாழியவே...!!!
படங்கள் உதவி கூகுள் நன்றி
அருமை இவையெல்லாம் நடந்தால் அழகு கவிதையைப்போல....
ReplyDeleteதமிழ் மணம் 1
மகிழ்வான முதல் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் அழகு என நினைத்த தங்களின் நல் நினைவிற்கும் மகிழ்ச்சி நன்றிகள் சகோ.
Deleteதங்கள் கவி நனவாகட்டும் சகோ, அழகிய பா, அருமையான புகைப்படம். நன்றி.
ReplyDeleteதங்கள் கவி நனவாகட்டும்..//
Deleteமகிழ்ச்சியுடன் வாழ்த்தியமைக்கு நன்றிகள் சகோ.
தமிழ் நாடு செழிக்கும், தமிழ் நாடு செழிக்கும், தமிழ் நாடு செழிக்கும் !!!
ReplyDeleteதமிழ்நாடு செழித்தே விட்டது ....... ...... தங்களின்
இந்தப்பசுமையான பட + பாடல் பதிவின் மூலம்.
வாழ்க !
தமிழ்நாடு செழித்தே விட்டது ....... ......//
Deleteநல்வாக்கிற்கு நன்றிகள் ஐயா.....மகிழ்வாய் உள்ளது இதை கேட்க....தமிழ்நாடு செழித்தே விட்டது தான்.
சரி செய்து விட்டேன் நன்றி ஐயா
ஹூம்...
ReplyDeleteஇனி இந்த
இனிய பசுமையான
படங்களைக்கூட
பதிவுகளிலும்
கனவுகளிலும்தான்
காண முடியும்போல
அரே ராம்
அரே அல்லா
அட தேவுடா
இதை எல்லாம் மாத்தி
ஒரே வார்த்தை
(ஆத்தான்னு சொண்ணா) ஓஹோன்னு
வாழலாம்.
மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றிகள்.
Deleteபசுமை எங்கெங்கும் தழைத்தோங்கட்டும்!..
ReplyDeleteவணக்கம் சகோதரி
ReplyDeleteதமிழ் நாடு செழிக்கப் பாடிய கவிதை அருமை. தங்கள் கவியில் தமிழ் நாடு செழிப்புற நானும் பிரார்த்திக்கிறேன். அழகிய படங்கள் அருமையான கவிதை இரண்டுக்கும் என் வாழ்த்துக்கள்.
என் கடமையின் நிமித்தம் நான் காணாமல் போனாலும், மனம் தங்கள் பதிவுகளை தவற விட்டமையை நினைத்தபடி வலையுலகை சுற்றி வருகிறது. அனைத்தையும் வாசித்து வருகிறேன். என்னுடைய தாமத வருகைக்கு மன்னிக்கவும்.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
என் கடமையின் நிமித்தம் நான் காணாமல் போனாலும், மனம் தங்கள் பதிவுகளை தவற விட்டமையை நினைத்தபடி வலையுலகை சுற்றி வருகிறது. அனைத்தையும் வாசித்து வருகிறேன்.//
Deleteசரி சகோ நானும் தாங்கள் வேலை காரணமாக சென்று இருப்பீர்கள் என நினைத்துக் கொண்டேன் மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றிகள்.
சிறக்கட்டும்...
ReplyDeleteமகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றிகள்.
Deleteஅயல் நாட்டில் வாழ்ந்தாலும் தாய்த் தமிழகம் செழிக்க நினைக்கும் உங்கள் பதிவு பாராட்டத்தக்கதே. வாழ்த்துக்கள்
ReplyDeleteமகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றிகள்.
Deleteகனவுக் கவிதை கைகூட வேண்டும்!
ReplyDeleteமகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றிகள்.
Deleteதங்களின் கவிதையில் உள்ள ஆசைகள் எல்லாம் நிறைவேறட்டும். தமிழ்நாடு செழிக்கட்டும்!
ReplyDeleteத ம 4
மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றிகள்.
Delete"இயற்கை முளைக்க வழிவிடுங்கள்
ReplyDeleteஇன்பமாய் சந்ததி வாழக் கருதிடுங்கள்." என்ற
அடிகள் கூறும் உண்மையைத் தான்
நாள்தோறும்
நம்மாளுங்க பின்பற்ற வேண்டிய
உண்மை என்பேன்!
இப்படியெல்லாம் நடந்தால் எத்தனை அழகாயிருக்கும்!
ReplyDeleteகவிதையும் கற்பனையும் அழகு!
நீண்ட நாட்களுக்கு பிறகு வந்தமைக்கு..நன்றி
Deleteமகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி
அமைதி நிலவும் அழகுக் கவியில்
ReplyDeleteஆடித்தான் போகிறது மனம்
அருமை சகோ சிந்திப்பார்களா பணமுதலைகள்
தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நன்றிகள்.
ReplyDelete