Tuesday 26 May 2015

தேசப் பற்று ஆகிறதோ.?/கவிதை




சொந்த மண்ணை தொடுகையிலே
சுவாசம் மூக்கில் நுழைகையிலே
எண்ணம் சிறகு அடிக்கையிலே
ஏதோ செய்யுது மனதினிலே...!!!

உறங்கிய உற்சாகம் உசும்பிடவே
உள்ளம் கொள்ளை போனதுவே
தன்னுயிர் உள்ளே சிலிர்க்கையிலே
தாயின் நினைப்பு அணைத்ததுவே...!!!

பலமாய் ஒன்று உருண்டிடவே
பார்வையில் குளிர்ச்சி மின்னிடவே
தாய்மடி சுகம் கண்டதினால்
சிறார்கள் போல மாறினோமே...!!!

எட்டுத்திக்கும் பறந்தாலும்
எம் தேசம் போல் வருமா.?
மணலின் நரம்பு எம்முடம்பில்
தண்ணீர் ரத்தம் பாய்கிறதே...!!!

பாசம் கொண்ட காரணத்தால்
தேசப் பற்று ஆகிறதோ.?
யாரும் சொல்லிக் கொடுக்கவில்லை
யாதாகி நாமும் கரைந்துவிட்டோம்.

தொலைவின் போது அதனருமை
தெள்ளத் தெளிவாய் புரிகிறது
இயல்பாய் மனது  இசைக்கிறது
வந்தே மாதரம் என்கிறது

வந்தே மாதரம்
வந்தே மாதரம்
வந்தே மாதரம்





படம் கூகுள் நன்றி




35 comments:

  1. தேசப்பற்றுதலையும், தாயின் பாசத்தையும் இணைத்தது அருமை சகோ
    தமிழ் மணம் 1

    ReplyDelete
  2. மகிழ்வாய் முதலாய் பறந்தோடி வந்தமைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மகிழ்ச்சி சகோ. நன்றிகள்.

    ReplyDelete
  3. //தாய்மடி சுகம் கண்டதினால் சிறார்கள் போல மாறினோமே...!!!
    எட்டுத்திக்கும் பறந்தாலும் எம் தேசம் போல் வருமா.?//

    தாயும் தாய் நாடும் பற்றிய தங்கள் ஆக்கம் அருமை.

    வந்தே மாதரம்
    வந்தே மாதரம்
    வந்தே மாதரம்

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி, நன்றிகள். ஐயா

      Delete
  4. வெளிநாட்டில் இருந்து தாய் நாடு திரும்பும் ஒருவனின் மன உணர்வை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது கவிதை.
    த ம 2

    ReplyDelete
    Replies
    1. உண்மை...

      மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி, நன்றிகள்.

      Delete
  5. தேசப் பற்றை சொல்லும்
    தேன் கவிதை வெல்லும்
    த ம 3
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி, நன்றிகள்.

      Delete
  6. வெளியூர் சென்று விட்டு நம்மூர் வந்தாலே இந்த உணர்வு இருக்கும். வெளிநாடு சென்று விட்டு நம்நாடு வந்தால் கேட்கவா வேண்டும்? நன்றாகச் சொல்லி இருக்கிறீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி, நன்றிகள்.

      Delete
  7. வரிகளில் உள்ளம் கொள்ளை போனது...

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி, நன்றிகள்.

      Delete
  8. ஆஹா ஆஹா !!

    வாய்விட்டுப் படித்தேன்.

    மிக அருமை.

    தொடருங்கள்.

    த ம 6

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி, நன்றிகள்.

      Delete
  9. தொலைவின் போது அதனருமை
    தெள்ளத் தெளிவாய் புரிகிறது
    இயல்பாய் மனது இசைக்கிறது
    வந்தே மாதரம் என்கிறது!..

    அருமை.. அருமை!..

    வாழ்க நலம்!..

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி, நன்றிகள்.

      Delete
  10. எட்டுத்திக்கும் பறந்தாலும்
    எம் தேசம் போல் வருமா.?
    உண்மை உண்மை தோழி உணர்வு பூர்வமாக வடித்துள்ளீர்கள். அருமை அருமை வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
  11. தாய் மடியில் படுக்கும் உணர்வு போல தாய் மண்ணை மிதிக்கும் போது....வருவது இயற்கை தானே.

    ReplyDelete
    Replies
    1. ஆம். ஆம்...

      மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி .நன்றி

      Delete
  12. வணக்கம்
    தொலை தூரம் நாம் இருந்தாலும் எம்மண்னை மறக்க முடியாது.. மிக அழகாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: மனிதா மனிதத்தை இழந்தாயடா..:

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி .நன்றி

      Delete
  13. Replies
    1. வாக்கிற்கு நன்றி சகோ

      தங்கள் பக்கம் வந்து கருத்து இட்டுவந்தேன் சகோ.

      Delete
  14. உள்ளம் கொள்ளைப் போகுதே, ஆம் உண்மை தான் உள்ளம் கொள்ளைத் தான் போனது, தங்கள் கவியைப் படித்து. அருமை. வாழ்த்துக்கள். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி .நன்றி

      Delete
  15. உள்ளத்து உணர்வுகளை தெள்ளிய தமிழில் வடித்தமை அழகு. மனந்தொட்ட கவிதைக்குப் பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி .நன்றி

      Delete
  16. எனக்கும் இதே உணர்வுதான் என்றாலும் ,தாய் மண்ணே வணக்கம்னு பாடத்தோன்றும் :)

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி .நன்றி

      Delete
  17. பல நாடுகளுக்கு, நான் சென்றிருந்தாலும் ,நம் தாய்மண்ணே சுகம் என்பதே நான் கொண்ட உணர்வு! கவிதை நன்று!

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி .நன்றி

      Delete
  18. தாய்மண் நினைவில் எழுதிய வரிகள் அருமை சகோ !

    தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
    தம கூடுதல் ஒன்று

    ReplyDelete
  19. நம் மண்ணில் நாம் இருக்கும்போது கிடைக்கும் சுகமே அலாதி. அதனை அனுபவிக்கும்போதே உணரமுடியும். சூழல் காரணமாக பிழைப்பு தேடிச் சென்றவர்கள் தாய் மண்ணின்மீது வைத்திருக்கும் அன்பானது அளவிடற்கரியது என்பதையும் நினைவில் கொள்வோம்.

    ReplyDelete
  20. அழகா , எளிமையா இருக்கு பாட்டு!! மாணவர்களுக்கு வகுப்பில் கூட சொல்லிதரலாம் போல:)

    ReplyDelete
  21. எட்டுத்திக்கும் பறந்தாலும்
    எம் தேசம் போல் வருமா.?
    எம் ஊரைப் போல வருமா?

    சிறந்த பாவரிகள்
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    ReplyDelete