Showing posts with label பக்தி பாடல். Show all posts
Showing posts with label பக்தி பாடல். Show all posts

Thursday, 7 August 2014

கிருஷ்ண கானம்

பாடல் - 16




                 நீலகண்ணனா இல்லை நீ நீலவண்ணனா
                 குண்டுகண்ணனா இல்லை குசும்பு மன்னனா

               புல்லாங்குழல் இசை கேட்கவேண்டும்
                 புவியைமறந்து  நான் ரசிக்கவேண்டும்
                 தோழியாக உன்னோடு ஆடவேண்டும் - நல்
                 தோழமையோடு உன்தோள் சாயவேண்டும்      நீலகண்ணணா

Sunday, 27 July 2014

கிருஷ்ண கானம்

பாமாலை - 15



              கண்ணன் வரும் பொழுது தெரியாது
                களவாட வெண்ணெய் உறிமீது
                விடிகால வேளையில் செய்து வைத்தேன்
                வீதியெல்லாம் கோலம் போட்டு வைத்தேன்
                                                           (கண்ணன்)

Thursday, 5 June 2014

சாய் பாமாலை - Sai Pamalai - 8

பாடல்



                                   எழுது கோலால் நான் வரைந்த சாய் பாபா படம்



கும்மிப் பாடல் மெட்டு

1     சாயின் நாமம் சொல்லுங்கடி - அவரை
       சாய்சாய் என்றே சொல்லுங்கடி
       சீரடி மட்டும் இல்லை அவர் - உன்
       சிந்தைக்குள்ளும் உள்ளாரடி                                   ( சாயின் நாமம் )