Thursday, 5 June 2014

சாய் பாமாலை - Sai Pamalai - 8

பாடல்



                                   எழுது கோலால் நான் வரைந்த சாய் பாபா படம்



கும்மிப் பாடல் மெட்டு

1     சாயின் நாமம் சொல்லுங்கடி - அவரை
       சாய்சாய் என்றே சொல்லுங்கடி
       சீரடி மட்டும் இல்லை அவர் - உன்
       சிந்தைக்குள்ளும் உள்ளாரடி                                   ( சாயின் நாமம் )   


2     குதிரையின் சேனத்தை தோளில்போட்டு - சாந்படீல்
       கானகம் எல்லாம் அழைந்தாரடி
       பக்கத்துச் சோலைக்குள் சென்றுபார் - என்று
      சாய்நாதன் சொன்னாரடி                                            ( சாயின் நாமம் )

3    அரவையில் கோதுமை மாவரைத்து - ஊரில்
      எல்லைக் கோடாய் இட்டானடி
      கதிகலங்கி ஓடிற்று காலராவும் - அவன்
      காத்தான் கிராம மக்களைத் தான்                         (சாயின் நாமம் )    

4     நீரில் தீபம் எறியவிட்டார் - அவர்
       எண்ணெய் வியாபாரிக்கு புத்தி சொன்னார்
      ரோஹிலா துர்புத்தி பறந்ததுவே - சாயி
      குர்ரானை கத்தி படிக்கச் சொல்லி                        ( சாயின் நாமம் )

5    கத்தியால் ஆட்டை வெட்டப்போனார் - காகா
      சாயின் வார்த்தைக்கு கீழ்படிந்து
      குருவின் வார்த்தைக்கு மறுப்பேது - என்று
      உணர்த்தினார் சாயி பக்தருக்கு                             ( சாயின் நாமம்)

6    முன்பின் ஜென்மம் அவர் காப்பார் - நீ
      சரண் அடைந்தால் போதுமடி
      லீலைகள் எத்தனை நான் சொல்வேன் - அது
      நீண்டு கொண்டே போகுமடி                                   ( சாயின் நாமம் )



 ஆர்.உமையாள் காயத்ரி.



5 comments:

  1. பாடம் அருமை...

    கைவண்ணம் அற்புதம்... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. வாவ். மிக அழகாக வரைந்திருக்கிறீங்க. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. வணக்கம் சகோதரி
    பிரியசகி சகோதரியின் வலைப்பக்கத்தில் உங்கள் கருத்துரை பார்த்து உங்கள் தளம் அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி. படமும் பாடலும் மிக அருமை. படம் வரைந்து பாடலும் எழுதுவது என்றால் தனித்திறமை தான். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி பாண்டியன் அவர்களே.

      Delete