Thursday, 5 June 2014

செட்டி நாட்டு இளங்குழம்பு


இளங்குழம்பு பெயரே நல்ல இருக்கு இல்ல. செய்வது எளிதானது. இலகுவாக

ஜீரணம் ஆகிவிடும்





எப்போதும் செய்றதுல இருந்து வித்தியாசமாகவும், சுலபமாகவும் செய்து

சாப்பிடலாம். இன்னைக்கு டயர்டா... செய் இளங்குழம்பை...


இட்லிக்கு  தொட்டுக்கலாம். ஆனா நிறையப் பேருக்கு, தோசைக்கு ஊற்றி சாப்பிடத்தான் பிடிக்கும். இல்லையா பின்ன, எண்ணெய் விட்டு மணக்கும் தோசைக்கு சும்மா எப்படி இருக்கும் தெரியுமா...?

எப்படித் தெரியும்னு மனசுக்குள்ள சொல்லுறீங்க  இல்ல... அப்படின்னா உடனே செய்து பார்த்து சாப்பிடுங்க. அதுக்கு நான் கேரண்டி.....!

இதை சாதத்திற்கும் ஊற்றி சாப்பிடலாம். பத்திய சாப்பாடு மாதிரி சாப்பிடனும் அப்படின்னு நினைக்கிற அன்னைக்கு வற்றல் or பருப்பு துவையல் செய்து சாப்பிடலாம்.

நிறைய பேருக்கு தெரிந்து இருக்கும். இது தெரியாதவங்களுக்கு ok வா...

ஆனா இதை நீங்களும் செய்து பாருங்க ருசிக்கும். இது சிலருக்கு பிடிக்காது ஆனா  இப்படி செய்துசாப்பிட்டு பாருங்க ...!  அப்புறமா....?

தேவையான பொருட்கள்

வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சைமிளகாய் - 2
(படத்துல ப.மிளகாய் பெரியது)
புளி - சிறிய எலுமிச்சை
சாம்பார்ப் பொடி - 1/8
மஞ்சள் தூள் - சிறிது
உப்பு
கடுகு
பெருங்காயம்
கருவேற்பிலை   

இடித்துக் கொள்ள தேவையானது

வரமிளகாய் - 1
சின்ன வெங்காயம்- 5
(தனித்தனியாக)
சீரகம் 1 தே.க





சின்ன வெங்காயத்தை சிறிதாக நறுக்கிக் கொண்டு, வர மிளகாயை கிள்ளியும்  சிறு உரலில் போட்டு இருக்கிறேன்.

இடித்துக் கொள்ள வேண்டும்











புளியைக் கரைத்துக் கொண்டுவிட்டு



இடித்ததை அதில் போட்டு நன்கு கையால்  பிசைய வேண்டும்.









                                 
                                            தாளிக்கவும்.







வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்.




                  தக்காளி சேர்த்து வதக்கவும்.


புளித்தண்ணீர் விட்டு,சிறிது சாம்பார்ப் பொடி,மஞ்சள் தூள் போடவும். உப்பு சேர்க்கவும்.



10 நிமிடங்கள் கொதிக்க வேண்டும்.
அப்போது தான் வெங்காயத்தின் பச்சை வாசனை போகும்.







இப்போது தயார் ...... நானும் தயாராக இருக்கிறேன் சாப்பிடத்தான்....வரட்டா...!




ஆர்.உமையாள் காயத்ரி.


5 comments:

  1. தோசை&குழம்பு பார்க்க பசியைக் கிளப்புகின்றது. அழகான உரல்.
    ஈசியாக இருக்கு. கண்டிப்பா செய்கிறேன் உமையாள். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. கல்யாண வீடுகளில் சாப்பிட்டது. மீண்டும் ஒரு முறை வீட்டில் செய்து சாப்பிட வேண்டும். பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  3. புதிதாக இருக்கிறது... நன்றி...

    செய்து சுவைக்கிறோம்...

    ReplyDelete
  4. வணக்கம் !
    அருமையான சமையற் குறிப்புகள் அடங்கிய இத் தளத்திற்கு நான்
    முதன்முறையாக வந்துள்ளேன் (வலைச்சர அறிமுகம் மூலம் )
    உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் தோழி அடுத்த தடவை
    வரும்போது நிட்சயமாக எங்களுக்கும் நல்விருந்து அளித்துக்
    கௌரவிப்பீர்கள் என்று நம்பி உங்களையும் பின் தொடர்கின்றேன் :))
    வாழ்த்துக்கள் தோழி என்றும் நட்பில் இணைந்திருப்போம் .

    ReplyDelete
  5. எனக்கு பிடித்த இளங்குழம்பு .தேவகோட்டை அம்மாவீட்டில் மாடியில் குடி இருந்தேன் அவரிகளிடமிருந்து செட்டி நாட்டு சமையல் கற்றுக் கொண்டு இருக்கிறேன்.

    ReplyDelete