Tuesday, 24 June 2014

மாவடு


" மா ஊட்டாத சோற்றை மாங்காய் ஊட்டும்"

மாவடு எல்லோருக்கும் பிடித்தமான ஒன்று. காயும் சரி, அதன் நீரும் சரி மணமும் சுவையும் அபாரமானது.

கட்டித் தயிரும் ,மாவடுவும் சரியான காம்பினேஷன்.



எகிப்தில் மாவடு....ஆச்சரியம் இல்லை....! எங்களுக்கு மட்டும் அல்ல....இதைப் படிக்கும் உங்களுக்கும் தான் இல்லையா பின்ன...?

இங்கு மாமரங்கள் உண்டு. ஆனால் நம் நாட்டு பழங்கள் போல் சுவை இருக்காது. நமக்கு அங்கேயே சாப்பிட்டு நாக்கு பழக்கம் ஆகிட்டதில்லையா...? அது சும்மா இருக்குமா...?  ஒப்பிட்டு பார்க்கும்.

நாங்கள் சில பேர் மாங்காய், மாவடு, மாம்பழம் பற்றி பேசிக் கொண்டு இருந்தோம். முதலில் இங்கு இருந்த ஒரு தம்பதியினர் இந்தியா சென்று விட்டார்கள். போன வருஷம்  அவர்களுடன் நாங்களும் மற்ற இருவரும் வர பக்கத்து ஊருக்கு சென்றிருந்தோம். அங்கு, எகிப்தியர் ஒருவர் வீட்டுக்குச் சென்று விட்டு வேறு இடத்திற்கு சென்றோம். அந்த எகிப்தியர் வீட்டை சுற்றி அவரின் மாந்தோப்பு இருப்பதை அப்போது தான் பார்த்தோம். அது ஒரு கிராமம்.

ஆஹா....மாமரம் இருக்கே....சீஸன் அப்போ வடு கிடைத்தால் நன்றாக இருக்கும் என பேசிக்கொண்டோம். அதற்கு அந்த தம்பதியினர்  சீஸன் அப்போ வாங்கிக்கலாம் அப்படின்னாங்க.

அவர்களை நினைத்து பேசிக்கொண்டோம். மற்றொரு தோழி முயற்சி செய்து வாங்கிக் கொடுத்தார்கள். அந்த வடுவில் போட்ட ஊறுகாய் தான் இது.


வடுவுக்கே இவ்வளவு கதையா...?  இனி ஊறுகாய்கும் ஒரு கதை சொல்லிடாதேம்மா... உங்க மயிண்டு வாய்ஸ் கேட்டுடுச்சு. சரி....சரி... பதராதீங்க... ஸ்ரெயிட்டா போயிடலாம்.

தேவையான் பொருட்கள்

மாவடு  -   1 1/4 கிலோ
விளக்கெண்ணெய் &
நல்லெண்ணெய்    -  சிறிது
கடுகுத்தூள் - 1 மே.க
மஞ்சள் தூள் - 1 தே.க
மிளகாய்ப் பொடி - 3 மே.க
தனி மிளகாய்ப் பொடி - 1. தே,க
பெருங்காயம் - சிறிது
உப்பு - தேவையான அளவு



வடுவை நீரில் சுத்தம் செய்து விட்டு துணியினால் நன்கு துடைத்துக் கொள்ளவும். பின் சற்று உலரவுடவும்.






எண்ணெய் விட்டு பிசரவும்.











                         
                                            உப்பு போடவும்.






                                                                                       



                 
           
                     பெருங்காயம் சேர்க்கவும்.      




                             கடுகுத்தூள் போடவும்.




மிளகாயை மிக்ஸியில் போட்டு அரைத்த பொடி இது.இதை சேர்க்கவும்.









                             
                            மஞ்சள் தூள் போடவும்.


.



   
       தனி மிளகாய்ப் பொடி சேர்க்கவும்.









நன்கு குலுக்கி விடவும்.பின் துணி
கொண்டு மூடி பாத்திரத்தின் கழுத்துப் பகுதியில் கயிறு கொண்டு கட்டவும்.
இதை வேடு கட்டுதல் என்பர்.





24 மணி நேரம் விட்டு நன்கு குலுக்கவும். கை படக்கூடாது. அப்புறம் 4 நாட்களுக்கு காலை, மாலை என 2 முறை குலுக்கி விடவும். மாவடுவில் இருந்து நீர் பிரிந்து கொஞ்சம், கொஞ்சமாக நீர் வரும். 5 வது நாளில் பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளவும். குளிர்சாதனப் பொட்டியில் வைப்பது நலம். உப்பு குறைவாக இருந்தால் கெட்டு விடும். பார்த்துக் கொள்க.







இது மூன்றாவது நாளில் எடுத்த படம்.





ஆர்.உமையாள் காயத்ரி.


18 comments:

  1. வடுமாங்காய் ஊறுதுங்கோஓஓ அந்த பாடல்தான் ஞாபகம் வருகிறது. இங்கு கிடைப்பது.கஷ்டம் சகோதரி. ஊருக்கு போய்தான் செய்து பார்க்கனும். படம் பார்க்க
    அப்படியே நாவூறுது. அப்படியே அனுப்பி விடுங்களேன். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. அனுப்பி விட்டால் போச்சு...நன்றி.

      Delete
  2. வணக்கம் சகோதரி!

    வரும்போதே வடுமாங்காய் ஊறுகாய்... ஸ்..ஸ்ஸ்ஸ்.. :)

    அருமை! எல்லாம் ஊரில் மட்டுமே சாத்தியம் எனக்கு!

    இளையநிலாவில் உங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டேன். ,
    மனம் குளிர்ந்தேன்!
    இனிய நன்றியுடன் வாழ்த்துக்களும் சகோதரி!

    என் வலைப்பூவின் 100 வது ஃபோலோவர் நீங்கள்...:)
    மகிழ்ச்சிக்கு அளவே இல்லை இன்றெனக்கு!...

    நன்றி! நன்றி! மிக நன்றி!

    ReplyDelete
    Replies
    1. //என் வலைப்பூவின் 100 வது ஃபோலோவர் நீங்கள்...:)
      மகிழ்ச்சிக்கு அளவே இல்லை இன்றெனக்கு!... //

      ஓ அப்படியா..... எனக்கும் மிக்க மகிழ்ச்சி ....!!! தங்கள் வருகைக்கு நன்றி.

      Delete
  3. அப்படியே எங்க வீட்டிற்கும் அனுப்பிடுங்க......எங்க நாட்டுல கிடைக்கும் என்றாலும் பாசத்தோட அனுப்பி வைச்சா ரொம்ப சுவையாய் இரூக்கும்....( மைண்ட் வாய்ஸ் இலவசமாக கிடைக்கும் என்றால் பாராட்டதான் செய்யனும்)

    ReplyDelete
  4. அனுப்பி விட்டால் போச்சு...நன்றி.

    ReplyDelete
  5. போன வாரம் தான் இந்திய கடையில போய் வடுமாங்காய் ஊறுகாய் வாங்கி வந்தோம். நீங்கள் இப்படி ஊறுகாய் போட்டு எல்லோருக்கும் அனுப்புவீர்கள் என்று தெரிந்திருந்தால், வாங்கியிருக்க மாட்டோம்.

    ReplyDelete
  6. அடடா....தெரியாம போச்சே சேதி...என நினைக்காமல்....உண்டு மகிழுங்கள் சகோதரரே...!

    ReplyDelete
  7. வணக்கம்
    சகோதரி..

    மாங்காய்க்கு நல்ல விளக்கம் கொடுத்து எப்படி ஊறுகாய் செய்வது என்ற முறையை மிக அருமையாக செய்முறை விளக்கத்துடன் பகிர்ந்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  8. தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி சகோதரரே.

    ReplyDelete
  9. வணக்கம்


    இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்

    அறிமுகம் செய்தவர்-காவியகவி


    பார்வையிடமுகவரி-வலைச்சரம்


    அறிமுகம் செய்த திகதி-25.07.2014

    -நன்றி-

    -அன்புடன்-

    -ரூபன்-

    ReplyDelete
  10. உமையாள்,

    நீங்க கொடுத்து வைத்தவர்தான். பின்னே, இவ்வளவு மாம்பிஞ்சுகளைப் பார்க்கும்போது, அதுவும் வெளிநாட்டில் ? எனக்கு மாவடுகூட வேண்டாம், அந்த மாம்பிஞ்சுகளை மட்டும் அனுப்பிவிடுங்க, வெறுமனே தின்னது போக மீதி இருந்தால் பார்க்கலாம்.

    மாவடு நாக்கில் எச்சில் ஊற வைக்கிறது.

    ReplyDelete
  11. பழைய பதிவா? டிடி கமெண்ட் பார்க்கும் வரை தேதி பார்க்கவில்லை நான்! மாவடு ஜோர்!

    ReplyDelete
  12. முழுவதும் கார பொடியை உபயோகித்து போடுவது எப்படி என்றுகூறினால் நன்று.ஒரு டம்ளர்அளவு கூறினால் பயனுள்ளதாக இருக்கும்.நன்றி

    ReplyDelete
    Replies
    1. மாவடுக்கு கேட்கிறீர்களா...?

      //முழுவதும் கார பொடியை உபயோகித்து போடுவது //

      கடுகு இவற்றை தவிர்த்து மிளகாய் மட்டும் உபயோகித்தா? சற்று விளக்கினால் சொல்ல எளிதாக இருக்கும் சகோ...
      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி நன்றி

      Delete