Wednesday 18 June 2014

தக்காளி புலவ்






தேவையான பொருட்கள்

அரிசி - 1 கோப்பை
வெங்காயம் - 1
தக்காளி - 3 ( நடு அளவு)
பச்சை மிளகாய் - 2 or 3
சோம்பு - 1 தே.க
உப்பு - ருசிக்கு


தக்காளி, சோம்பு,மிளகாய்( நான் இங்கு பழமிளகாய் போட்டு இருக்கிறேன்)






இவற்றை அரைத்துக் கொண்டு வடிகட்டிக்           கொள்ளவும்





தாளிக்க வேண்டியவை
நெய் - 1.மே.க
எண்ணெய் - 1 மே.க
பட்டை - 1
ஏலம் - 1
 இலை - 1
கிராம்பு - 2
                                            தாளிக்கவும்.




வெங்காயம் சேர்த்து வதக்கவும்.







அரிசியை கழுவி முன்பே 10 நிமிடங்கள் ஊற விட்டு பின் சேர்க்கவும். சற்று வறுக்கவும்.







 தக்காளி சாற்றுடன் தண்ணீர் சேர்த்து (2 கோப்பை)   விடவும்









உப்பு போடவும்.









இதே தயார் நிலையில் தக்காளி புலவ்.சற்று ஆறின பின்பு பூப்போல் கிளறினால் உடையாமல் சாதம் உதிராக வரும்.





                                                ஜோரான தக்காளி புலவ் ...!!!

தக்காளியை குழந்தைகள் தேடி தேடி எடுத்து வைத்து விட்டு சாப்பிடாமல் அப்படியே சாப்பிடலாம். பெரியவர்கள் கூட அப்படித்தான் செய்வோம் இல்லையா...?



ஆர்.உமையாள் காயத்ரி.



3 comments:

  1. இப்படியான குறிப்புகள் வீகெண்ட் ல தான் செய்யமுடியும். நல்ல கலராக இருக்கு. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. ஆஹா, தக்காளி புலாவ் ரொம்ப கலர் புல்லாக தெரியுது. நான் தக்காளி சாதம் தான் சாப்பிட்டு இருக்கேன்.
    இதையும் முயற்சி செய்து பார்க்க வேண்டும் (சாப்பிட வேண்டும் என்று தான் சொன்னேன், செய்து பார்க்க வேண்டும் என்று சொல்லவில்லை!!). அதனால் அந்த புலாவ் உள்ள பாத்திரத்தை பார்சல் அனுப்பிவிடுங்கள். கூடவே அந்த சிகப்பு கலர்ல இருக்கிற துணியையும் சேர்த்து.......

    ReplyDelete
    Replies
    1. (சாப்பிட வேண்டும் என்று தான் சொன்னேன், செய்து பார்க்க வேண்டும் என்று சொல்லவில்லை!!).உஷாராக .....உள்ளீர்கள்.

      நன்றி.

      Delete