Sunday, 22 June 2014

சாப்பிட தயார்...!!!

1 தடவை செய்தால்............ 10 தடவை  செய்த மாதிரி...!!!   





தினமும் சமையல் செய்து கொண்டு இருப்பதால், சில சமயங்களில் இப்போ யாராவது ஏதாவது கொடுத்தால் நல்லா இருக்குமேன்னு தோனும் இல்லையா...?  யார் கொடுப்பா...? எல்லோருக்கும் அப்படி இருக்கும் இல்ல...!


ஜீம் பூம் பா.... அப்படின்ன உடனே நாம நினைத்தது வந்து விட்டால் ...... !
ஆஹா...ஆஹா....நினைக்கும் போதே நல்லாத்தான் இருக்கு... நடக்கிற கதையைச் சொல்லு...அப்படிங்குறீங்க..... ஹும்....

எனக்கும் ஒரு நாள் அப்படித்தான் இருந்தது...என்னடா இது..என்ன பண்ணுறதுன்னு ..... என்ன உனக்குமா...? நீ தான் சமையல் குறிப்பா...போட்டு எங்களை சில சமயம் கடுப்பேத்துற....( ஹா...ஹா...ஹா....)  சாப்பிடவும் ஆசையா இருக்கு....பண்ணவும் கஷ்டமா ...இருக்கு தெரியுமா உனக்கு...?

சரி சரி...விடுங்க... 1 தடவை செய்தால்............ 10 தடவை  செய்த மாதிரி...!!!              (அவரவர் செய்யும் அளவைப் பொருத்து )  

தேசை,இட்லி மாவு இருந்தால் ... பரவாயில்லை டக்ன்னு பண்ணிடலாம்...  இந்த தொட்டுக்க மாத்திரம் செய்யனும் இல்ல.  இங்கயோ...நினைத்தால் கூட வாங்கி சாப்பிட முடியாது. நாம தான் செய்து ஆகனும். இந்த அசைவம் சாப்பிடாததால ..... ! என்ன பண்ணுறது...எனக்கு எங்க அம்மா சென்னது தான் ஞாபகம் வந்தது.... "அழுதாலும் பிள்ளை அவள் தானே பெற வேண்டும்" 
சரி உளுத்தம் பருப்பு சட்னி பண்ணலாம் அப்படின்னு முடிவு பண்ணிட்டு....

அப்போதுதான் யோசனை வந்தது ... இதை பொடியா பண்ணி விட்டால் உடனடி சட்னியா தேவைப்படும் போது உபயோகப் படுத்தலாம் இல்லையா...?ன்னு. சரி ட்ரை பண்ணி பார்க்கலாம்னு களத்துல குதித்தேன்....!

சும்மா சொல்லக் கூடாது. நான் நால்லாவே பண்ணி இருக்கேன். என் தோள்களை தட்டிக் கொண்டேன். ஆமா...வேறு யார் தட்டுவா....நீங்க என்னமோ சொல்லுறீங்க எனக்கு கேட்கவில்லையப்பா...!  


வாங்க வாங்க செய்முறைக்கு போவோம்.

தேவையான பொருட்கள்

உளுந்து - 1 கோப்பை
மிளகாய் - 4
புளி - சிறு நெல்லி அளவு
கருவேப்பிலை - சிறிது
உப்பு - ருசிக்கு



எல்லாவற்றையும் தனித்தனியே வறுத்துக் கொள்ளவும்.


உப்பு போட்டு மிக்ஸியில் கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும்.
சூடு ஆறின பின்பாக காற்று புகாத பாட்டிலில் வைத்துக் கொள்ளவும்.

தாளிக்க:

எண்ணெய் - 1/2 தே.க
கடுகு - 1/4 தே.க
பெருங்காயம் - சிறிது




தேவையான போது பொடியை எடுத்துக் கொண்டு தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்க. 5 நிமிடத்தில் ஊறிவிடும். பின்பு கடுகு,பெருங்காயம் தாளித்து போடவும்.









                                                              சாப்பிட தயார்...!!!
அந்தே.....!!!! 

என்னங்க.... பண்ணிப் பாருங்கள்.அப்புறம் உங்க வீட்டுலயும் சட்னி தயாரா... இருக்கும்.

அடிக்கடி இதையே உங்கள் வீட்டில் செய்தால் நான் பொறுப்பல்ல....ஹி..ஹி..!!




ஆர்.உமையாள் காயத்ரி.





8 comments:

  1. Replies
    1. ஆமாம். எளிதாக செய்து விடலாம் தான்.

      Delete
  2. படிக்கும்போதே செய்து களிக்க ஆசையாக இருக்கிறது என்ன ? செய்வது இந்தியா போனால்தான்....

    ReplyDelete
    Replies
    1. இந்தியா போகும் போது பொடியை எடுத்துக் கொண்டு வந்து விடுங்கள்.

      Delete
  3. ஆஹா... நல்லாத்தான் இருக்கு - எழுத்து நடையும்...

    பாராட்டுக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் தொடர் வருகைக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி சகோதரரே...

      Delete
  4. ஈசி&சிம்பிள் சட்னி. மாறுதலாகவும் இருக்கும்.
    சகோ சொன்னமாதிரி எழுத்து நடை நன்றாக இருக்கு.நன்றி.

    ReplyDelete